5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Dessert Recipes: உறவினர்களை மயக்கும் உணவை பரிமாற ஆசையா? தீபாவளிக்கு படுஜோரான அல்வா ரெசிபி…!

Halwa Recipe: தீபாவளியன்று வீடுகளில் இனிப்பு முதல் காரணம் வரை அனைத்து வகையான உணவுகளும் பரிமாறப்படும். தீபாவளி பண்டிகையின்போது, வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வரும்போது, அவர்களுக்கு சுவையான காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், தீபாவளி அன்று உறவினர்களின் மனதை கவரும் வகையில், சூப்பரான மற்றும் வித்தியாசமான அல்வா வகைகளை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம். 

Diwali Dessert Recipes: உறவினர்களை மயக்கும் உணவை பரிமாற ஆசையா? தீபாவளிக்கு படுஜோரான அல்வா ரெசிபி…!
அல்வா (Image: Sneha Srivastava/IndiaPictures/UIG via Getty Images)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 15 Oct 2024 15:44 PM

தீபாவளி வந்துவிட்டது என்றாலே அனைவரும் குஷியாகிவிடுவார்கள். குடும்பங்கள் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து, இனிப்புகளை சுவைத்து மகிழ்ச்சியடைவார்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளியன்று வீடுகளில் இனிப்பு முதல் காரணம் வரை அனைத்து வகையான உணவுகளும் பரிமாறப்படும். தீபாவளி பண்டிகையின்போது, வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வரும்போது, அவர்களுக்கு சுவையான காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், தீபாவளி அன்று உறவினர்களின் மனதை கவரும் வகையில், சூப்பரான மற்றும் வித்தியாசமான அல்வா வகைகளை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.

ALSO READ: Food Recipes: டேஸ்டியான வெண்டைக்காய் மட்டன் குழம்பு.. 20 நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பர் டிஸ்!

தேங்காய் அல்வா:

தேங்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • தேங்காய் – 1
  • பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை – 250 கிராம்
  • ஏலக்காய் – 6 (பொடி செய்து கொள்ளுங்கள்)
  • முந்திரி – 200 கிராம் (அரைப்பதற்கு)
  • முந்திரி – 50 கிராம் (நெய்யில் வறுத்தது)
  • நெய் – 1 ஸ்பூன்

தேங்காய் அல்வா செ‌ய்வது எப்படி..?

  1. முதலில் தேங்காயையும் முந்திரியையும் தண்ணீர் விட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனோடு அரைத்த தேங்காய், முந்திரி விழுதை சேர்த்து, அடுப்பில் வைத்து விடாமல் கிளறவும்.
  3. இப்போது பால் சுண்டி வரும்போது சர்க்கரை மற்றும் ஏலப்பொடி போட்டு நன்றாக இடைவிடாமல் கிளறவும்.
    அல்வா பதத்திற்கு வந்ததும், ஒரு தட்டு அல்லது தாம்பள தட்டில் நெய்யை தடவி, அதில் இந்த அல்வாவை கொட்டி ஆற வைக்கவும்.
  4. இப்போது வறுத்த முந்திரியை அல்வா மேல் தூவி, சாப்பிட்டால் சுவையான தேங்காய் அல்வா ரெடி.

கா‌சி அ‌ல்வா

கா‌சி அ‌ல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • பூச‌ணி‌க்கா‌ய் து‌ண்டு – பெ‌ரியது
  • பா‌ல் – 4 தே‌க்கர‌ண்டி
  • ச‌ர்‌க்கரை – 3 க‌ப்
  • கேச‌ரி‌ப் பவுட‌ர் – ‌சி‌றிதளவு
  • க‌ண்டெ‌ன்‌ஸ்டு ‌‌மி‌ல்‌க் – 1 க‌ப்
  • நெ‌ய் – 1 க‌ப்
  • ஏல‌க்கா‌ய் தூ‌ள் – கா‌ல் தே‌க்கர‌ண்டி
  • ப‌ச்சை‌க் க‌ற்பூர‌ம் – ‌சி‌றிது
  • மு‌ந்‌தி‌ரி – 10

ALSO READ: Food Recipes: சாப்பிட ஆசையை தூண்டும் கொய்யா சட்னி.. இப்படி செய்து ருசித்து பாருங்க..!

காசி அல்வா செய்வது எப்படி..?

  • காசி ஹல்வா என்பது வெள்ளை பூசணி, நெய் மற்றும் சர்க்கரையை முக்கிய பொருட்களாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு வகையாகும்.
  • முதலில் பூச‌ணி‌க்காயை‌த் துரு‌வி அ‌தி‌ல் ‌‌சி‌றிது ‌நீ‌ர்‌வி‌ட்டு சாறை‌ப் ‌பி‌ழி‌ந்து கொ‌ள்ளவு‌ம். ச‌க்கையை ம‌ட்டு‌ம் எடு‌த்து‌ அதனை பா‌ல் ‌வி‌ட்டு ‌மி‌க்‌சி‌யி‌ல் மைய அரை‌த்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயி‌ல் நெ‌ய்யை ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம், அ‌தி‌ல் அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் ‌விழுது, ச‌ர்‌க்கரை, க‌ண்டெ‌‌ன்‌ஸ்டு ‌மி‌ல்‌க் ஆ‌கியவ‌ற்றை ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக சே‌ர்‌த்து ‌கிளறவு‌ம்.
  • தொடர்ந்து எடுத்து வைத்துள்ள கேச‌ரி‌ப் பவுடரை ‌சி‌றிது ‌நீ‌ரி‌ல் கரை‌த்து‌க் கொ‌ண்டு கடாயி‌ல் ஊ‌ற்றவு‌ம்.
  • இறு‌தியாக ஏல‌ப்பொடி, ப‌ச்சை‌க் க‌ற்பூர‌ப் பொடி சே‌ர்‌த்து ‌கிள‌றி‌விடவு‌ம்.
  • உறவினர்களுக்கு ப‌ரிமாறு‌ம் போது நெ‌ய்‌யி‌ல் வறு‌த்த மு‌ந்‌தி‌ரியை‌ தூவினால் சுவை தாறுமாறாக இருக்கும்.

பாதாம் அல்வா:

பாதாம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • பாதாம் – 200 கிராம்
  • முந்திரி – 100 கிராம்
  • பால்  – 1/2 லிட்டர்
  • சர்க்கரை – 1/2 கிலோ
  • மஞ்சள் நிற புட் கலர்
  • ஜாதிக்காய் தூள்
  • குங்குமப்பூ – சிறிதளவு

பாதாம் அல்வா செய்வது எப்படி..?

  1. பாதாம் அல்வா செய்வதற்கு 200 கிராம் பாதாம் பருப்பை சுடுதண்ணீரிலும், 100 கிராம் முந்திரிப் பருப்பை சாதாரண தண்ணீரிலும் ஊற வைக்க வேண்டும்.
  2. இப்போது பாதாம் பருப்பினை தோல் உரித்து மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு காய்ச்சிய பால் சேர்த்து அரைக்க வேண்டும்.
  3. அதேபோல், பாதாம் ஓரளவு அரைப்பட்டதும் ஊற வைத்திருக்கும் முந்திரியையும் இதனுடன் சேர்த்து கொஞ்சமாக பால் விட்டு மைபோல அரைத்துக் கொள்ள வேண்டும்.
  4. இப்பொழுது அடி கனமாக இருக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதுகளை சேர்க்க வேண்டும்.
  5. சிறிதளவு தண்ணீர் சேர்த்து 500 கிராம் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். சீனி சேர்த்த பின்பு மஞ்சள் நிற புட் கலர், ஜாதிக்காய் தூள் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கிளற வேண்டும்.
  6. அடுப்பை குறைவான தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  7. 500 கிராம் நெய்யை சிறிது சிறிதாக கிளறி, அல்வா இறுகி வரும் பொழுது மீண்டும் நெய் சேர்ப்பதை நிறுத்தி அடுப்பை அணைத்து அல்வாவை இறக்கி விடலாம்.
  8. இப்போது, சிறிதளவு முந்திரி மற்றும் பாதாமை துண்டு துண்டாக வெட்டி மேலே தூவினால் சுவையான பாதாம் அல்வா தயார்.

Latest News