Cholesterol: கொழுப்பை எளிய முறையில் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..! - Tamil News | Cholesterol: Foods that help reduce cholesterol in a simple way..! | TV9 Tamil

Cholesterol: கொழுப்பை எளிய முறையில் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..!

Updated On: 

28 May 2024 00:41 AM

Foods: மனித உடலில் புதிய செல்கள் மற்றும் ஹார்மோன் செல்களை உற்பத்தி செய்யவும் கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கதிகமாக உடலில் ஏற்படும் கொலஸ்ட்ராலால், ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டோக் எனப்படும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வழிகள் அதிகளவில் உள்ளது. இவை மனிதருக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய வழிகள் குறித்து காணலாம்.

Cholesterol: கொழுப்பை எளிய முறையில் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..!

கொலஸ்ட்ரால்

Follow Us On

கொலஸ்ட்ரால் என்பது மனித உடலில் உள்ள அனைத்து செல்களிலும் காணப்படும் கொழுப்பு போன்ற கரிம சேர்மத்தால் உருவாகக்கூடியது. இது மெழுகு போன்ற ஒரு பொருளாக காணப்படுகிறது. இது கல்லீரலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நிலையில், உடலுக்கு புதிய செல்கள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை வழிவகுக்கிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதால், அவை தேவையில்லாத கொழுப்புக் கட்டிகளை உருவாக்குகிறது. அவை பிளேக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இரத்த நாளங்களை சுருக்கி, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக இயங்குவதை தடுக்கிறது. கொலஸ்ட்ரால் பொதுவாக பால், பால் பொருட்கள், முட்டை, முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் காணப்படுகிறது.  மனித உடலுக்கு நன்மை பயக்கும் கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால், என இரண்டு வகை உள்ளது. கொலஸ்ட்ரால் உள்ளது. இதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள் வருவதால், இயற்கையாகவே கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள் குறித்து காணலாம்.

Also Read: Prajwal Revanna: ஆபாச வீடியோ விவகாரம்… பிரஜ்வல் ரேவண்ணா பரபரப்பு வீடியோ விளக்கம் 

கிரீன் டீ

கிரீன் டீ குடிப்பதால், இயற்கையாகவே உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

நட்ஸ்கள் 

நட்ஸ்கள் மற்றும் உலர் பழங்களில் நல்ல கொழுப்புகளை உருவாக்கும், நார்ச்சத்து மற்றும் புரத சத்துகள் நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. எல்டிஎல் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வெந்தயம்

வெந்தயம் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப்பங்காற்றுகிறது. அன்றாட உணவில் பயன்படுத்துவதாலும், விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிரம்பியுள்ளதாலும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

Also Read: இந்து கோயிலுக்கு நிலம் கொடுத்த முஸ்லிம்கள்.. நெகிழ வைத்த சம்பவம்!

ஓட்ஸ்

ஓட்ஸ் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த விரும்புவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது ஓட்ஸ் மட்டுமே, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், இது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

பூண்டு

இயற்கையாக கிடைக்கப்பெறும் உணவுப்பொருளான பூண்டு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க விரும்புவோருக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.

 

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version