5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல்.. சூப்பரான அதிரசம் செய்வது எப்படி..?

Deepavali: தீபாவளி நாளில் விருந்தினர்களின் வருகை இருப்பதால், நீங்கள் முன்கூட்டியே உணவுகளை தயார் செய்து வைப்பது நல்லது. இந்த நேரத்தில், கடைகளில் இருந்து உணவுகளை வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே தயார் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்தவகையில், தீபாவளியை முன்னிட்டு, உங்கள் விருந்தினரை ஆச்சரியப்படுத்தக்கூடிய பிரெட் அல்வா மற்றும் அதிரசம் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்வோம். 

Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல்.. சூப்பரான அதிரசம் செய்வது எப்படி..?
அதிரசம்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 22 Oct 2024 17:28 PM

தீபாவளி பண்டிகை என்பது பட்டாசு மற்றும் சுவையான உணவுகளின் திருவிழா என்றே சொல்லலாம். அந்த வகையில், தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகை இப்போது முதலே கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் தொடங்கிவிட்டனர். பெரும்பாலான வீடுகளில் தீபாவளிக்கு உடுத்த தேவையான புத்தாடைகள், சாப்பிடுவதற்கான இனிப்புகளை வாங்கி வருகின்றனர். தீபாவளி நாளில் குடும்பங்கள் ஒன்றிணைந்து புத்தாடைகளை அணிந்து, இனிப்புகளை உண்டு மகிழ்வர். தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தரப்பட்ட உணவுகளுடன் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் விருந்தினர்களின் வருகை இருப்பதால், நீங்கள் முன்கூட்டியே உணவுகளை தயார் செய்து வைப்பது நல்லது. இந்த நேரத்தில், கடைகளில் இருந்து உணவுகளை வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே தயார் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்தவகையில், தீபாவளியை முன்னிட்டு, உங்கள் விருந்தினரை ஆச்சரியப்படுத்தக்கூடிய பிரட் அல்வா மற்றும் அதிரசம் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்ய ஆசையா? உங்களுக்காக வாழைப்பழ அல்வா ரெசிபி!

அதிரசம்

அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி – அரை கிலோ
  • கறுப்பு எள் –  2 டீஸ்பூன்
  • வெல்லம் -1/2 கிலோ
  • ஏலக்காய் பொடி – 4 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

அதிரசம் செய்வது எப்படி..?

  1. முதலில் எடுத்து வைத்துள்ள அரை கிலோ பச்சரிசியை இரவு முழுவதும் ஊறவைத்து தண்ணீரை நன்கு வடித்து கொள்ளவும்.
  2. பின்பு பச்சரிசியை ஒரு வெள்ளை துணியில் நிழலில் காய வைத்து முக்கால் பாகம் காய்ந்தவுடன் அரைத்து சளித்து வைத்து கொள்ளவும்.
  3. தொடர்ந்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி காய்ச்சி கொள்ளவும்.
  4. வெல்லம் உருகி கம்பி பதம் வரும் வரை அடுப்பை சிம்மில் வைத்து காய்ச்சவும்.
  5. அதனை தொடர்ந்து, வெல்லம் பாகு நிலைக்கு வந்ததும் எடுத்து வைத்துள்ள கறுப்பு எள், ஏலக்காய் பொடிஆகியவற்றை சிறிது சேர்த்து கொள்ளவும்.
  6. இப்போது அரைத்து வைத்துள்ள அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக வெல்லப் பாகை சேர்த்து கட்டி சேராதவாறு பிசையவும்.
  7. பச்சரிசி மாவானது சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  8. இந்த நேரத்தில், அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி நன்றாக காய வைத்ததும், பிசைந்து மாவை வடை மாதிரி தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  9. அவ்வளவுதான் தீபாவளிக்கு விருந்தினருக்கு பரிமாற சூடான, சுவையான சூப்பரான அதிரசம் ரெடி.

பிரெட் அல்வா

பிரெட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • பிரெட் – 5 முதல் 7
  • சர்க்கரை – 2 கப்
  • கோதுமை மாவு – 1 கப்
  • திராட்சை – 6
  • முந்திரி – 6
  • நெய் – 200 மிலி
  • ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
  • கேசரி பவுடர் – 1/4 டீஸ்பூன்

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட் பட்டியல் ரெடியா? தினை பணியாரம், நெய்யப்பம் செய்து அசத்துங்க!

பிரெட் அல்வா செய்வது எப்படி..?

  • முதலில் எடுத்து வைத்துள்ள பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக்கி வெட்டி கொள்ளவும்.
  • அதனை தொடர்ந்து ஒரு கடாயில் சிறிது நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பிரெட் துண்டுகளை நன்றாக சிவக்க வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
  • இப்போது, அதே கடாயில் செறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
  •  எண்ணெய் மற்றும் தண்ணீர் இல்லாத ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு கோதுமை மாவை வறுக்கவும்.
  • அதே கடாயில் வறுத்த பிரெட் துண்டுகள், 2 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக பிரட்டவும்.
  • இப்போது, கடாயில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துபின், அதில் கேசரிபவுடர் சேர்த்து சிறிது நேரம் விடவும்.
  • பிறகு வறுத்த பிரெட் மற்றும் மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து தொடர்ந்து கலக்கவும்.
    பின்னர், வறுத்த முந்திரி, திராட்சை கலந்தபின், சிறுதளவு நசுக்கி ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
  • தீபாவளி நல்ல நாளில் சாப்பிட சுவையான பிரெட் அல்வா ரெடி.

Latest News