Diwali Cleaning Tips for Home: தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்ய போகிறீர்களா..? இவற்றை செய்தால் வீடு பளீச் பளீச்..!

Diwali Cleaning: வீட்டை சுத்தம் செய்வதற்கு முன் ஒரு பட்டியலை உருவாங்குங்கள். முதலில் எந்தெந்த பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும், எங்கிருந்து சுத்தம் செய்ய தொடங்க வேண்டும், சுத்தம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் போன்றவற்றை தயார் செய்து கொள்ளுங்கள்.

Diwali Cleaning Tips for Home: தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்ய போகிறீர்களா..? இவற்றை செய்தால் வீடு பளீச் பளீச்..!

வீடு சுத்தம் (Image: Freepik)

Published: 

25 Oct 2024 15:51 PM

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முடிந்து, இப்போது தீபாவளி பண்டிகை விரைவில் வர இருக்கிறது. ஆயுத பூஜைக்கு வீட்டை சுத்தம் செய்தவர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய அளவில் சுத்தம் செய்ய வேண்டிய வேலை இருக்காது. ஆனால், ஆயுத பூஜைக்கு சுத்தம் செய்யாமல், தீபாவளிக்கு சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதிக வேலை இருக்கும். இன்னும் தீபாவளிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், சுத்தம் செய்ய உங்களுக்கு அதிக நேரம் இருக்காது. வீட்டை சுத்தம் செய்வது குறித்து உங்களுக்கு எந்த ஐடியாவும் இல்லையெனில், வீட்டை எப்படி சிறப்பாகவும், எளிதாகவும் சுத்தம் செய்யலாம் என்ற எளிய குறிப்புகளை உங்களுக்கு தருகிறோம்.

ALSO READ: Viral Video : இதுதான் தேசப்பற்று.. தேசிய கீதம் பாடும்போது அசையாமல் நின்ற பெயிண்டர்.. வைரல் வீடியோ!

  • ஒற்றை ஆளாக வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். இது உங்களுக்கு அதிகபடியான சோர்வை தரும். வீட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கும்போது, சுத்தம் செய்ய விடுமுறையை நிர்ணயிக்கவும்.
  • குடும்பத்தில் இருக்கும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதியை ஒதுக்குங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் சமையலறையை சுத்தம் செய்தால், உங்கள் கணவரை ஹால் அல்லது பெட்ரூமை சுத்தம் செய்ய சொல்லுங்கள்.
  • வீட்டை சுத்தம் செய்வதற்கு முன் ஒரு பட்டியலை உருவாங்குங்கள். முதலில் எந்தெந்த பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும், எங்கிருந்து சுத்தம் செய்ய தொடங்க வேண்டும், சுத்தம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் போன்றவற்றை தயார் செய்து கொள்ளுங்கள்.
  • வீட்டில் நீண்ட காலமாக இருக்கும் தேவையற்ற பொருட்களை முதலில் வெளியேற்றுங்கள். அதாவது, கிழிந்த மற்றும் பழைய துணிகள், உடைந்த பொருட்கள், நெளிந்த பாத்திரங்கள் போன்றவற்றை வெளியேற்றுங்கள். அதேபோல், நீங்கள் பயன்படுத்தாத, ஆனால் நல்ல நிலையில் உள்ள பொருட்களை தேவைப்படும் ஒருவருக்கு கொடுத்து உதவலாம்.
  • வீட்டை சுத்தம் செய்வதற்கு முன், முகம் மற்றும் தலை முடியை மாஸ்க் அல்லது துணியால் மூடி கொள்ளவும். இதனுடன், உங்கள் கைகளில் ரப்பர் கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள். இது உங்கள் கைகளில் காயம் ஏற்படாமல் பாதுகாக்கும். உங்கள் கண்களை தூசியிலிருந்து பாதுகாக்க கண்ணாடிகளை அணியுங்கள்.
  • ஒரே நாளில் வீடு முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஒரே ஆளாக வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், குறைந்தது 2 முதல் 3 நாட்கள் எடுத்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு பெரிய அளவில் சோர்வை தராது. ஒரே நாளில் சுத்தம் செய்யும்போது, காய்ச்சல், உடல் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • சுத்தம் செய்வதற்கு முன், சில பொருட்களை மீண்டும் மீண்டும் தேடாமல் இருக்க, தேவையான வினிகர், சுடுதண்ணீர், காட்டன் துணி, வேக்யூம் கிளீனர், ப்ளீச்சிங் பவுடர் போன்ற அனைத்து பொருட்களையும் உங்கள் பக்கத்தில் எடுத்து வைத்து கொள்ளங்கள்.

ALSO READ: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் கார வகைகள்.. காரா பூந்தி, காரா சேவு செய்வது எப்படி..?

இப்படி சுத்தம் செய்ய தொடங்குங்கள்:

  • வீட்டை சுத்தம் செய்ய தொடங்கும்போது வீட்டில் இருக்கும் மெத்தை விரிப்பான், திரைச்சீலைகள் மற்றும் தரைவிரிப்புகளை அகற்றவும். பின்னர் வீட்டில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய தொடங்குங்கள்.
  • சிலந்தி வலைகள் இருந்தால் வீட்டின் மேல் பகுதிகளில் இருந்து சுவர்களை சுத்தம் செய்ய தொடங்குங்கள். முதலில் தரையை சுத்தம் செய்துவிட்டால், சுவர்களில் இருக்கும் தூசிகள் தரையில் விழுந்து சுத்தமான இடத்தை நாசம் செய்யும்.
  • சுவர்களை சுத்தம் செய்யபின் அனைத்து அறைகளிலும் இருக்கும் பேன்களின் இறக்கைகளை சுத்தம் செய்யுங்கள். பேன்களை சுத்தம் செய்வதற்கு முன், படுக்கைகள் மீது பழைய துணி அல்லது செய்தித்தாள்களை விரித்தால் தூசி மெத்தைகளை அழுக்கு செய்யாது.
  • மின்விசிறிகளை சுத்தம் செய்தபின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்யுங்கள்.
  • தொடர்ந்து, ஒரு காட்டன் துணியை சோப்பு கரைசலில் நனைத்து நன்றாக பிழிந்து கொள்ளவும். இப்போது இதை கொண்டு சுவிட்ச் போர்டை சுத்தம் செய்யவும். சுவிட்ச் போர்ட் காயந்த பிறகு, சுவிட்சில் கை வையுங்கள்.
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!