5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Sweet: தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்ய ஆசையா? உங்களுக்காக வாழைப்பழ அல்வா ரெசிபி!

Deepavali: கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் நம் உடல்நலத்தை கெடுக்கும் என்பதால், கடைகளில் கிடைக்கும் இனிப்பு வகைகளை நாம் வீட்டிலேயே செய்து ருசித்து மகிழலாம். அந்தவகையில், இன்று நாம் தீபாவளி ஸ்பெஷலாக அசோகா அல்வா, வாழைப்பழ அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

Diwali Sweet: தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்ய ஆசையா? உங்களுக்காக வாழைப்பழ அல்வா ரெசிபி!
வாழைப்பழ அல்வா (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 20 Oct 2024 11:58 AM

தீபாவளி பண்டிகை இன்னும் இரண்டு வாரத்தில் வர இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு வரும் இன்று முதலே தீபாவளிக்கு தயாராகி வருகின்றனர். அவரவருக்கு தேவையான புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்க தொடங்கிவிட்டனர். தீபாவளி நாளில் என்னதான் புது ஆடைகள், பட்டாசு இருந்தாலும் இனிப்பு இல்லாமல் அன்றைய நாள் முழுமை பெறாது என்றே சொல்லலாம். கடைகளில் கிடைக்கும் இனிப்பு வகைகளில் ஒவ்வொன்றை எடுத்து சுவைத்து ரசிப்போம். இத்தகைய இனிப்புகள் கடைகளில் எப்போது தயாரிக்கப்பட்டது, ஆரோக்கியமாக தயாரிக்கப்பட்டதா உள்ளிட்ட கேள்விகள் எல்லாம் நம் மனதில் எழும்.

இவை பழையனவையாக இருந்தால் தீபாவளி நாளில் சாப்பிட்ட பிறகு, நமக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, அன்றைய நல்ல நாள் நமக்கான நாளாக இல்லாமல் போய்விடக்கூடும். இப்படி கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் நம் உடல்நலத்தை கெடுக்கும் என்பதால், கடைகளில் கிடைக்கும் இனிப்பு வகைகளை நாம் வீட்டிலேயே செய்து ருசித்து மகிழலாம். அந்தவகையில், இன்று நாம் தீபாவளி ஸ்பெஷலாக அசோகா அல்வா, வாழைப்பழ அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட் பட்டியல் ரெடியா? தினை பணியாரம், நெய்யப்பம் செய்து அசத்துங்க!

அசோகா அல்வா

அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • பாசிப்பருப்பு – அரை கப்
  • கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
  • நெய் – அரை கப்
  • கேசரி பவுடர் – சிறிதளவு
  • தண்ணீர் – ஒரு கப்
  • சர்க்கரை – ஒரு கப்
  • ஏலக்காய் – 2
  • முந்திரி – 8 முதல் 10

அசோகா அல்வா செய்வது எப்படி..?

  1. முதலில் எடுத்து வைத்துள்ள அரை கப் பாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து 5 விசில்
    வரும்வரை குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. சூடு ஆறியதும் மிக்ஸியில் பாசிப்பருப்பை போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது ரெடியாக எடுத்து வைத்துள்ள முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
  4. ஏலக்காயை நசுக்கி வைத்து கொள்ளவும்
  5. கேஸை ஆன் செய்து அதில், ஒரு கடாயை வைத்து நெய் சேர்க்கவும்.
  6. நெய் சூடானதும் கோதுமை மாவு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அல்வா செய்யும்போதும் அடி பிடிக்காமல் இருக்க அடிகனமான வாணலியை வைத்து அதில், ஏற்கனவே அரைத்து வைத்திருந்த பாசிப்பருப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
  8. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலவை சுருண்டு வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்
  9. இப்போது, சிறிதளவு கேசரி பவுடர், நசுக்கி வைத்திருந்த ஏலக்காய், வறுத்து வைத்திருந்த கோதுமை மாவு சேர்த்து அல்வா பதம் வந்ததும் நெய் மற்றும் முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான அகோசா அல்வா ரெடி.

ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு சூப்பர் ஸ்வீட் செய்ய ஆசையா..? முந்திரி கேக், லட்டு செய்து அசத்துங்க..!

வாழைப்பழம் அல்வா

வாழைப்பழம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • பெரிய அளவிலான வாழைப்பழம் – 2
  • ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
  • சர்க்கரை – கால் கப்
  • நெய் – 4 டீஸ்பூன்
  • உடைந்த முந்திரி – 10

வாழைப்பழ அல்வா செய்வது எப்படி..?

  1. நன்றாக பழுத்த வாழைப்பழத்தைத் தோல் உரித்து, துண்டுகளாக
    நறுக்கி பிசைந்து கொள்ளவும்.
  2. மேலும், மைய இருக்க தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
  3. இப்போது, கேஸை ஆன் செய்து ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூடாக்கவும்.
  4. நெய் சூடானதும் உடைத்து வைத்துள்ள முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக
    வறுக்கவும்.
  5. இப்போது, அந்த வறுத்த முந்திரியை நெய்யிலிருந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. தொடர்ந்து, கேஸை சிம்மில் வைத்து அதே கடாயில், பிசைந்த வாழைப்பழத்தைச் சேர்த்துக் கிளறவும்.
  7. வாழைப்பழம் கெட்டியாக மாற ஆரம்பித்ததும், சர்க்கரை மற்றும்
    ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  8. இப்போது மீதமுள்ள நெயை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
  9. இந்த நேரத்தில் நாம் தயாரிக்கும் அல்வா, நெய்யை உறிஞ்சிப் பளபளப்பாக மாற தொடங்கும்.
  10. அல்வா தற்போது பொன்னிறமாக மாற தொடங்கும். இதன்பின், வறுத்த முந்திரி சேர்த்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.

Latest News