5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diabodies: சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

diabetes patient food to avoid: தற்போதைய காலகட்டத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அப்படி சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுபவர்கள் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர் உணவு கட்டுப்பாடுகள் உடற்பயிற்சி நடை பயிற்சி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றது நோயாளிகள் தவறான உணவுகளை உட்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து காணப்படுகிறது சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து உணவுகள் குறித்து நாம் பார்க்கலாம்

Diabodies: சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்
மாதிரிப்புகைப்படம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 02 Jul 2024 13:40 PM

சர்க்கரை உங்களின் எதிரி என்று பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். சக்கரை உடல் எடையை அதிகரிக்கவும், உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு பரவலான காரணமாக கருதப்படுகிறது. பெரும்பாலானோர் சர்க்கரை உடலுக்கு ஆபத்து என்று கருதுகின்றனர். மேலும் எடையை அதிகரிக்கும் தன்மையுடையது. சர்க்கரை பற்றி தவறான புரிதல் இருப்பதால் பலரும் தங்களுக்குப் பிடித்த இனிப்பு உணவுகளை உண்ணுவதை தவிர்த்து விடுகின்றனர். வெள்ளை சர்க்கரையை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது தான். ஆனால் முறையான உடலுழைப்பு, சரியான டயட் இருப்பவர்கள் சரியான அளவு சர்க்கரையை உட்கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை. சில தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.

இனிப்பு பானங்கள்

வெள்ளை சர்க்கரை சேர்க்கப்பட்ட பல்வேறு குளிர்பானங்களை நாம் நாளுக்கு நாள் அருந்திக்கொண்டு தான் வருகிறோம். இவற்றில் இருக்கும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. ஆனால் அதை ஒருபொழுதும் நாம் கண்டுகொள்ளாமல் வெயிலின் தாக்கத்திற்காக சிலர் குளிர் பானங்களை அருந்துகின்றனர் குறிப்பாக சோடா, எலுமிச்சை பழச்சாறு போன்றவையும் இதில் அடங்குகின்றது. தேநீர், காபி போன்ற வானங்களிலும் நிறைய அளவில் வெள்ளக்கரை பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது போன்ற குளிரூட்டப்பட்ட மற்றும் சூடாக இருக்கும் பானங்களில் இருக்கும் சர்க்கரை போன்றவை நமக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி உடல் உபாதைகளையும் கொண்டு வருகின்றன. இதான் ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்கிறது. இது போன்ற பாடங்களை தவிர்ப்பதன் மூலம் நம்முடைய சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

பிரட் உணவுகள்

பிரட் பன் போன்றவை அன்றாட மக்கள் உணவிற்காக சாப்பிட பொருளாக அமைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி செய்யக்கூடிய சாண்ட்விச் பர்கர் போன்ற பொருட்களை பல்வேறு தரப்பு மக்களும் அன்றாடம் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதில் அதிக அளவு வெள்ளைச்சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது இது நம்முடைய சர்க்கரை அளவை அதிகரிக்கும் ஒரு வழியாக உள்ளது. இது போன்ற பொருட்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கக்கூடிய தானிய வகைகளை தேர்வு செய்து சாப்பிடுவது நன்மை அளிக்கிறது

கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்

பால் கிரீம் மற்றும் வடக்கமான சீஸ் போன்ற பல்வேறு கொழுப்பு நிறைந்த பொருட்களை நாம் அதிக அளவில் உட்கொண்டு வருகிறோம் இதில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்க கூடிய கொழுப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இது போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

துரித உணவுகள்

கடைகளில் கிடைக்கக்கூடிய துரித உணவுகளை நாம் அன்றாடம் விரும்பி சாப்பிடுகிறோம் இதில் நிறைய பிரச்சனைகள் காணப்படுகின்றன. ப்ரெஞ்ச் ப்ரைஸ், நக்கெட்ஸ், மோமோஸ், வறுத்த இறைச்சி, கிரில் சிக்கன் போன்ற உணவுகளை மக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். இதில் நிறைய கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுகள் உள்ளன உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவது ஆரோக்கியம் அளிக்கிறது.

சாக்லேட், கேக் வகைகள்

தற்போதைய காலகட்டத்தில் கேக் சாக்லேட் போன்றவற்றை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது அந்த அளவிற்கு தெருவெங்கும் பேக்கரி கடைகள் வளர்ந்து வருகின்றன. பேக்குகள் பிஸ்கட்கள் ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு உணவுகளில் சர்க்கரை மற்றும் இனிப்புகளின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் சிறு வயதிலேயே சர்க்கரை அளவு அதிகரித்து காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. பெரும்பாலும் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து இயற்கை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன்கள் பெறலாம்.