5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Care: பட்டாசு புகை ஆபத்தானதா..? சுவாச பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்யலாம்..?

Asthma: உங்களுக்கு ஏற்கனவே சுவாச பிரச்சனைகள் இருந்தால், உங்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்த இன்ஹேலர்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிரச்சனை வரும்போது பயன்படுத்துங்கள். தீபாவளி நாள் மட்டுமின்றி, மற்ற நாட்களிலும் மருத்துவர் கொடுக்கும் அனைத்து மருந்துகளையும் தவறாமல் எடுத்து கொள்ளுங்கள்.

Health Care: பட்டாசு புகை ஆபத்தானதா..? சுவாச பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்யலாம்..?
பட்டாசு புகை (Image: freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 31 Oct 2024 15:03 PM

தீபாவளியின்போது பட்டாசுகள் வெடித்து காற்று மாசுபாடு ஏற்படும். இது ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். மாசுபாடு என்பது காற்றில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் துகள்கள் மர்றும் வாயுக்கள் உடலில் உள்ள சுவாச மண்டலத்தை சேதப்படுத்தும். இது தொடர்ந்து, ஆதிக்கம் செலுத்தி சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக இருப்பது மிக முக்கியம்.

தீபாவளி நாளில் முடிந்தவரை வீட்டிற்குள் இருந்து கொண்டாடுங்கள். இது உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தடுக்கும். மேலும், வெளியே சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மாஸ்க் உள்ளிட்டவற்றை போட்டு கொண்டு செல்லுங்கள். இது பெரும் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

ALSO READ: Diwali 2024: பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

பட்டாசு புகை ஆபத்தானதா..?

தீபாவளி நாளில் வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகை மிகவும் ஆபத்தானது. பட்டாசு புகையில் சல்பர், நைட்ரேடு அதிகம் உள்ளது. இந்த இரசாயங்கள் நுரையீரலுக்கு மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக நுரையீரல் தொற்று பிரச்சனை உள்ளவர்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு, பட்டாசு வெடிக்கும்போது அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.

புகையில் இருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்..?

பட்டாசு புகையில் ஆஸ்துமா தாக்குதல்களை ஏற்படுத்தும் இரசாயனங்கள் உள்ளன. இந்த புகைகள் வீட்டிற்குள் வராமல் தடுக்க, மாலை வேளைகளில் ஜன்னல்கள், கதவுகளை மூடி வைக்கவும். இது தவிர, ஆஸ்துமா மற்றும் சுவாச நோயாளிகள் பட்டாசுகளுக்கு அருகில் செல்வதையோ அல்லது அவற்றை எரிப்பதையோ தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம்.

உங்களுக்கு ஏற்கனவே சுவாச பிரச்சனைகள் இருந்தால், உங்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்த இன்ஹேலர்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிரச்சனை வரும்போது பயன்படுத்துங்கள். தீபாவளி நாள் மட்டுமின்றி, மற்ற நாட்களிலும் மருத்துவர் கொடுக்கும் அனைத்து மருந்துகளையும் தவறாமல் எடுத்து கொள்ளுங்கள்.

உடலை எப்போதும் நீரேற்றமாக வைப்பது முக்கியம். தீபாவளியின்போது உற்சாக மகிழ்ச்சியில் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவோம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, 8 முதல் 10 கிளாஸ் தண்ணீரை குடியுங்கள். இது உடலில் சேரும் நச்சுகளை வெளியேற உதவி, சுவாச பிரச்சனைகளை குறைக்கும். தண்ணீர் பற்றாக்குறையால், சுவாசக் குழாயில் வறட்சி ஏற்பட்டு, சுவாசிப்பதில் சிரமம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல், சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிக காரணம் மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு திடீரென பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்யலாம்..?

எவ்வளவு பாதுகாப்பாக இருந்தும், சில நோயாளிகளுக்கு ஆஸ்துமா பிரச்சனை ஏற்பட்டால், முதலில் மருத்துவர்கள் பரிந்துரைத்த இன்ஹேலர் அல்லது நெபுலைசர்களை பயன்படுத்துங்கள். ஆஸ்துமா பிரச்சனை அதிகமாக இருந்தால் அதிக அளவு இன்ஹேலரை பயன்படுத்தலாம். ஆஸ்துமா தாக்குதல் ஏற்படும்போது, சுவாச குழாய்கள் சுருங்கி சுவாசிப்பதில் பிரச்சனையை ஏற்படும். ஆஸ்துமா பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ALSO READ: Firecracker Burn: பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா..? உடனடியாக என்ன செய்யலாம்..?

கண்டோலர் இன்ஹேலரை தொடர்ந்து பயன்படுத்தினால் ஆஸ்துமா அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை பயன்படுத்துங்கள். எப்போது, உங்களிடம் இன்ஹேலரை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது அவசர காலத்தில் உங்களுக்கு உடனடி நிவாரணத்தை தரும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை பின்பற்றி ஆஸ்துமா நோயாளிகள் தீபாவளியை பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான முறையில் கொண்டாடுக்கள். தீபாவளி நாளான இன்று ஆஸ்துமா அறிகுறிகள் அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். சுவாச பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனை. இதை எளிதாக புறக்கணிக்கப்படக்கூடாது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News