Did You Know: ஆளுமையை சொல்லும் வார்த்தை விளையாட்டு.. இதை கொஞ்சம் படிங்க!

விடுகதை தொடங்கி சுடோகு, குறுக்கெழுத்து போட்டி என காலம் காலமாக நாம் பலவகையான இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடியிருப்போம். இப்படியிருக்கையில் இயற்கையாகவே நம்மிடையே மனதை ஒருமுகப்படுத்தி ஒருவிஷயத்தை அறியும் திறன் என்பது உள்ளது. அதனைப் பல இடங்களில் நாம் உபயோகித்து வெற்றி கண்டிருப்போம். நிச்சயம் இத்தகைய விளையாட்டுகள் வாழ்க்கையின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானவை.

Did You Know: ஆளுமையை சொல்லும் வார்த்தை விளையாட்டு.. இதை கொஞ்சம் படிங்க!

கோப்பு புகைப்படம்

Published: 

19 Aug 2024 15:00 PM

உங்களுக்கு தெரியுமா?: வார்த்தை விளையாட்டு என்பது நம் மனதையும், மூளையையும் உற்சாகப்படுத்தும் என்பது எந்தவித சந்தேகமுமில்லை. விடுகதை தொடங்கி சுடோகு, குறுக்கெழுத்து போட்டி என காலம் காலமாக நாம் பலவகையான இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடியிருப்போம். இப்படியிருக்கையில் இயற்கையாகவே நம்மிடையே மனதை ஒருமுகப்படுத்தி ஒருவிஷயத்தை அறியும் திறன் என்பது உள்ளது. அதனைப் பல இடங்களில் நாம் உபயோகித்து வெற்றி கண்டிருப்போம். நிச்சயம் இத்தகைய விளையாட்டுகள் வாழ்க்கையின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானவை. அப்படித்தான் lo_er என்ற நடுஎழுத்து விடப்பட்ட வார்த்தையானது படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்தவுடன் என்ன வார்த்தையாக இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அதைப் பொறுத்து உங்கள் ஆளுமையும் கணிக்கப்படுகிறது. அதனைப் பற்றி காணலாம்.

அந்த வார்த்தையில் V என்ற எழுத்தைச் சேர்த்து  LOVER என நினைத்தால்,  நீங்கள் மிகவும் கலகலப்பான ஆளுமை கொண்டவர் என்று அர்த்தம். நீங்கள் எப்போதும் வாழ்வில் எல்லாம் நிறைந்தவராக இருப்பீர்கள். நீங்கள் பேசும் விதத்திலும் செயல்படும் விதத்திலும் உங்களை சுற்றியிருப்பவர்கள் பழகுவதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.  எப்பொழுதும் சுவாரசியமான ஒன்றை எதிர்பார்ப்பார்கள். வாழ்க்கை உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான பயணமாக அமையும்.  நீங்கள் சுற்றி இருக்கும்போது மற்றவர்களுக்கு சலிப்பான தருணம் ஏற்படாது.

Also Read: Tindivanam: வேண்டிய வரங்கள் அருளும் வாசவி ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன்!

ஒருவேளை அந்த வார்த்தை LOWER  என நினைத்தால், நீங்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருப்பீர்கள் என்று அர்த்தம். சுற்றியிருப்பவர்கள் உங்களைச் சார்ந்துள்ள நிலையில் நீங்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ள தயாராக இருப்பவர்கள். நீங்கள் மிகவும் விடாமுயற்சியுடன் இருப்பீர்கள், உங்கள் வேலையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்பவர்களாக திகழ்வீர்கள்.

அதேசமயம் சம்பந்தப்பட்ட அந்த வார்த்தை LOSER  என யோசித்தால் நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் என்பதைக் குறிக்கும் . யார் உங்களை புண்படுத்தினாலும், எதையும் பொருட்படுத்தாமல் உண்மையை மட்டுமே தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் சில சமயங்களில் முரட்டுத்தனமாக மற்றவர்களுக்கு தோன்றலாம். அதற்கு காரணம் உங்கள் உணர்வுகளை மறைக்க தெரியாமல் இருப்பதால் தான்.  நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறீர்களாக இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை அதிகம் நேசிப்பார்கள்.

Also Read: Google Pay: இன்டர்நெட் இல்லனாலும் கவலை வேண்டாம்.. ஈஸியா கூகுள் பே மூலம் பணம் அனுப்பலாம்.. எப்படி?

முதலில் பார்க்கும் வார்த்தை LONER என தோன்றினால், நீங்கள் ஆழ்ந்த சிந்தனையாளர் மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமான நபர் என்று அர்த்தம். நீங்கள் உலகின் வழிகளைப் பற்றி வாழ்க்கையில் முன்னேறுவதைப் பற்றி சிந்திக்க நிறைய நேரம் செலவிடுவீர்கள். நீங்கள் ஆன்மீகம் மற்றும் உங்கள் படைப்பின் மூலம் உங்களைச் சுற்றி நேர்மறையை எப்போதும் பரப்ப முயற்சிப்பீர்கள். நீங்கள் ஒரு எழுத்தாளராகவோ, ஓவியராகவோ, இசைக்கலைஞராகவோ அல்லது படைப்பாற்றல் மிக்கவராகவோ இருக்கலாம். உங்கள் படைப்பாற்றல் மூலம் உங்களைச் சுற்றி ஒரு மாயாஜால சூழலை உருவாக்க முயல்வீர்கள் என்று அர்த்தமாக பார்க்கப்படுகிறது.

இது இந்த வார்த்தை மட்டுமல்ல நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறீர்களோ அதனைப் பொறுத்தும் கணிக்கப்படும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?