Did You Know: உடைந்துப் போகும் கிட்கேட் சாக்லேட் நிலைமை என்ன தெரியுமா? - Tamil News | Did You Know, KitKat | TV9 Tamil

Did You Know: உடைந்துப் போகும் கிட்கேட் சாக்லேட் நிலைமை என்ன தெரியுமா?

Published: 

21 Jul 2024 13:16 PM

KitKat : இங்கிலாந்தில் கிட் கேட் விற்பனை அமோகமாக இருந்ததை தொடர்ந்து 1940களில் அது பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் “சின்ன பிரேக் சின்ன கிட்கேட்” என்ற விளம்பர ஹேஷ்டேக் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கிட் கேட் நிறுவனத்தை நெட்ஸ்லே வாங்கியது. உலகின் பல இடங்களிலும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது.

Did You Know: உடைந்துப் போகும் கிட்கேட் சாக்லேட் நிலைமை என்ன தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Follow Us On

கிட் கேட்:  சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பேரை கேட்டாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு கலர் கலராக, வகை வகையாக சாக்லேட்டுகள் சந்தையில் விற்பனைக்கு வந்து விட்டது. அதில் நம் அனைவரிடத்திலும் பிரபலமானது கிட் கேட் (Kit Kat). நெட்ஸ்லே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்டில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது என்பது நாம் அறிந்தது. இந்த சாக்லேட்டுகளை உடைத்து சாப்பிடும்படி கெட்டியாக இருக்கும். அதனை உடைத்து பார்க்கும்போது உள்ளே இருக்கு ஃவேபர்கள் வித்தியாசமாக இருக்கும். அப்படி அதனுள் என்ன இருக்கிறது என்று பார்த்திருப்போமா?. கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனையில் இருக்கும் கிட் கேட் பற்றிய சுவாரஸ்ய தகவலை காணலாம்.

கிட் கேட் உருவான வரலாறு

இங்கிலாந்தின் ரவுன்ட்ரீஸ் ஆஃப் யார்க் என்பவரால் உருவாக்கப்பட்ட சாக்லேட் தான் கிட் கேட் ஆகும். ஆனால் முதலில் இதன் பெயர் ரவுன்ட்ரீஸ் கிட் கேட் என்ற தலைப்பில் 1920 ஆம் ஆண்டில் இந்த சாக்லேட் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டது தான் இவை விற்பனைக்கு வந்தது. அதேசமயம் அந்நிறுவனர் Black Magic மற்றும் Dairy Box பிராண்டுகள் மீது தனது கவனத்தை செலுத்தியதால் கிட் கேட் தயாரிப்பு நின்று போனது. இதன் பின்னர் அந்நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி பரிந்துரையின் படி நான்கு கை விரல்கள் கொண்ட பட்டையாக வடிவில் சாக்லேட் வடிமைக்கப்பட்டது. 1935ல் விற்பனைக்கு வந்த இவை Rowntree’s Chocolate Crisp என்ற பெயரில் பிரபலமானது. அடுத்த 2 ஆண்டுகளில் Kit Kat Chocolate Crisp என பெயர் மாற்றம் பெற்றது. 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பின் நீல நிறத்தில் இருந்த சாக்லேட் கவர், பின் சிவப்பு நிறத்துக்கு மாற்றப்பட்டு பெயர் Kit Kat என சுருக்கப்பட்டது.

இங்கிலாந்தில் கிட் கேட் விற்பனை அமோகமாக இருந்ததை தொடர்ந்து 1940களில் அது பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் “சின்ன பிரேக் சின்ன கிட்கேட்” என்ற விளம்பர ஹேஷ்டேக் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கிட் கேட் நிறுவனத்தை நெட்ஸ்லே வாங்கியது. உலகின் பல இடங்களிலும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது. கிட் கேட் பார்கள் நெஸ்லேவால் 16 நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன.

சாக்லேட்டில் இருக்கும் சீக்ரெட்

கிட்கேட் சாக்லேட்டை உடைத்து பார்த்தால் அதனுள் 4 அடுக்கு ஃவேபர்கள் இருக்கும். அதன் நடுவில் சாக்லேட் கிரீம் நிரப்பப்பட்டிருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் இல்லை. கிட்கேட் பார்கள் தயாரிக்கும்போது சில பார்கள் உடைந்து விடும். அதனை வீணாக்காமல் மீண்டும் மறுசுழற்சி முறையில் அரைத்து அதனுடன் சாக்லேட் சுவை கலந்து ஃவேபர் மீது பரப்பப்பட்டு ஒன்றிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
Exit mobile version