Health Tips: நீண்ட நேரம் நின்று வேலை செய்யும் நபரா நீங்கள்..? எச்சரிக்கை! ஆபத்து அதிகம்!

Long Standing: நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்பதன் மூலமோ அல்லது உட்கார்ந்திருப்பதன் மூலமோ, அந்த நபர் முதுகுத்தண்டு, கால்கள் மற்றும் பாதங்களில் வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும், நீண்ட நேரம் நின்று வேலை செய்வது இதயம் தொடர்பான நோய்களில் அபாயத்தையும், தோலழற்சியின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

Health Tips: நீண்ட நேரம் நின்று வேலை செய்யும் நபரா நீங்கள்..? எச்சரிக்கை! ஆபத்து அதிகம்!

நீண்ட நேரம் நிற்பது (Image: freepik)

Published: 

02 Nov 2024 15:31 PM

தொடர்ச்சியாக உட்கார்ந்து பல மணிநேரம் இடைவேளையின்றி வேலை செய்வது உடலில் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று படித்திருக்கிறோம், கேள்வி பட்டிருக்கிறோம். அந்தவகையில், தொடர்ச்சியாக நிற்பதும் உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அலுவலக வேலையாக இருந்தால் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, நீங்கள் மணிக்கணக்கில் நின்று வேலை செய்தால், உங்கள் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொடர்ந்து, நின்று கொண்டே வேலை செய்வது எதிர்காலத்தில் பல உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும்.

நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்பதன் மூலமோ அல்லது உட்கார்ந்திருப்பதன் மூலமோ, அந்த நபர் முதுகுத்தண்டு, கால்கள் மற்றும் பாதங்களில் வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும், நீண்ட நேரம் நின்று வேலை செய்வது இதயம் தொடர்பான நோய்களில் அபாயத்தையும், தோலழற்சியின் அபாயத்தையும் அதிகரிக்கும். நீண்ட நேரம் நின்று வேலை செய்வதால் ஒருவருக்கு சோர்வு ஏற்படுவதுடன் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளும் ஏற்படும். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் ஆண்களுக்கு மாரடைப்பு ஆபத்து அதிகம். அந்தவகையில், நீண்ட நேரம் நின்று வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Egg Benefits: உடல் எடையை 10 நாட்களில் குறைக்குமா முட்டை..? இப்படி சாப்பிட்டால் நல்ல பலன்..!

நீண்டநேரம் நின்று வேலை செய்வதால் ஏற்படும் தீமைகள்:

  • நீண்ட நேரம் நின்று வேலை செய்வதால் கால்களில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதோடு முதுகுத்தண்டும் பாதிக்கப்படும். இவற்றை தவிர்க்க, அரை மணிநேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் அமரலாம். அப்படி இல்லையென்றால், சிறிது தூரம் நடந்து கொடுக்கலாம்.
  • உட்கார்ந்து வேலை செய்யும்போது கூட தசை சிறிது நேரம் ஓய்வு நிலையில் இருக்கும். ஆனால், நீண்ட நேரம் நிற்பதால் உங்களுக்கு ஓய்வு கிடைக்காது. இதனால், உங்களுக்கு கால் வலி, முழங்கால் மூட்டு வலி போன்றவை ஏற்படலாம்.
  • சமீபத்தில் அமெரிக்க ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் வெளியிட்ட ஆய்வில், உட்கார்ந்து வேலை செய்பவர்களை விட நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிகரெட் புகைப்பவர்கள், மது அருந்துபவர்களை விட நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது.
  • நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு ஸ்டேசிஸ் எக்ஸிமா ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்டாசிஸ் எக்ஸிமா என்பது கணுக்கால்களை சுற்றி கருமையான புள்ளிகள் ஆகும். அதாவது, கால்களில் நரம்புகளில் அதிக அளவு இரத்தம் குவிய தொடங்குகிறது. இது படிப்படியாக வளர்ந்து இரத்த நாளங்களில் இருந்து இரத்த கசிவை ஏற்படும். அதன் பிறகு, கால்களின் நரம்புகளில் இருந்து ரத்தம் கசியும்போது, சிறிது நேரம் கழித்து இது கரும்புள்ளிகளாக தோன்றும்.

இந்த பிரச்சனைகளை தடுக்க என்ன செய்யலாம்..?

எட்டு முதல் பத்து மணிநேரம் நிற்க வேண்டிய வேலைகளில் இருப்பவர்கள் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குறுகிய நடைப்பயிற்சி மேற்கொள்ளவும். அதேபோல், ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் 5 முதல் 10 நிமிடங்கள் உட்காரவும்.

ALSO READ: Food Recipe: காரசாரமான காரைக்குடி சிக்கன் வறுவல்.. எளிதாகவும், சூப்பராகவும் செய்வது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் நிற்பது சரியா..?

கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் நிற்பது கருவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை குறைத்து குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். அதேபோல், வாரத்தில் 25 மணி நேரத்திற்கு மேல் நிற்கும் பெண்களின் குழந்தைகளின் எடை 148 முதல் 198 கிராம் வரை குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒரு கர்ப்பிணி பெண் தன் கால்கள் அல்லது இடுப்பில் வலி ஏற்பட்டால் உடனடியாக உட்காருவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் ஆசிரியராக இருந்தாலோ அல்லது சமையலறையில் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தாலோ இடையில் ஒரு நடைப்பயிற்சி செய்துவிட்டு உட்காரலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?