5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali 2024: தீபாவளி நாளில் இந்த விஷயத்தில் கவனம் தேவை.. இது உங்களுக்கு பிரச்சனையாக மாறலாம்..!

Deepavali: தீபாவளி பண்டிக்கையின்போது அனைத்து வயதினரும் தங்கள் கண்களை காயம் அல்லது ஏதேனும் பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது நல்லது. இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் உங்கள் கண்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் பட்டாசு வெடிக்கும்போது சில முக்கியமான விஷயங்களை செய்வது நல்லது.

Diwali 2024: தீபாவளி நாளில் இந்த விஷயத்தில் கவனம் தேவை.. இது உங்களுக்கு பிரச்சனையாக மாறலாம்..!
தீபாவளி (Image: getty)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 17 Oct 2024 21:41 PM

தீபங்கள் மற்றும் உற்சாகத்தின் திருநாளான தீபாவளி, நாடு முழுவதும் இன்னும் 2 வாரத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகை இந்தியருக்கு பல வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பட்டாசுகள் மற்றும் சுவையான இனிப்புகள் தீபாவளியை ஒவ்வொரு குடும்பத்தில் சிறப்பானதாக மாற்றும். தீபாவளியின்போது நாம் செய்யும் சிறிய கவனக்குறைவு கூட உங்கள் ஆரோக்கியத்திற்கு சிக்கலை தரும். அதிகப்படியான உணவு பழக்கவழக்கங்கள் உங்கள் உடல் எடையை அதிகரிப்பதோடு, சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளையும் கூட தரலாம். அதனால்தான், ஒவ்வொருவரும் தங்கள் உணவில் கவனமாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த பண்டிகை காலத்தில் உணவு மட்டுமின்றி, பட்டாசு வெடிப்பதிலும் அதிகமாக கவனம் செலுத்துவது நல்லது. பட்டாசுகளில் இருந்து வெளிப்படும் புகையானது சுவாச கோளாறுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். தீபாவளி பண்டிகையின்போது அனைத்து வயதினரும் தங்கள் கண்களை காயம் அல்லது ஏதேனும் பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது நல்லது. இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் உங்கள் கண்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் பட்டாசு வெடிக்கும்போது சில முக்கியமான விஷயங்களை செய்வது நல்லது.

ALSO READ: Monsoon health tips: மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு குட்பை.. இதை செய்து குணப்படுத்துங்கள்!

கண்களை எப்படி பாதுகாப்பது..?

பட்டாசு அல்லது வாணவேடிக்கைகளை கொளுத்தும்போது, அதில் இருந்து வெளிப்படும் தீப்பொறிகள் அல்லது புகை நேரடியாக உங்கள் கண்களுக்குள் ஊடுறவி பிரச்சனையை தரும். அந்தவகையில், புகையில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க ஏதேனும் கண்ணாடிகளை அணிவது மிக முக்கியம். இவற்றை அணிவதன்மூலம், பட்டாசுகளில் இருந்து வெளிப்படும் குப்பைகள், தீப்பொறிகள் மற்றும் பட்டாசு உள்ளே இருக்கும் இரசாயங்கள் உங்கள் கண்களில் படாமல் தவிர்க்கலாம்.

இடைவெளி:

பட்டாசு மற்றும் வாணவேடிக்கை வெடிப்பதில் இருந்து பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். தீப்பொறிகள் போன்ற பட்டாசுகள் பிரகாசமான ஒளி மற்றும் நெருப்பை வெளியிடுகின்றன. அப்போது பட்டாசுகளில் இருந்து வெளிப்படும் இரசாயனங்கள் கை அல்லது கால்களில் பட்டு தீக்காயத்தை ஏற்படுத்தலாம். எனவே, முடிந்தவரை தூரத்திலிருந்து அவற்றை வெடிக்க செய்வது நல்லது.

கைகளை கழுவுங்கள்:

பட்டாசுகளில் பல வகையான ரசாயனங்கள் உள்ளன. இவை கண்களில் பட்டால், கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, பட்டாசுகளை தொட்ட பிறகு அல்லது வெடித்த பிறகு உங்கள் முகம் அல்லது கண்களை தொடும் முன் நன்கு கழுவுங்கள். எனவே, உடல் சுகாதாரத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

ஃபுட் பாய்சன்:

தீபாவளி பண்டிகை காலங்களில் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால் பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்படும். ஒருவரது வயிறு நிரம்பியிருப்பதை உணர, ஒருவரது மூளை 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையில், அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வதை தவிர்த்து, உணவை சுவைக்கும்போது மெதுவாக மென்று சாப்பிடுங்கள். இது செரிமானத்தை தூண்டி, அஜீரண பிரச்சனையை சரி செய்யும்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட்.. வீட்டிலேயே சுவையான பால் பணியாரம், ஜிலேபி செய்வது எப்படி?

நிறைய தண்ணீரை குடியுங்கள்:

தீபாவளி நேரத்தில் பொதுவாக வீட்டில் இருக்கும் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு கொண்டிருப்போம். இது பிரச்சனையை தரும். இத்தகைய சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஒருவரின் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நீண்ட நேரம் வயிரை நிரம்பியதாக உணர செய்யும். இதன்மூலம், நீங்கள் அதிக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

வீட்டில் செய்யும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்:

கடைகளில் இருந்து வாங்கப்படும் இனிப்பு மற்றும் கார பலகாரங்களில் அதிக அளவு எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் இருப்பதால். இதை சாப்பிடுவதன் மூலம் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, முடிந்தவரை கடைகளில் வாங்கமால் வீடுகளில் செய்யப்படும் பலகாரங்களை சாப்பிடுங்கள். மற்றவர்களுக்கும் கொடுங்கள். இது அனைவருக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

மாஸ்க் அணியுங்கள்:

தீபாவளி நேரத்தில் மாஸ்க் அணிவது சிறப்பான ஒரு விஷயம். பட்டாசு வெடிக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் புகை உங்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தாலும். மேலும், தொண்டை வலியையும் தரலாம். இவற்றில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணியலாம்.

Latest News