Coconut Oil Benefits: முகம் முதல் இதயம் வரை.. பராமரிப்பை அள்ளி தரும் தேங்காய் எண்ணெய்..! - Tamil News | Coconut oil cares for everything from the face to the heart; health tips in tamil | TV9 Tamil

Coconut Oil Benefits: முகம் முதல் இதயம் வரை.. பராமரிப்பை அள்ளி தரும் தேங்காய் எண்ணெய்..!

Published: 

16 Sep 2024 22:43 PM

Health Tips: தேங்காய் எண்ணெயை நேரடியாக சருமத்தில் தடவுவதன் மூலம், இது சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்க உதவி செய்கிறது. மேலும், இது சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது.

1 / 6இந்தியாவில்

இந்தியாவில் தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதன் காரணமாகதான், தேங்காய் எண்ணெய் இங்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சமையலில் இருந்து தோல் பராமரிப்பு வரை அனைத்திற்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

2 / 6

தேங்காய் எண்ணெயில் அதிக அளவு லாரிக் அமிலம் உள்ளது, இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது மாரடைப்பு வராமல் தடுக்கவும், இதயத்தை பராமரிக்கவும் உதவி செய்கிறது.

3 / 6

தேங்காய் எண்ணெயில் உள்ள மோனோலாரின் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டுள்ளன. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து தொற்று, வைரஸ்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

4 / 6

தேங்காய் எண்ணெயை நேரடியாக சருமத்தில் தடவுவதன் மூலம், இது சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்க உதவி செய்கிறது. மேலும், இது சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

5 / 6

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கவும் உதவும். மேலும், இதில் உள்ள கால்சியம் பற்களை வலுவடைய உதவி செய்கிறது.

6 / 6

கெமிக்கல் பொருட்களை முகத்தில் பயன்படுத்துவதால் தேவையற்ற புள்ளிகள் ஏற்படுகின்றன. இவற்றை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இரவில் உறங்கும் முன் தேங்காய் எண்ணெயைக் கொண்டு உங்கள் முகத்தைத் தவறாமல் மசாஜ் செய்வதன் மூலம், முகம் பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.

Follow Us On
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Exit mobile version