5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Exclusive: சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிடக்கூடாது..? டாக்டர் அட்வைஸ்!

Diabetes: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர்கள் பெரும்பாலான நாட்களில் மருத்துவர்கள் சொல்வதை பின்பற்றாத காரணத்தினால் பின் நாளில் பிரச்சனையை சந்திக்கின்றன. பொதுவாகவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் சில குறிப்பிட்ட வகையிலான உணவுகளை எடுத்துக்கொள்ளவே கூடாது. இது இவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.

Exclusive: சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிடக்கூடாது..? டாக்டர் அட்வைஸ்!
சர்க்கரை நோய் (Image: fcafotodigital/E+/Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Sep 2024 12:23 PM

இன்றைய நவீன வாழ்க்கையில் நல்ல உணவுப் பழக்கம் இல்லாத காரணத்தினால் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய் மிகவும் பொதுவானதாகிவிட்டது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு சர்க்கரை நோயாளியையாவது காணலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியமானது. உடலில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது பிரச்சனையை உண்டாகும். எனவே, எடுத்துக்கொள்ளும் உணவில் எது தேவை தேவையில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

அந்தவகையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சர்க்கரை நோய் நிபுணரான டாக்டர் சரவணனை தொடர்பு கொண்டு பேசினோம். இதுகுறித்து விளக்கமளித்த அவர் சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன எடுத்துக்கொள்ளலாம், என்ன எடுத்துக்கொள்ள கூடாது என தெரிவித்தார். அவை பின்வருமாறு..

காலை உணவாக என்ன சாப்பிடலாம்..?

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர்கள் பெரும்பாலான நாட்களில் மருத்துவர்கள் சொல்வதை பின்பற்றாத காரணத்தினால் பின் நாளில் பிரச்சனையை சந்திக்கின்றன. பொதுவாகவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் சில குறிப்பிட்ட வகையிலான உணவுகளை எடுத்துக்கொள்ளவே கூடாது. இது இவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.

ALSO READ: Health Tips: நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா..? இந்த விஷயத்தை பாலோ பண்ணாலே போதும்!

நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் பொதுவாக காலையில் இட்லி, அடை தோசை, சப்பாத்தி, எண்ணெய் குறைவாக தோசை, ஓட்ஸ் மற்றும் கோதுமை தோசை உள்ளிட்டவற்றை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உப்புமா வகைகளில் ரவை உப்புமா, சம்பா உப்புமா மற்றும் கோதுமை உப்புமா போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை..?

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளில் கீழே குறிப்பிட்ட உணவுகளை எப்போதும் காலை உணவாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். அதன்படி, காலை உணவாக பொங்கல், பூரி, தேங்காய் சட்னி, களி, கஞ்சி, கூழ், வெள்ளை சாதம், இடியாப்பம், பரோட்டா போன்ற உணவை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம்.

நொறுக்கு தீனியாக என்ன எடுத்துக்கொள்ளலாம்..?

சர்க்கரை நோயாளிகள் பொதுவாக காலை 7 மணியில் இருந்து 9 மணிக்குள் மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படியான நேரத்திற்குள் இவர்களை காலை உணவை எடுத்துக்கொள்வதால் 11 மணிக்கு மேல் ஒரு குட்டி பசியை சந்திப்பார்கள். அப்போது, சர்க்கரை நோயாளிகள் காய்கறி சூப், வெள்ளரிக்காய், பொரி, சுண்டல், பச்சைப்பயிறு, தர்ப்பூசணி, ஆப்பிள், கொய்யா, பப்பாளி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில், ஜூஸ், முக்கனியான மா, பலா, வாழை, வடை, போண்டா, ஸ்வீட்ஸ், கேக், சிப்ஸ், ஜூஸ் போன்றவற்றை தவறுதலாக கூட எடுத்துக்கொள்ளக்கூடாது.

சர்க்கரை நோய் ஏற்பட காரணம் என்ன..?

பொதுவாக கணையத்தின் பீட்டா செல்களில் ஒரு இடையூறு ஏற்படுகிறது. இதனால் உடலில் இன்சுலின் உற்பத்தி குறைகிறது, அப்படி இல்லையென்றால், அளவுக்கு அதிகமாக அதிகரிக்கிறது. உணவில் உள்ள கார்போஹைட்ரேட் அல்லது குளுக்கோஸை இன்சுலினே ஜீரணித்து இரத்தத்தில் அனுப்புவதால், இன்சுலினின் தாக்கத்தால், குளுக்கோஸ் செரிக்கப்படாமல் நேரடியாக இரத்தத்தில் செல்கிறது. இதையேதான், நாம் சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம்.

ALSO READ: Health Tips: மூளைக்கு புத்துணர்ச்சி தரும் கத்திரிக்காய்.. புற்றுநோய்க்கு சூப்பர் ஃபுட்..!

நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அல்லது உடற்பயிற்சி செய்யாதவர்கள் உடலில் சர்க்கரை நோய் மட்டுமின்றி பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல், சர்க்கரை நோய்க்கு உடல் பருமனும் ஒரு முக்கிய காரணமாகும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், அது வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும். சீர்குலைந்த வளர்சிதை மாற்றத்தால் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். சர்க்கரை நோய்க்கு உயர் இரத்த அழுத்தமும் காரணமாக இருக்கலாம். இது தவிர, நீங்கள் புகைபிடித்தால், சர்க்கரை நோய்க்கான அதிக ஆபத்து உள்ளது. எனவே, நம் உடலை பராமரிக்க அவ்வபோது உடல் முழு பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

Latest News