5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Coffee: காபி பருகுவதால் இவ்வளவு பக்க விளைவுகளா?… அதிர்ச்சி தகவல்கள்..!

தினமும் காலையில் நாம் எழுந்தவுடன் மறக்காமல் செய்யும் முதல் விஷயம் காபி குடிப்பது தான். தமிழ்நாட்டில் முக்கியமாக கும்பகோணம் டிகிரி காபி என்பது பலரும் அறிந்ததே. ஆனால், உலக புகழ் பெற்ற டிகிரி காபிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காபி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை குறித்து காணலாம்.

Coffee: காபி பருகுவதால் இவ்வளவு பக்க விளைவுகளா?… அதிர்ச்சி தகவல்கள்..!
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 08 Jul 2024 08:42 AM

தினமும் பால் மற்றும் வெள்ளைச் சர்க்கரையுடன் ஒரு சூடான கப் காபி சாப்பிடுவது பல்வேறு உடல்நலப்பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தினமும் உடலில் சர்க்கரையை எடுத்துக்கொள்வதால், உடலில் சுக்ரோஸ் அதிகரிக்கிறது. காபி பீன்களில் உள்ள சர்க்கரையின் முக்கிய வடிவம் சுக்ரோஸ் ஆகும், இது விதையில் 5-9% வரை மற்றும் மொத்த சர்க்கரை உள்ளடக்கத்தில் 90% க்கும் அதிகமாக உள்ளது. காஃபின் நிறைந்த மேலும் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. சிலருக்கு காபி பல நன்மைகளை கொடுத்தாலும், சிலருக்கு பல பிரச்சினைகளை தருகிறது. பலர் இந்த காபியினால், தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காபியின் தூண்டுதல் தூக்கத்தை தடுத்து, ஒட்டுமொத்த தூக்கத்தை தடுக்கிறது.

Also Read: விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் பட பணிகள்… டப்பிங் தொடங்கிய ஃபகத் பாசில்!

காபியை அதிக அளவில் உட்கொள்வதால், வயிற்று பிரச்சினைகள் ஏற்படுத்துகிறது. வயிற்றில் ஒருவிதமான எரிச்சலூட்டும் விதமாக அமைகிறது. நெஞ்செரிச்சல் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகப்படுத்தி செரிமான பிரச்சினையை அதிகப்படுத்துகிறது. காபியில் உள்ள தசையை தளர்த்துகிறது. இது வயிற்று அமிலம் உணவுக்குழாயில் ஏறுவதற்கு அனுமதிக்கிறது. அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தசை நடுக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் வேகமான இதயத் துடிப்பை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்து சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம்.

Also Read: ஜெயம் ரவி – பிரியங்கா மோகனின் ‘ப்ரதர்’ கிளிம்ஸ் வீடியோ இதோ!

காபி ஒரு டையூரிடிக் அமிலமாக உள்ளதால், சிறுநீரின் உற்பத்தியை அதிகரித்து மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. அதிகமாக காபி குடிப்பதால் உடலில் உள்ள திரவங்கள் விரைவாக இழக்கப்பட்டு, தாகம், வாய் வறட்சி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. செரிமான பிரச்சினையை அதிகப்படுத்தி அஜீரணம் போன்ற பிரச்சினை அதிகப்படுத்துகிறது. சோர்வு காபியின் இருந்து குறுகிய கால ஆற்றல் ஊக்கத்தை அதிபடுத்தி சோர்வை அதிகப்படுத்துகிறது.

காபி இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை பாதிக்கும். இது தலைச்சுற்றலை உணர்வுகளுக்கு பங்களிக்கும். குறிப்பாக மயக்க நிலையை அதிகப்படுத்துகிறது. காபி தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தி தூக்க சுழற்சியை முற்றிலும் சீர்குலைக்கிறது.

Latest News