5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chapati Side Effects: தினந்தோறும் சப்பாத்தி சாப்பிடுகிறீர்களா? இந்த பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது!

Health Tips: சப்பாத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் பலர் நம்புகின்றனர். இது ஒருபுறம் என்றாலும், ஒரு சில உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, எந்தெந்த உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் சப்பாத்தி சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Chapati Side Effects: தினந்தோறும் சப்பாத்தி சாப்பிடுகிறீர்களா? இந்த பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது!
சப்பாத்தி (Image: Freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 24 Oct 2024 14:27 PM

சப்பாத்தி என்றதும் உடனடியாக நம் நினைவுக்கு வருவது எடையை குறைக்க சிறந்த உணவு என்று. தென்னாந்தியாவில் குறிப்பிட்ட நாள்களில் சமைத்தாலும், வட இந்தியாவில் உள்ள மக்களுக்கு சப்பாத்தி முக்கிய உணவாக உள்ளது. வட இந்திய மக்களுக்கு சப்பாத்தில் இல்லாமல் ஒரு நாள் கூட கடக்காது என்றே சொல்லலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் சப்பாத்தியை உணவாக எடுத்துக்கொள்கின்றனர். சப்பாத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் பலர் நம்புகின்றனர். இது ஒருபுறம் என்றாலும், ஒரு சில உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, எந்தெந்த உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் சப்பாத்தி சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: World Polio Day 2024: போலியோ என்றால் என்ன..? உலக நாடுகள் ஒழிக்க போராடுவது ஏன்..?

சர்க்கரை நோயாளிகள்:

இந்தியாவில் சமீப காலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசியில் தயாரிக்கப்படும் சோறுக்கு பதிலாக கோதுமையில் தயாரிக்கப்படும் சப்பாத்தியை அதிகம் எடுத்துக்கொள்கின்றனர். உண்மையில், சர்க்கரை நோயாளிகள் சப்பாத்தி சாப்பிடக்கூடாது. சப்பாத்தியில் அமிலோபெண்டின் எனப்படும் ஸ்டார்ச் மூலக்கூறுகள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் சப்பாத்தியை எடுத்துக்கொள்ளக்கூடாது.

தைராய்டு பிரச்சனை:

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சப்பாத்தியை சாப்பிடாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் கோதுமையில் அதிக அளவு பசையம் உள்ளது. இது உடலில் ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய்களின் அபாயத்தை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு, மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.

செரிமான பிரச்சனை:

பல சமயங்களில் சப்பாத்தி சாப்பிட்டவுடன் வயிறு கனத்து, வாய்வு பிரச்சனை ஏற்படும். அதிகமாக சப்பாத்தி சாப்பிடுவதால் வாய், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும். மேலும், கோதுமையில் காணப்படும் பசையம் குடலில் வீக்கத்தையும் ஏற்படுத்தி, செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே, வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் சப்பாத்தி சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

சோர்வு:

எப்போதும் சோர்வாக இருப்பவர்கள், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறவர்கள் சப்பாத்தி சாப்பிடக்கூடாது. கோதுமையில் உள்ள கார்போஹைட்ரேட் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உயர்த்தி, சோர்வு மற்றும் சோம்பலை அதிகரிக்க செய்யும். மேலும், இது உங்களுக்கு ஆற்றலை குறைத்து, பசியை அதிகரிக்க செய்யும்.

ALSO READ: KL Rahul Dropped: கம்பீர் கொடுத்த ஆதரவு எங்கே..? 12 மணிநேரத்தில் நீக்கப்பட்ட கே.எல்.ராகுல்!

எடை கூடும்:

பலர் சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று எண்ணி, சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். ஆனால் சப்பாத்திகளை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும். கோதுமை க்ளூட்டனில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலில் கொழுப்பை சேமிக்கும். இது மிக எளிதாக எடை அதிகரிக்க செய்யும். எனவே, எந்த உணவாக இருந்தாலும் குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.

உடல் சூடு அதிகரிக்கும்:

அதிகமாக சப்பாத்தி எடுத்துக்கொள்வர்களுக்கு உடலில் சூடு அதிகரிக்கும். இதன் காரணமாக, உங்களுக்கு அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு, இது உடலில் நீரிழப்பு பிரச்சனையை வழிவகுக்க செய்யும்.

இதய நோய்கள்:

சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இது உடலில் திகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை குவித்து, கொழுப்பாக மாற்றும். இதன் காரணமாக, இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

புரதக் குறைபாடு:

தினந்தோறும் சப்பாத்தி மட்டுமே உணவாக உட்கொண்டால், அது உடலில் அதிகப்படியான புரதக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதன் காரணமாக, ஆற்றல் இல்லாமை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சப்பாத்தி எடுத்து கொள்பவர்கள் தங்கள் உணவில் தானியங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News