5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Sweet: தீபாவளி ஸ்வீட் பட்டியல் ரெடியா? தினை பணியாரம், நெய்யப்பம் செய்து அசத்துங்க!

Diwali Sweets Recipes: தீபாவளிக்கு கடைகளில் நாம் வாங்கும் இனிப்பு பண்டங்கள் எத்தனை நாட்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது என்று தெரியாது. இதை அதிகமாக சாப்பிடும்போது நமக்கு பிரச்சனையை தரலாம். அந்தவகையில், இன்று வீட்டிலேயே சுவையான தினை கருப்பட்டி பணியாரம் மற்றும் நெய்யப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம். 

Diwali Sweet: தீபாவளி ஸ்வீட் பட்டியல் ரெடியா? தினை பணியாரம், நெய்யப்பம் செய்து அசத்துங்க!
பணியாரம் – நெய்யப்பம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Oct 2024 18:20 PM

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் தீபாவளி முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இன்றைய நல்ல நாளில் குடும்பத்தினர் ஒன்றிணைந்து புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். தொடர்ந்து, வீட்டில் சுடப்பட்ட பல காரங்கள், கடைகளில் வாங்கப்பட்ட இனிப்புகளை உண்டு மகிழ்வர். தீபாவளி தொடங்கும் நாளுக்கு முன்பே, அதிகாலை எழுந்து பெரியவர்கள் தங்கள் வீட்டு குழந்தைகள் ஆசையாக சாப்பிடும் சுவையான பலகாரங்களை சுட தொடங்குவர். சுட்டபிறகு, இது தங்களது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி சுற்று புறத்தில் இருக்கும் வீடுகளுக்கு கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை வெளிப்படுத்துவர்.

இப்படியான சூழ்நிலையில் கடைகளில் நாம் வாங்கும் இனிப்பு பண்டங்கள் எத்தனை நாட்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது என்று தெரியாது. இதை அதிகமாக சாப்பிடும்போது நமக்கு பிரச்சனையை தரலாம். அந்தவகையில், இன்று வீட்டிலேயே சுவையான தினை கருப்பட்டி பணியாரம் மற்றும் நெய்யப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு சூப்பர் ஸ்வீட் செய்ய ஆசையா..? முந்திரி கேக், லட்டு செய்து அசத்துங்க..!

தினை கருப்பட்டி பணியாரம்:

தினை கருப்பட்டி செய்ய தேவையான பொருட்கள்:

  • தினை – ஒரு கப்,
  • தூளாக நொறுக்கப்பட்ட கருப்பட்டி – முக்கால் கப்
  • ஏலக்காய் -5
  • தேங்காய் துருவல் – அரை கப்

தினை கருப்பட்டி செய்வது எப்படி..?

  1. முதலில் தினை கருப்பட்டி செய்ய தேவையான முக்கியமான பொருளான தினையை 3 மணி நேரம் நன்கு ஊற வைக்கவேண்டும்.
  2. பின் தினை நன்றாக ஊறியதும் அதை மிக்ஸியில் போட்டு மாவு பதத்தில் தூளாக அரைத்துக் கொள்ளவும்.
  3. தொடர்ந்து, தினை மாவுடன் கருப்பட்டி, நசுக்கப்பட்ட ஏலக்காய் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து கொள்ளுங்கள்
  4. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தேங்காய் துருவலுக்கு பதிலாக தேங்காயைச் சிறு சிறு துண்டுகளாகவும் போட்டு கொள்ளலாம்.
  5. தேங்காய் துருவலாக எடுத்துக்கொள்வதற்கான காரணம், தேங்காய் துண்டுகளாக போடும்போது, அவை அரைக்கும் போது சற்று அரைபடாமல் இருக்கும்.
  6. பின்னர் அது சாப்பிடும் போது அவ்வப்போது வாயிற்கு தட்டுப்படலாம்.
  7. பிறகு அரைத்தக் கலவையில் தேவையான அளவில் தண்ணீர் ஊற்றி பணியார பதத்திற்கு கெட்டியான மாவாக எடுத்துக்கொண்டு, பணியார சட்டியில் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.
  8. பின் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுத்தால் சுவையான தினை கருப்பட்டி பணியாரம் ரெடி.

நெய்யப்பம்:

நெய்யப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – 1/2 கப்
  • கோதுமை மாவு – 1/2 கப்
  • வெல்லம்
  • பழுத்த வாழைப்பழம் – 2
  • ஏலக்காய் பொடி – சிறிதளவு
  • வறுத்த எள் – 1 டீஸ்பூன்
  • நறுக்கிய தேங்காய் துண்டுகள்
  • நெய் – தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் – தேவையான அளவு

ALSO READ: Diwali Dessert Recipes: உறவினர்களை மயக்கும் உணவை பரிமாற ஆசையா? தீபாவளிக்கு படுஜோரான அல்வா ரெசிபி…!

நெய்யப்பம் செய்வது எப்படி..?

  1. முதலில் கடையில் வாங்கிய வெல்லத்தை நன்றாக உடைத்து, பாகு பதத்தில் காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்ததாக, ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய தேங்காய் துண்டுகளை  பொன்னிறம் வரும் வரை நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. இப்போது, பழுத்த வாழைப்பழத்தை நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. எடுத்து வைத்துள்ள அரிசி மாவையும், கோதுமை மாவையும் எண்ணெய் மற்றும் தண்ணீர் படாத கடாயில் ஒரு நிமிடத்திற்கு நிறம் மாறாமல் வறுக்கவும்.
  5. தொடந்து ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தயாரித்து வைத்துள்ள அரிசி மாவு, கோதுமை மாவு, பிசைந்து அரைத்த வாழைப்பழம்  மற்றும் வறுத்த தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக போட்டு தோசை மாவு பதத்திற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலக்கவும்.
  6. இவற்றை தனியாக எடுத்து வைத்து நன்றாக அரை மணி நேரம் ஊறவைத்தபின், அந்த மாவு கலவையில் சிறிதளவு உப்பு,  ஏலக்காய் பொடி, வறுத்த எள், போன்றவற்றை சேர்க்கவும்.
  7. இவை அனைத்து தயார் என்றால் நெய்யப்பத்திற்கான மாவு தயார் என்று அர்த்தம்.
  8. வழக்கம்போல் ஒரு பணியார சட்டியை அடுப்பில் வைத்து அனைத்து குழியிலும் சிறிதளவு நெய் விடவும்.
  9. தொடர்ந்து, தயாரித்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.
  10. அடுப்பை சிமில் வைத்து நன்றாகவும், பொன்னிறமாகவும் ஆகும் வரை வேகவைத்தால் சுவையான நெய்யப்பம் ரெடி.

Latest News