5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cucumber Seeds Benefits: வெள்ளரி விதையில் இவ்வளவு சத்துகள் கொட்டிக்கிடக்கா? இதை படிங்க முதல்ல!

வெள்ளரிக்காய் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் வழங்குகிறது என்று நம் அனைவரும் அறிந்ததே. ஆனால், வெள்ளரி விதையிலும் தோல் மற்றும் முடி முதல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கழிவுகளை அகற்றுவதோடு, உடலை நீரேற்றமாகவும் வைத்துக் கொள்கிறது. இந்த பதிவில் தினமும் வெள்ளரி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

Cucumber Seeds Benefits: வெள்ளரி விதையில் இவ்வளவு சத்துகள் கொட்டிக்கிடக்கா? இதை படிங்க முதல்ல!
வெள்ளரி விதை
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 24 Jul 2024 23:10 PM

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், வெள்ளரிக்காய் மட்டுமல்ல அதன் விதைகளும் நமது உடலுக்கு எக்கச்சக்கமான நன்மைகளை வழங்குகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், மற்ற விதைகளை காட்டிலும் வெள்ளரி விதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், அதில் தான் அத்துனை வகையான நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. வெள்ளரிக்காயை போன்றே அதன் விதைகளிலும் வைட்டமின் கே, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகின்றன. இவை நம்மை நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகின்றன.  தற்போது இந்த பதிவில், வெள்ளரி விதைகளின் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

நீரேற்றமாக வைத்திருக்கும்

வெள்ளரிக்காயை போலவே வெள்ளரி விதையிலும் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. குறிப்பாக, வெயில் காலங்களில் ஏற்படும் நீர்ப்பாற்றாக்குறையை தடுக்க வெள்ளரி விதை தினமும் எடுத்துக் கொள்ளலாம். உடல் சூட்டை குறைத்து, உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Also Read: ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க இந்த உணவுகள் தான் காரணமாம்

எடை மேலாண்மைக்கு

உடல் எடையை வெகுவாக குறைக்க விரும்புவோர்களுக்கு வெள்ளரி விதையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதிலுள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவுகின்றன. மேலும், உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையாக உணர வைப்பதால், அதிகப்படியாக உணவு உட்கொள்வது குறைக்கப்படுகிறது. இதனால், எடையை கட்டுக்குள் வைக்கலாம். கலோரிகள் மிக குறைவு என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

செரிமானத்தை மேம்படுத்தும்

வெள்ளரி விதையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது குடல் இயக்கத்தை சீராக்குகிறது. வெள்ளரி விதைகளில் செரிமானத்திற்கு உதவும் நொதிகள் இருப்பதால், மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் 1 டம்ளர் மோரில் 2 ஸ்பூன் வெள்ளரி விதையை கலந்து குடிக்கவும். அல்லது தயிரில் 2 ஸ்பூன் வெள்ளரி விதைகளை கலந்து சாப்பிடவும். உடனே நிவாரணம் கிடைக்கும்.  

இளமையான சருமத்திற்கு

வெள்ளரி விதைகளில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் இளமையான மற்றும் பளபளப்பான சருமத்தை பெறலாம். அதுமட்டுமல்லாமல், ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கிறது. 

Also Read: Chennai Powercut: சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

முடி உதிர்வை தடுக்கும்

வெள்ளரி விதையில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? தினமும் வெள்ளரி விதையை வெறுமனே சாப்பிட்டு வரலாம் அல்லது வெள்ளரிக்காயை விதைகளுடன் ஜூஸ் போட்டுக் குடிக்கலாம். இது முடிக்கு பொலிவை சேர்க்கிறது.

சிறுநீரக கல்லுக்கு 

சிறுநீரக கல் இருந்தால், வெள்ளரி விதை ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். தினமும் வெள்ளரிகளை விதைகளை சாப்பிட்டு வந்தாலே சிறுநீரக கல்லிருந்து வெகுவாக விடுபடலாம். அல்லது 1 கிளாஸ் மோரில் 3 ஸ்பூன் வெள்ளரி விதைகளை சேர்த்து கலக்கி குடித்து வரலாம்.

ஆரோக்கியமான இதயத்துக்கு

வெள்ளரி விதையில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Latest News