5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cotton buds: காதுக்கு காட்டன் பட்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள்..!

நாம் அனைவருமே காதுகளை சுத்தம் செய்வதற்கு காட்டன் பட்ஸ்களை உபயோகப்படுத்திய வருகின்றோம். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக காட்டன் பட்ஸ்கள் உள்ளது. காதி சுத்தம் செய்வது தொடங்கி காதில் ஏதாவது நமைச்சல் அரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும் போதெல்லாம் நாம் முதலில் தேடுவது காட்டன் பட்சைத்தான். இப்படி தொடர்ந்து காதுகளில் காட்டன் பட்ஸ்களை பயன்படுத்தும் பொழுது காதுகளுக்கு பல்வேறு பிரச்சனைகளை இது ஏற்படுகிறது.

Cotton buds: காதுக்கு காட்டன் பட்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள்..!
intern
Tamil TV9 | Updated On: 11 Jul 2024 01:57 AM

காதுகளில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் காட்டன் வேர்ட்ஸ் பெரும்பாலும் கேட்கும் திறனை குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காட்டன் பட்ஸ்கள் தற்காலிக தீர்வாக மட்டுமே இருப்பதால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கு மாறும் வேண்டுகோள் காட்டன் பட்ஸ்கள் தற்காலிக தீர்வாக மட்டுமே இருப்பதால் அதனை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர். சிறு குழந்தை தொடங்கி முதியவர்கள் வரையிலும் பயன்படுத்தும் இந்த பட்ஸ் பல்வேறு பிரச்சனைகளை தரும் என்பதை நினைவில் கொள்ளாமல் இதனை சர்வசாதாரணமாக அனைவரும் பயன்படுத்துகின்றனர்.  அவை காதுகளுக்கு தற்காலிக தூய்மையை தருவதால், பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். காதுகளை உள்ள மெழுகை அகற்றுவதே காட்டன் பட்ஸின் நோக்கமாக உள்ளது.  இது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தில் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.

Also Read: Nungu: முக அழகு முதல் உடல் சூடு வரை.. நுங்கு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!

நாம் குளித்துவிட்டு வந்த உடனே காட்டன் பட்டு தேடுகின்றோம். ஏனென்றால் குளிக்கும் பொழுது தண்ணீர் உள்ளே செல்வதால் அதனை சுத்தம் செய்வதற்காக காட்டன் பட்டை காதில் பயன்படுத்தி வருகிறோம். நம்முடைய காது இயற்கையாகவே சுத்தம் செய்யும் தன்மை உடையதால் இது போன்றவற்றை தவிர்க்குமாறு மருத்துவர்கள் கூறியும் நம் கேட்பதில்லை. காதில் இயற்கையாகவே பாதுகாக்கும் மெழுகினை நாம் காட்டன் பற்றை கொண்டு உள்ளே தள்ளி அடைப்பை ஏற்படுத்தி செவித்திறனை பாதிக்கும் வகைகள் செய்கிறோம்.

Also Read: மாதவிடாய் வலி குறையணுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

காது வலி வீக்கம் காது கேளாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தற்காலிக தீர்வு காணும் நோக்கில் பெரிய பிரச்சனைகள் ஏற்படுத்தும் காட்டன் பட்ஸ்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். காட்டன் பட்ஸ்களில் பாக்டீரியா நோய் கிருமிகள் அதிகம் நிறைந்திருப்பதால் அவை காதினுள் நோய் தொற்றுகள் ஏற்பட வழி வகுக்கிறது. இவை நிரந்தரமாக காது கேட்காத தன்மையை உருவாக்கும் என்பதால் காட்டன் பரிசுகளை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்த தீர்வை உண்டாக்குகிறது. காது மருத்துவர் ஒருவர் கூறும் பொழுது, காட்டன் பட்ஸ்களை காதுக்குள் நுழைத்தால், அதன் மென்மையான தோலில் கீறல் ஏற்படும் என்றும், இதனால் எரிச்சல், வீக்கம், வலி ​​மற்றும் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம்.  இது போன்ற பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக  மருத்துவரிடம் ஆலோசனையைப் பெறுவது நன்மை பயக்கும்.

Latest News