Diwali 2024: பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்!
First Aid for burn: தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் பண்டிகை தீபாவளி. ஆனால், சில நேரங்களில் பட்டாசு வெடிக்கும் உற்சாகத்தில் தற்செயலாக விபத்துகளில் சிக்கி விடுகிறோம். தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவருக்கோ தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? என்ன செய்யக்கூடாது? காயம் ஏற்பட்டால் முதலுதவி முறையாக வழங்குவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்
தீபாவளியன்று, இருளை விரட்டி வெளிச்சம் தருவதற்காக விளக்குகள் ஏற்றப்படுகின்றன. மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க விரும்புகின்றனர். பட்டாசு வெடிப்பதால் அவ்வப்போது தீக்காயம் மற்றும் காலில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் எப்படியாவது காயம் பட்டுவிடும். பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வெப்பம் ஆகியவை காயங்களின் வலியின் தீவிரத்தை அதிகப்படுத்தும். குழந்தைகளின் தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. பட்டாசு வெடிக்கும் போது எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் விபத்துகள் நடக்கின்றன. இந்நிலையில், தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சில குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.
ஆடைகளை உடனடியாக அகற்றவும்:
பட்டாசு வெடிக்கும் போது தீப்பிடித்தால் உடனடியாக உடைகள், நகைகள், பெல்ட்கள் அனைத்தையும் கழற்றவும். அவை எரிந்த தோலில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, முடிந்தவரை, காயமடைந்த நபரின் உடலில் இருந்து அனைத்து ஆடைகள் மற்றும் நகைகளை அகற்றவும். ஆனால் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஆடை ஒட்டிக்கொண்டால், அதை நீங்களே அகற்ற முயற்சிக்காதீர்கள்.
குளிர்ந்த நீரில் கழுவவும்:
யாராவது பட்டாசு வெடித்து அவதிப்பட்டால், காயம்பட்ட இடத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். ஆனால் எரிந்த இடத்தில் ஐஸ் தடவாதீர்கள். இப்படி ஐஸ் தடவினால் தீப்புண் வலி அதிகமாகும். எரிந்த பகுதியை தண்ணீர் குழாயின் கீழ் வைக்கவும். காயங்களை குளிர்விப்பது வலி, வீக்கம் மற்றும் காயத்தின் அபாயத்தை குறைக்கிறது.
காயமடைந்த பகுதியை துணியால் கட்டவும்:
காயமடைந்த பகுதியில் கட்டு போட வேண்டும். ஆனால் காயம்பட்ட இடத்தில் கட்டுகளை சற்று தளர்வாக சுற்றி வைக்கவும். காயத்தை மூடி வைத்தால், காயம் விரைவில் குணமாகும்.
மாய்ஸ்சரைசர் லோஷனைப் பயன்படுத்துங்கள்:
தீக்காயத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் ஈரப்பதமூட்டும் லோஷனைப் பயன்படுத்துங்கள். இது தோல் வறட்சியைத் தடுக்கிறது. இது தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் கொப்புளங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கிரீம், லோஷன் அல்லது மருந்து எதையும் பயன்படுத்த வேண்டாம். மேலும் வலி நிவாரணி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
Also Read: Diwali 2024: பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
எரிந்த கை அல்லது காலை உயர்த்தவும்:
எரிந்த பகுதியை சாதாரண அளவை விட சற்று உயரமாக வைக்கவும். இவ்வாறு செய்வதால் அந்த பகுதியில் உள்ள வீக்கம் குறையும். அதிலிருந்து தண்ணீர் வருவதை தடுக்கும். கைகளையும் கால்களையும் முடிந்தவரை நேராக வைத்திருங்கள்.
பதற்றமடைய கூடாது:
தீக்காயம் பட்டவர்கள் பதற்றம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடனடியாக அவர்களை கீழே படுக்க வைத்து உருள வைக்க வேண்டும். அதன் பின்னர் தீயை மணல் கொண்டு அல்லது தண்ணீர் கொண்டு அணைக்க வேண்டும். பின் அவர்கள் சுய நினைவில் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சுய நினைவில் இல்லை என்றால் முதலுதவியாக CPR முறையை செய்ய வேண்டும் அல்லது உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையை அணுக வேண்டும். அவர்களுக்கு சுய நினைவு இருந்தால் தீக்காயப்பட்ட இடத்தை எரிச்சல் அடங்கும் வரை தண்ணீரில் வைத்திருக்க வேண்டும்.
Also Read: Diwali 2024: தீபாவளி திருநாளில் எண்ணெய் குளியல்.. நல்ல நேரம் மற்றும் வழிபடும் முறை!
செய்யக்கூடாதவை:
- தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ந்த நீரையோ ஐஸ் கட்டிகளையோ கண்டிப்பாக வைக்க கூடாது. இப்படி செய்யும்போது அந்தப் பகுதியில் இரத்த குழாய் சுருக்கம் ஏற்பட்டு இரத்தம் இல்லாமல் செயலிழந்து விடும்.
- தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஒட்டி இருக்கும் துணிகளை எடுக்க முயற்சிக்கக் கூடாது. இப்படி செய்தால் சருமத்தில் இருக்கும் திசுக்களோடு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
- தீக்காயம் பட்ட இடத்தில் பேனா மை, காபித்தூள் போன்ற பொருட்களை கண்டிப்பாக வைக்கக் கூடாது. இப்படி செய்வது மூலம் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
- தீக்காயம் ஏற்பட்ட இடங்களில் நீர் கொப்பளங்கள் ஏற்படும். அதை ஊசியை வைத்தோ கையை வைத்தோ பியிக்க கூடாது. இதனால் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
- காயம் பட்ட இடத்தில் கட்டு போடுவதற்கு காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள். உள்ளன் துணிகளை பயன்படுத்த வேண்டாம். அதில் இருக்கும் நூல்கள் சருமத்தில் ஒட்டிக்கொண்டு தொற்று ஏற்படுத்தும்.