Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.. உளுந்த வடை, பருப்பு வடை செய்வது எப்படி..?

Deepavali: தீபாவளி தொடங்கும் ஒருநாள் முன்பே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சுவையான திண்பண்டங்களை சுவைக்க குடும்பத்தார்களுக்கு வழங்குவார்கள். அந்தவகையில், இன்று தீபாவளி நாளில் சாப்பிட உளுந்த வடை மற்றும் பருப்பு வடை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம். 

Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.. உளுந்த வடை, பருப்பு வடை செய்வது எப்படி..?

வடை (Image: freepik)

Published: 

29 Oct 2024 11:00 AM

அவ்வளவுதான் தீபாவளி வந்துவிட்டது. கிட்டத்தட்ட அனைவரும் வீடுகளிலும் தீபாவளிக்கு புது ஆடைகள் முதல் அனைத்து வகையிலான பொருட்களை வாங்கி தயார் படுத்தி கொண்டு இருக்கிறோம். தீபாவளி என்பது குடும்பத்துடன் கொண்டாடப்படும் மகிழ்ச்சி நிறைந்த பண்டிகையாகும். இந்த நல்ல நாளில் நமக்கு பிடித்த உணவுகளை உட்கொண்டு, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். தீபாவளி தொடங்கும் ஒருநாள் முன்பே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சுவையான திண்பண்டங்களை சுவைக்க குடும்பத்தார்களுக்கு வழங்குவார்கள். அந்தவகையில், இன்று தீபாவளி நாளில் சாப்பிட உளுந்த வடை மற்றும் பருப்பு வடை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. பாதுஷா, ஜாங்கிரி செய்வது எப்படி..?

உளுந்த வடை

உளுந்த வடை செய்ய தேவையான பொருட்கள்:

  • உளுந்தம்பருப்பு -2 கப்
  • பச்சரிசி மாவு – 1/2 கப்
  • பெருங்காயம்- 1/2 ஸ்பூன்
  • மிளகு- 1/4 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – தேவையான அளவு
  • பச்சைமிளகாய்- 4
  • உப்பு – தேவையான அளவு
  • கடலை எண்ணெய்- வடை சுட தேவையான அளவு
  • கருவேப்பிலை- சிறிதளவு
  • கொத்தமல்லி தழை-1 கப் (பொடி பொடியாக கட் செய்து கொள்ளவும்)

உளுந்த வடை செய்வது எப்படி..?

  1. முதலில் எடுத்து வைத்துள்ள 2 கப் உளுந்தம் பருப்பை நன்றாக சுத்தம்செய்து 2 அல்லது 3 மணிநேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
  2. இப்போது, கிரைண்டை ஆன் செய்து ஊற வைத்த உளுந்தம் பருப்பை போட்டி சிறிதுசிறிதாக நீட் தெளித்து நன்றாக அரைக்கவும்.
  3. மாவு வெண்ணெய் போன்ற பதத்திற்கு வந்தவுடன் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  4. பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை ஆகியவற்றை ரெடியாக எடுத்து வைக்கவும்.
  5. தொடர்ந்து, அதே உளுந்தம் பருப்பு அரைத்த மாவில் 1/2 கப் பச்சரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
  6. இப்போது சின்ன வெங்காயம் உள்ளிட்ட கட் பண்ணிய அனைத்து பொருட்களையும் மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
  7. அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்து கடலை எண்ணெய் ஊற்றி சூடாக விடவும்
  8. அரைத்து வைத்துள்ள மாவை முதலில் உருண்டைகளாக உருட்டி வடைகளாகத்தட்டி கொள்ளவும்.
  9. தொடர்ந்து, சூடான எண்ணெயில் வடைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான உளுந்த வடை ரெடி
  10. பச்சரிசி அரிசி மாவு சேர்ப்பதன் மூலம் எண்ணெய் அதிகமாகவும் இழுக்காது, வடையும் நன்றாக பொரிந்து பொன்நிறத்தில் இருக்கும்.
  11. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொத்தமல்லி தழையை அதிகமாக சேர்த்து கொள்ளலாம், இது தனி மற்றும் அதிக சுவையை தரும்.

பருப்பு வடை

பருப்பு வரை செய்ய தேவையான பொருட்கள்:

  • கடலைப்பருப்பு – 2 கப்
  • வெங்காயம் – 2
  • வர மிளகாய் – 2
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3 முதல் 4
  • இஞ்சி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
  • எண்ணெய் – வடை சுட தேவையான அளவு

ALSO READ: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் கார வகைகள்.. காரா பூந்தி, காரா சேவு செய்வது எப்படி..?

பருப்பு வடை செய்வது எப்படி..?

  • முதலில் எடுத்து வைத்துள்ள 2 கப் கடலைப்பருப்பு நன்றாக சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • 2 மணி நேரம் நன்றாக ஊறவைத்தபின் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சேர்த்து கொள்ளவும்
  • அதன்பிறகு வரமிளகாய், சோம்பு சேர்த்து மைய அரைக்காமல் 3 முதல் 4 ஆக அரைத்து கொள்ளவும்.
  • இப்போது, அரைத்த மாவை  ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, இதனுடன் பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  • தொடர்ந்து, அதே மாவு கலவையில் வடைக்கு தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கி எடுத்து கொள்ளவும்.
  • மாவு வடை பதத்திற்கு வந்தவுடன் மாவை, வடைக்கு ஏற்ற உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  • இப்போது வடையை தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பருப்பு வடை தயார்.
  • வடையை எண்ணெயில் பொரிப்பதற்கு முன், எலுமிச்சை சைஸ் அளவில் புளியை சூடான எண்ணெயில் போடவும். இது எண்ணெயில் உள்ள அழுக்கு மற்றும் கசடுகளை உறிஞ்சுவிடும்.
இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!