5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Junk Food : குழந்தைகளின் மனநிலையை அதிகம் பாதிக்கும் ஜங்க் புஃட்ஸ்!

Disadvantages of junk food : ஜங்க் புஃட் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள். அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிக சர்க்கரை நிறைந்த அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பாஸ்ட் புட் சாப்பிடுவதால் மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கும் என கூறப்பட்டிருக்கிறது.

Junk Food : குழந்தைகளின் மனநிலையை அதிகம் பாதிக்கும் ஜங்க் புஃட்ஸ்!
மாதிரி படம்
Follow Us
intern
Tamil TV9 | Published: 15 May 2024 15:00 PM

ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த சமூகம் நம்மளுடைய சமூகம். அதனாலேயே எந்த நோய் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சக்தி நம்மிடையே இருந்தது. ஆனால் இப்பொழுதோ சிறு காய்ச்சல் வந்தாலே தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டு போய்விடுகிறோம். அதற்குக் காரணம் நம் அன்றாட உணவு பழக்கவழக்கங்களும் சூழ்நிலையும்தான். நேரமில்லை ஓடிக்கொண்டே இருக்கவேண்டும், அதனால் கிடைத்ததை வாயில் போட்டுவிட்டு ஓடவேண்டியது. ஆனால் ஏன் ஓடுகிறோம், எதற்கு ஓடுகிறோம், யாருக்காக ஓடுகிறோம் என்பதை சற்றும் யோசித்துப் பார்ப்பதே இல்லை. அதை யோசித்துப் பார்த்தால் நிச்சயம் நம் உடல் நிலையிலும் மனநிலையிலும் கண்டிப்பாக கவனம் செலுத்துவோம். அப்படி கவனம் செலுத்தாமல் நம் குழந்தைகளுக்கு கண்டதை சாப்பிட வாங்கிக்கொடுப்பதன் விளைவை அறிவீர்களா? குப்பை உணவு அதுதான் ஜங்க் புஃட் ஏற்படுத்தும் கடுமையான பாதிப்பைப் பற்றிதான் இங்கு பார்க்கப் போகிறோம்.

ஒரு ஆய்வு முடிவில், ஜங்க் புஃட் மற்றும் தேவையற்ற டின்களில் அடைக்கப்பட்ட பானங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் பழக்கவழக்கங்களில் பிரச்சனை ஏற்படுகிறது என்றும்,மேலும் ஆர்வக் கோளாறு, அல்லது கவனக் குறைவு ஏற்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியமற்ற கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள ஜங்க் புட்ஸ் அதிகம் எடுத்துக்கொள்வதால் குழந்தைகளின் மனநிலை அதிகம் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் உணவு பழக்கவழக்கங்களில் ஜங்க் புட் பிரிக்கமுடியாத ஒன்றாக ஆகிப்போனது. இது குழந்தைகளின் சரியான வளர்ச்சியை தடை செய்வதோடு, இதயநோய், உடல் எடையை அதிகரித்தல், கேன்சர் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் காரணமாய் அமைகிறது.

டெல்லி மேக்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அமிதாப் சகா இதுபற்றி கூறுகையில். அதிக ஜங்க புட் சாப்பிடும் பழக்கமானது குழந்தைகளின் அறிவாற்றல், மனநிலை மற்றும் செயல்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து பிறகு மொத்தமாக ஒரு குழந்தையின் மனநிலையை பாதிக்கலாம் என்கிறார்.

Also read: ஜாக்கிரதை! கிட்டப்பார்வை பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படவிருக்கும் 5 முதல் 15 வயது குழந்தைகள்!

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிக சர்க்கரை நிறைந்த அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பாஸ்ட் புட் சாப்பிடுவதால் மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கும் என கூறப்பட்டிருக்கிறது.

பாஸ்ட் புட் மற்றும் கர்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்க்சில் அதிகளவு கேஃபைன் எனப்படும் மூலப்பொருள் காணப்படுகிறது. இது சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து திடீரென குறைக்கவும் செய்யும். ஒரு ஒழுங்கற்ற சர்க்கரை அளவை ஏற்படுத்தும். மேலும் இது எரிச்சல் மற்றும் மன உளைச்சலை அதிகப்படுத்தும்.

எனவே குழந்தைகளுக்கு அதிக அளவில் ஜங்க் புட்ஸ் கொடுப்பதை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயிர் வகைகளைக் கொடுக்கலாம். மேலும் நன்கு ஆரோக்கியமான உடல் மற்றும் பசியெடுத்தலுக்கு அவர்களை வெளியில் சென்று நண்பர்களோடு விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.

Latest News