Diwali Sweet: தீபாவளிக்கு சூப்பர் ஸ்வீட் செய்ய ஆசையா..? முந்திரி கேக், லட்டு செய்து அசத்துங்க..!
Diwali Sweets Recipes: கடைகளில் வாங்கும் சில இனிப்பு வகைகள் எப்போது தயாரிக்கப்பட்டது என்று நமக்கு தெரியாது. இது தீபாவளி நாளில் சாப்பிடுவதால் வயிறு உப்புதல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது அன்றைய நல்ல நாளை கெடுத்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், லட்டு மற்றும் முந்திரி கேக் எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தீபாவளி என்றாலே குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் ஒவ்வொருவரும் சுவையான இனிப்புகளை சாப்பிட்டு, பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடுவர். தீபாவளி வருகிறது என்றாலே, குடும்பத்துடன் ஒரு வாரத்திற்கு முன்பு சென்று, தேவையான பட்டாசு, இனிப்பு வகைகளை கடைகளில் தேடி தேடி வாங்குவோம். இது உனக்கு பிடிக்கும், இது உனக்கு நன்றாக இருக்காது என்று தெரிவித்து நம் பாசத்தை, நமது குடும்ப உறுப்பினரிடம் வெளிப்படுத்தும். அந்தவகையில், கடைகளில் வாங்கும் சில இனிப்பு வகைகள் எப்போது தயாரிக்கப்பட்டது என்று நமக்கு தெரியாது.
இது தீபாவளி நாளில் சாப்பிடுவதால் வயிறு உப்புதல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது அன்றைய நல்ல நாளை கெடுத்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், வீட்டிலேயே சுவையான, ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான லட்டு மற்றும் முந்திரி கேக் எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ALSO READ: Food Recipes: டேஸ்டியான வெண்டைக்காய் மட்டன் குழம்பு.. 20 நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பர் டிஸ்!
பூந்தி லட்டு:
பூந்தி லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
- கடலைமாவு- 2 கப்
- நெய் – 3 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 2 கப்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- உலர் திராட்சை – சிறிதளவு
- முந்திரி – சிறிதளவு
- எண்ணெய் – ஒரு லிட்டர்
- பூந்தி செய்ய தேவையான ஓட்டை கரண்டி
பூந்தி லட்டு செய்வது எப்படி..?
- முதலில் எடுத்து வைத்துள்ள 2 கப் கடலை மாவை சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்றாக கலக்கி கொள்ளவும்.
- இப்போது ஒரு கடாயில் வாங்கி வைத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடு ஏற்றவும்
- எண்ணெய் நன்கு காய்ந்ததும்
- பூந்தி செய்ய தேவையான ஓட்டை கரண்டியை எண்ணெய் மேலாக தூக்கி பிடித்து, அதில் சிறிதளவு கடலை மாவு கலவையை மெதுமெதுவாக ஊற்றி பூந்திகளை நன்றாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
- தொடர்ந்து மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரையுடன் 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு தயாராகி விட்டதா என்று தெரிந்து கொள்ள ஆள்காட்டி விரலில் சிறிது எடுத்து, கட்டை விரலுடன் அழுத்தி பாருங்கள். அப்போது, கம்பி போல் பாகு ஒட்டி வந்தால் சர்க்கரை பாகு ரெடி என்று அர்த்தம்.
- இப்போது, ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி, உலர் திராட்சையை போட்டு பொரித்து கொள்ளவும். அதே நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் நன்றாக கலக்கவும்.
- பொரித்து எடுத்து வைத்திருந்த குட்டி குட்டி பூந்தியை சூடாக இருக்கும் பாகுடன் ஒன்று சேர்க்கவும்.
- கையில் நெய் அல்லது எண்ணெயை தடவிக் கொண்டு கையில் எடுக்கக்கூடிய அளவிலான சூட்டில், பூந்தியை மெது மெதுவாக லட்டுகளாக உருட்டவும்.
- இப்போது, சூப்பரான பூந்தி லட்டு ரெடி, இதை குடும்பத்துடன் பரிமாறி சாப்பிடுங்கள்.
முந்திரி கேக்:
முந்திரி கேக் செய்ய தேவையான பொருட்கள் :
- முந்திரி – 200 கிராம்
- சர்க்கரை – 200 கிராம்
- நெய் – தேவையான அளவு
- குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
- தண்ணீர் – தேவையான அளவு
ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட்.. வீட்டிலேயே சுவையான பால் பணியாரம், ஜிலேபி செய்வது எப்படி?
முந்திரி கேக் செய்வது எப்படி..?
- முதலில் முந்திரியை இரண்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- இப்போது அடுப்பை ஆன் செய்து ஒரு பெரிய கடாயை வைத்து, அதில் சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
- பாகு பதம் வந்தவுடன் அரைத்த முந்திரி விழுது, சிறிது சிறிதாக கொட்டி நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
- இந்த நேரத்தில் எடுத்து வைத்துள்ள குங்குமப்பூ சேர்த்து தேவையான அளவு நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
- தண்ணீர் வற்றி, சர்க்கரை பாகு இறுகி கலவை கெட்டியாக வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் கலவை தயாராக இருக்கும்.
- இப்போது, ஒரு தட்டில் நெய் தடவி, அடுப்பில் இருந்து இறக்கி வைத்திருந்த கலவையை தட்டில் முழுவதும் பரப்பி சமநிலை படுத்தவும்.
- சிறிது சூடு ஆறியதும் உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான முந்திரி கேக் ரெடி.