5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Diabetes-friendly Food: சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிட ஆசையா? ஆரோக்கியமான இனிப்புகளை வீட்டிலேயே செய்யலாம்!

Diabetics Sweets: தீபாவளி பண்டிகையின்போது இனிப்புகள் சுவை மிகுந்ததாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் இனிப்புகளை சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளலாம். அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் கவலையின்றி சாப்பிடக்கூடிய இந்த இனிப்புகள் எளிதாக செய்யலாம். இது உடல் நலத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது.

Diwali Diabetes-friendly Food: சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிட ஆசையா?  ஆரோக்கியமான இனிப்புகளை வீட்டிலேயே செய்யலாம்!
ஆரோக்கியமான இனிப்புகள் (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 29 Oct 2024 12:36 PM

இனிப்பு இல்லாமல் எந்த பண்டிகையும் முழுமையடையாது. அதுவும் தீபாவளி பண்டிகை காலங்களில் மக்கள் இனிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்வார்கள். என்னதான் தீபாவளி பண்டிகையின்போது இனிப்புகள் சுவை மிகுந்ததாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் இனிப்புகளை சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளலாம். அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் கவலையின்றி சாப்பிடக்கூடிய இந்த இனிப்புகள் எளிதாக செய்யலாம். இது உடல் நலத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது.

ALSO READ: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.. உளுந்த வடை, பருப்பு வடை செய்வது எப்படி..?

ராகி புட்டு:

ராகி புட்டு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் தரும். ராகி புட்டு செய்ய முதலில் அடுப்பை ஆன் செய்து 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கொள்ளவும். அதில், 1 கப் ராகியை கொட்டி வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும். தொடர்ந்து, அரை கப் வெல்லத்தை நொறுக்கி, அடுப்பில் போட்டு பாகு பதத்தில் காய்ச்சவும். அதன்பின், வறுத்த ராகியில் வெல்ல பாகு சேர்த்து, நன்றாக கிளறி கொள்ளவும். கட்டி சேராத வகையில் நன்றாக உதிரி உதிரியாக கிளறி எடுத்து கொள்ளவும். சுவைக்கு ஏற்றாற்போல் உலர் பழங்களை தூவி பரிமாறினால் சுவையான ராகி புட்டு ரெடி.

ராகி புட் எடுத்து கொண்டால் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை கிடைக்கும்.

ஓட்ஸ் மற்றும் பாதாம் லட்டு:

பாதாம் மற்றும் ஓட்ஸ் லட்டு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். இதை செய்ய, முதலில் 1 கப் ஓட்ஸை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். தொடர்ந்து, மற்றொரு கடாயில் அரை கப் பாதாம் பருப்பை வறுத்து, கொரகொரப்பாக வறுத்து கொள்ளவும். இப்போது 1 டேபிள் ஸ்பூன் நெய்யை சூடு செய்து, 1 கப் வெல்லம் காய்ச்சி பாகு செய்து கொள்ளவும். அதன்பிறகு, வெல்ல பாகில் ஓட்ஸ், பாதாம் மற்றும் சிறிதளவும் ஏலக்காய் தூள் ஆகியவை கலந்து, லட்டுவாக உருட்டி சாப்பிடலாம்.

உளுந்து மாவு லட்டு:

சர்க்கரை நோயாளிகளுக்கு உளுந்து லட்டுகள் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. உளுந்தம் பருப்பை வறுத்து பொடி செய்து, அதனுடன் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது தேனையை கலந்து கொள்ளலாம்.

அத்திப்பழம் பர்ஃபி:

அத்திப்பழம் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவி செய்யும். அத்திப்பழத்தை மிக்ஸியில் அரைத்து சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துங்கள். இதனுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து பர்பி தயாரிக்கலாம்.

வெள்ளை ரஸ்குல்லா:

வெள்ளை ரஸ்குல்லா அல்லது பெங்காலி ரசகுல்லாக்களை சாப்பிட்டு தீபாவளியை ரசிக்கலாம். ஏனெனில் இந்த ரசகுல்லாக்களில் நிரப்பப்பட்ட சாற்றில் சர்க்கரை இருப்பதால், இந்த சாற்றை பிழிந்து எடுக்கலாம். ரசகுல்லாவில் இருந்து அதிகப்படியான சர்க்கரை தண்ணீரை மெதுவாக அழுத்தி, எடுத்த பிறகு ரஸ்குல்லாவை எடுத்து கொள்ளலாம்.

பேரிச்சம்பழம்:

பேரிச்சம்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பேரிச்சம்பழம் மற்றும் நட்ஸ் லட்டுகள் தீபாவளிக்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான உணவாக இருக்கும். இந்த ஆற்றல் நிறைந்த லட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

ALSO READ: Firecracker Burn: பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா..? உடனடியாக என்ன செய்யலாம்..?

புரத லட்டு:

வறுத்த வேர்க்கடலை (ஒரு கப்), எள் (ஒரு கப்), ஓட்ஸ் (அரை கப்), பேரீச்சம்பழம் (200 கிராம்), ஏலக்காய் தூள் (அரை தேக்கரண்டி) ஆரோக்கியமான லட்டு செய்யலாம். முதலில் தனித்தனியாக எள், வேர்க்கடலை, ஓட்ஸ் ஆகியவற்றை சூடு செய்யவும். இப்போது வறுத்த வேர்க்கடலை, ஓட்ஸ், எள் ஆகியவற்றை ஒன்றாக போட்டு அரைக்கவும். கொட்டை எடுத்த பேரீச்சம் பழத்தை பேஸ்ட் செய்து, அரைத்த பொடியை கலக்கி லட்டு செய்யுங்கள்.

பனீர் பர்பி:

பனீர் பர்பி செய்ய பனீர், ஏலக்காய், பால் பவுடர், தேசி நெய், வெல்லம் மற்றும் உலர் பழங்கள் தேவைப்படும். இதை செய்ய, முதலில் பனீரை பேஸ்ட் செய்து அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். கடாயில் நெய் சேர்த்து, அதில் வெல்லத்தை பாகு போல் காய்ச்சி பனீரை பேஸ்ட் மற்றும் உலர் பழங்களைச் சேர்க்கவும். ஒரு தட்டில் சிறிது வெண்ணெய் தடவி அதன் மீது தயார் செய்த பேஸ்ட்டைப் போடவும். இப்போது பர்ஃபி வடிவில் ரெடி செய்தால் போதுமானது.

Latest News