5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chicken Cutlet: சிம்பிளான முறையில் கிரிஸ்பி சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

கட்லெட் செய்ய நிறைய பொருட்கள் தேவை என்று நினைத்துக் கொண்டிருப்போம். அதுதான் இல்லை, சில பொருட்களை மட்டுமே வைத்து கிரிஸ்பியான கட்லெட்டை செய்துவிட முடியும். அதுவும் அசைவ பிரியர்களாக இருந்தால் இந்த சிக்கன் கட்லெட்டை உங்க வீட்டில் செய்து பாருங்கள். சுவை உண்மையில் நன்றாக இருக்கும். மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

Chicken Cutlet: சிம்பிளான முறையில் கிரிஸ்பி சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?
சிக்கன் கட்லெட்
intern
Tamil TV9 | Updated On: 31 Jul 2024 22:44 PM

கட்லெட்டில் பல வகையான கட்லெட்டுகள் இருக்கின்றன. இவற்றை செய்ய நிறைய பொருட்கள் தேவை என்று நினைத்துக் கொண்டிருப்போம். அதுதான் இல்லை, சில பொருட்களை மட்டுமே வைத்து கிரிஸ்பியான கட்லெட்டை செய்துவிட முடியும். அதுவும் அசைவ பிரியர்களாக இருந்தால் இந்த சிக்கன் கட்லெட்டை உங்க வீட்டில் செய்து பாருங்கள். சுவை உண்மையில் நன்றாக இருக்கும். மொறு மொறுப்பாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த மாதிரி செய்துக் கொடுக்கலாம். தற்போது இந்த பதிவில் சிக்கன் கட்லெட் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

Also Read: கர்ப்பிணிகள் எந்த மாதிரி உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது..?

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் (boneless chicken) – 1/2 கிலோ
  • மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
  • வேக வைத்த உருளைக்கிழங்கு – 2 (மசித்தது)
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
  • பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் –  தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • முட்டை – 2
  • பிரட் தூள் – 10 ஸ்பூன்

சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

சிக்கன் கட்லெட் செய்வதற்கு, முதலில் ஒரு கடாயில் கழுவிய 1/2 கிலோ சிக்கனை சேர்த்து, அத்துடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளுங்கள்.

சிக்கன் வெந்ததும் அதை கீமா போல பிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது மற்றொரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு, அதில் 1/2 ஸ்பூன் கரம் மசாலா, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளுங்கள். நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.

இப்போது, வதக்கிய வெங்காயத்தை ஒரு பவுளில் சேர்த்து அத்துடன் பிசைந்த சிக்கன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகு தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். உப்பு போதுமானதாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை வடை தட்டுவதுப் போல தட்டி வைத்திக் கொள்ளுங்கள். 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். மற்றொரு தட்டில் பிரட் தூளை கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போது, வடைப் போல் தட்டிய கட்லெட்டை முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதேபோல், அனைத்து கட்லெட்டையும் முட்டை, பிரட் தூளில் பிரட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதை 30 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

Also Read: சமையலின்போது இந்த தவறுகளை செய்யவே செய்யாதீங்க…!

ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த கட்லெட்டை 30 நிமிடங்கள் வெளியில் வைத்து, பிறகு, ஒரு கடாயில் 1/2 எண்ணெயை ஊற்றி காயந்ததும் மிதமான தீயில் வைத்துக் கொண்டு, கட்லெட்டை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். ரொம்ப தீய வைக்கக்கூடாது. 

அவ்வளவு தான்! கிரிஸ்பி சிக்கன் கட்லெட் ரெடி! நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

Latest News