Sandals: உயிரை பாதுகாக்கும் செருப்பு.. ஏன் முக்கியம் தெரியுமா? மருத்துவர் சொன்ன முக்கிய விளக்கம்!

Without Wearing Sandals: காலரா டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் போதும். இரத்தச்சோகையை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் மட்டும் போதும். ஆனால்,  உங்கள் காலில் இந்த புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா) தொற்றுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு செருப்பு அணிய வேண்டும்.

Sandals: உயிரை பாதுகாக்கும் செருப்பு.. ஏன் முக்கியம் தெரியுமா? மருத்துவர் சொன்ன முக்கிய விளக்கம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

17 Jul 2024 21:59 PM

செருப்பு அணிவதன் பயன்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும்போதும், பாத்ரூம் செல்லும்போதும் செருப்பு அணிந்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதற்கு காரணம், பாத்ரூமில் இருக்கும் கொக்கி புழுக்கள் உள்ளிட்ட சிலவகை புழுக்கள் உங்களது உடலுக்குள் சென்று தீமைகளை விளைவிக்கும். தூய்மை இல்லாத இடத்தில் வெறுங்காலில் நடப்பதால் நோய்தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.ஒரு நாளைக்கு சிறிது நேரம் செருப்பு அணியாமல் வெறும் காலில் நடந்தால் புத்துணர்ச்சி தரும். ஆனால், நாள் முழுக்க அப்படி செய்வது நோய்களை காலோடு அழைத்து வரும்படி ஆகிவிடும். அந்தவகையில், செருப்பு அணியாமல் வெளியே செல்பவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என மரியானோ அன்டோ புருனோ மஸ்கரென்ஹாஸ் என்ற மருத்துவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது பதிவில், “குடல் புழுக்கள் என்று சில உள்ளன. ஆங்கிலத்தில் Hook Worm. இவற்றில் பல இருந்தாலும் Ancylostoma duodenale மற்றும் Necator americanus.என்பவை மனிதர்களை தாக்கும் வகைகள். இவை குடலினுள் இருந்து கொண்டு, தினமும் சிறிது சிறிதாக இரத்தத்தை உறிஞ்சும். எனவே குடல் புழுக்கள் உள்ள நபருக்கு இரத்த சோகை (Anemia) வரும்.
நமது உடலில் நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு பிராணவாயுவை எடுத்து சென்றால் தான் அனைத்து பகுதிகளில் உள்ள திசுக்களும் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்ய முடியும்.

ALSO READ: Cholesterol : கொலஸ்ட்ரால் சர்ரென குறையும்.. சூப்பரான 7 உணவுகள்

இரத்த சோகை:

இரத்த சோகை இருந்தால் இப்படி பிராணவாயுவை எடுத்து செல்வது குறைவாக இருக்கும். எனவே உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராணவாயு (ஆக்சிஜன் Oxygen) போதிய அளவு செல்லாது. எனவே உறுப்புகளால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்கள் எளிதில் சோர்வடைந்து, கண் எரிச்சல் ஏற்படும். இதுகுறித்து, கண் பரிசோதனை செய்தால் கண் சரியாக இருக்கும். தலைவலி, முதுகுவலி என்று இருக்கும். ஊடுகதிர் (எக்ஸ் ரே) எடுத்து பார்த்தால் எலும்பு சரியாக இருக்கும். இது போல் பல பிரச்சனைகள் இருக்கும்.

இரத்த சோகை அதிகரித்தால் அதனால் இதயத்திற்கு கூட பாதிப்பு வரலாம். (Anemia causing Heart Failure)மேலும் இரத்த சோகை உள்ள பெண்கள் கர்ப்பமடையும் போது பல பிரச்சனைகள் வரும். குழந்தைக்கு போதிய வளர்ச்சி இருக்காது. பிரசவத்தில் சிக்கல் வரும். பேறுகால மரணங்கள் (Maternal Mortality) மற்றும் பச்சிளம் குழந்தை மரணங்களுக்கு (Infant Mortality) இரத்த சோகை என்பது மிகவும் முக்கியமான காரணம் ஆகும். அதே போல் குழந்தைகள் வயிற்றில் புழுக்கள் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே கொக்கி புழுக்கள் பாதிப்பு என்பது வயிற்றில் புழு உள்ளது என்று எளிதாக கடந்து செல்லக்கூடிய பிரச்சனை அல்ல. பேறுகால மரணம், பச்சிளம் குழந்தை மரணம், குழந்தை வளர்ச்சிக்குறைபாடு என்ற பிரச்சனைகளுக்கு  குடற்புழுக்களே காரணம்.

குடற்புழுக்கள்: 

அதே போல் இரத்தச்சோகையினால் உடலில் இருக்கும் இரும்பு சத்து குறைந்தால் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளும் வரும். இந்த குடற்புழுக்கள் எப்படி உடலினுள் வருகின்றன என்றால் அதில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது. காலரா, டைப்பாயிடு போன்ற கிருமிகளும் குடலினுள் வந்து பிரச்சனை செய்கின்றன. ஆனால் காலரா கிருமி என்பது நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது குடிக்கும் நீர் மூலம் கூட உங்கள் குடலினுள் வரலாம். டைப்பாயிடு கிருமியும் அப்படியே, எனவே நீங்கள் நீரை காய்ச்சி குடித்தால் காலரா, டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க முடியும்.

ALSO READ: Dhammika Niroshana: இலங்கை முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

ஆனால் குடற்புழுக்கள் அப்படி அல்ல. இந்த Necator americanus புழுக்களின் சிறுவடிவங்கள் உங்கள் காலில் முதலில் தொற்றுகின்றன. பிறகு காலில் இருந்து இரத்தம் மூலம் நுரையீரல் செல்லுகின்றன. நுரையீரலில் இரத்தக்குழாயில் (venules) இருந்து காற்றுப்பைகளுக்குள் (Alveoli) வருகின்றன. நுரையீரலில் இருந்து மூச்சுக்குழாய் (Trachea) மூலம் வெளிவந்து அப்படியே உணவு குழாய் (Esophagus) மூலம் வயிற்றினுள் சென்று குடலுக்குள் செல்கின்றன. ஒருமுறை குடலினுள் சென்ற Necator americanus புழுக்கள் 15 வருடங்கள் வரை உள்ளிருந்து உங்கள் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. (காலரா, டைபாயிடு எல்லாம் சில நாட்களே, வருடக்கணக்கில் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்)

காலரா டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் போதும். இரத்தச்சோகையை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் மட்டும் போதும். ஆனால்,
உங்கள் காலில் இந்த புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா) தொற்றுவதை தவிர்க்க veeNdum. அதற்கு செருப்பு அணிய வேண்டும்.

குடற்புழுக்களில் இரண்டு வகை மனிதர்களை தாக்கும் என்று பார்த்தோம் அல்லவா
இதில் Necator americanus என்பது கால்வழியாக மட்டுமே ஒருவரை தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் Ancylostoma duodenale என்பது கால் வழியாகவும் தாக்கும், வாய் வழியாகவும் தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனை” என்று பதிவிட்டுள்ளார்.

கட்டுரை உதவி: மருத்துவர் மரியானோ அன்டோ புருனோ மஸ்கரென்ஹாஸ்

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ