Diwali Sweet: தீபாவளி ஸ்வீட்ஸ் ரெசிபிகள்.. மைசூர் பாக், முறுக்கு செய்வது எப்படி..?
Deepavali: தீபாவளியன்று சுவையான இனிப்பு உணவுகளை சாப்பிட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். எனவே, நீங்கள் இனிப்பு பண்டங்களின் பட்டியலை தயார் செய்து, அவற்றை செய்ய உங்கள் நேரம் இல்லை என்றால், மிக விரைவாக செய்யக்கூடிய ரெபிசியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். அந்தவகையில், இன்று மைசூர் பாக் மற்றும் முறுக்கு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் நமக்கு பல வகையான நினைவுகளை தரும். தீபாவளியை கொண்டாட வீட்டை சுத்தம் செய்வது முதல் கடைகளில் பொருட்களை வாங்குவது வரை அனைவரும் தயாராகி வருகிறோம். இந்த பண்டிகை நாளில் இனிப்புகள், பட்டாசுகள் என களைக்கட்டும். இத்தகைய தீபாவளியன்று சுவையான இனிப்பு உணவுகளை சாப்பிட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். எனவே, நீங்கள் இனிப்பு பண்டங்களின் பட்டியலை தயார் செய்து, அவற்றை செய்ய உங்கள் நேரம் இல்லை என்றால், மிக விரைவாக செய்யக்கூடிய ரெபிசியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். அந்தவகையில், இன்று மைசூர் பாக் மற்றும் முறுக்கு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல்.. சூப்பரான அதிரசம் செய்வது எப்படி..?
மைசூர் பாக்
மைசூர் பாக் தேவையான பொருள்கள்:
- கடலை மாவு – 2 கப்
- சர்க்கரை – 1 கப்
- நெய் – தேவையான அளவு
மைசூர் பாக் செய்வது எப்படி..?
- ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் சர்க்கரையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரைப் பாகுவை தயார் செய்து கொள்ளவும் (சர்க்கரை பாகுவை ஆள்காட்டு விரலால் தொட்டு, கட்டை விரலால் அழுத்தினால் கம்பி பதத்திற்கு வர வேண்டும். அதைதான் பதம் என்று சொல்வார்கள்)
- அந்த கம்பி பதத்திற்கு வரும் வரை நன்கு காய்ச்சி ஒன்று இரண்டு நிமிடங்கள் பிறகு அடுப்பை ஆப் செய்து கொள்ளவும்.
- இதற்கு இடையில் மற்றொரு பக்கத்தில் உள்ள அடுப்பை ஆன் செய்து, சிம்மில் வைத்து ஒரு பாத்திரத்தை வைக்கவும்.
- இப்போது, அந்த பாத்திரம் சூடானதும் எடுத்து வைத்துள்ள நெய்யை ஊற்றி நன்கு காய வைக்கவும்.
- இந்த நேரத்தில் ஏற்கனவே நாம் தயார் செய்து எடுத்து வைத்திருந்த கெட்டி பாகில் சிறிது சிறிதாக கடலை மாவை கொட்டி கட்டி சேராதவாறு நன்கு கலக்கவும்.
- இதனுடன் கொஞ்சம் நெய்யும் விட்டு, அதன்பிறகு மீண்டும் கடலை மாவை கொட்டி கலக்கவும்.
- மிதமான கூட்டில் கிளறி கொண்டே இருக்கும்போது கடலை மாவு மற்றும் நெய், சர்க்கரை பாகுடன் கலந்து ஒரு கட்டத்தில் பொங்கி வரும்.
- அப்போது, ஒரு தட்டில் மைசூர் பாகு ஒட்டாத அளவிற்கு நெய் தடவி வைத்து கொள்ளவும்.
- இப்போது பொங்கி வரும்போது மைசூர் பாக்கை நெய் தடவிய தட்டில் கொட்டி மெல்ல மெல்ல தட்டு முழுவதும் பரப்பி கொள்ளவும்.
- அதன்பிறகு, உங்களுக்கு தேவையான அளவில் கத்தியை கொண்டு வெட்டி கொண்டால் நெய் மணக்கும் மைசூர் பாக் ரெடி.
முறுக்கு:
முறுக்கு செய்ய தேவையான பொருள்கள்:
- பச்சரிசி
- வெண்ணெய்
- உளுந்து
- எள்
- உப்பு – தேவையான அளவு
ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு சூப்பர் ஸ்வீட் செய்ய ஆசையா..? முந்திரி கேக், லட்டு செய்து அசத்துங்க..!
முறுக்கு செய்வது எப்படி..?
- நன்றாக கல் நீக்கி சுத்தம் செய்த பச்சரிசியை, அரைக்கும் கடைகளில் உள்ள மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் இரண்டு கப் உளுந்தையும் சேர்த்து பச்சரிசி மாவுடன் ஒன்றாக மெஷினில் அரைத்து கொள்வது நல்லது.
- நைசாக அரைத்த பச்சரிசி மாவை, சல்லடையில் கொட்டி நன்கு சலித்து கொள்ளவும்
- இப்போது, சலித்த அந்த பச்சரிசி மாவில் வெண்ணெய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
- தொடர்ந்து, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், இரண்டு முறுக்கு கரண்டியை சூடான எண்ணெய்யில் முக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது நன்றாக கழுவிய முறுக்கு அச்சை எடுத்து, அதில் தயார் செய்து வைத்திருந்த முறுக்கு மாவை அடைத்து முறுக்கு வடிவத்தில் போடவும்.
- எண்ணெயில் முக்கி எடுத்து வைத்திருந்த முறுக்கு கரண்டியை திருப்பி வைத்து அதில் மூன்று முதல் நான்கு சுற்றுகளாக முறுக்கை போடவும்.
- இப்போது அந்த கரண்டியை காய்ந்த எண்ணெய்க்குள் மெல்ல விட்டுப் பொறித்து எடுத்தால் சுவையாக முறுக்கு ரெடி.
- இப்படியாக மாறி, மாறி இரண்டு கரண்டிகளையும் பயன்படுத்தி முறுக்கை சுட்டு கொள்ளவும்.
- உங்களுக்கு தேவை என்றால், கருப்பு எள்ளையும் மாவுடன் கலந்து கொள்ளலாம். இது கூடுதல் சுவையை தரும்.