Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. ரசகுல்லா, ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி? - Tamil News | Diwali Sweets Recipes: Let's see how to make Diwali special rasagulla and javvarisi laddu | TV9 Tamil

Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. ரசகுல்லா, ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி?

Deepavali: தீபாவளியின்போது, இனிப்புகள் மற்றும் கார வகைகள் தனித்துவம் பெறும். அன்றைய காலத்தில் தீபாவளி நாளில் பெரியவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்களை செய்வார்கள். ஆனால், தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலான மக்கள் கடைகளில் இனிப்புகளை வாங்குகிறார்கள். ஆனால், சுத்தமானதாக இருக்குமா என்பது தெரியாது.

Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. ரசகுல்லா, ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி?

ரசகுல்லா - ஜவ்வரிசி லட்டு (Image: freepik)

Published: 

26 Oct 2024 12:57 PM

ஒவ்வொரு பண்டிகையும் இனிப்புகள் இல்லாமல் முழுமையடையாது. இந்தியாவில் பண்டிகைகளின்போது இனிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறிப்பாக தீபாவளியின்போது, இனிப்புகள் மற்றும் கார வகைகள் தனித்துவம் பெறும். அன்றைய காலத்தில் தீபாவளி நாளில் பெரியவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்களை செய்வார்கள். ஆனால், தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலான மக்கள் கடைகளில் இனிப்புகளை வாங்குகிறார்கள். ஆனால், சுத்தமானதாக இருக்குமா என்பது தெரியாது.

இப்படிப்பட்ட உணவுகளை தீபாவளி போன்ற நல்ல நாள்களில் சாப்பிடும்போது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எப்படி சுவையான, சுத்தமான ரசகுல்லா மற்றும் ஜவ்வரிசி லட்டு எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட்ஸ் ரெசிபிகள்.. மைசூர் பாக், முறுக்கு செய்வது எப்படி..?

ரசகுல்லா

ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்:

  • பால் – 1 லிட்டர்
  • மைதா – 25 கிராம்
  • சர்க்கரை – 1/2 கிலோ
  • ரோஸ் எசன்ஸ் – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – சிறிதளவு

ரசகுல்லா செய்வது எப்படி..?

  1. ரசகுல்லா செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்
  2. இப்போது, எடுத்து வைத்துள்ள சிறிதளவு எலுமிச்சைச் சாற்றை ஊற்றி நன்கு கலக்கவும்.
  3. தொடர்ந்து பால் திரிய ஆரம்பித்ததும், அது நன்றாக திரியும் வரை காத்திருக்கவும்.
  4. இப்போது பால் நன்றாக திரிந்ததும் ஒரு மெல்லிய துணியை கொண்டு வடிகட்டவும்.
  5. வடிகட்டி எடுத்த பாலாடைக்கட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 25 கிராம் மைதா மாவை போட்டு நன்றாக பிசையவும்.
  6. இதன்பிறகு, அந்த பாலாடைக்கட்டியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, எலுமிச்சை சைஸில் உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  7. தயாராக எடுத்து வைத்துள்ள 2 சொட்டு ரோஸ் எசன்ஸை தெளித்து, ஒரு தட்டில் மைதா மாவை சிறிது தூவி கொள்ளவும். இப்போது, பாலாடைக்கட்டி உருண்டைகளை அந்த தட்டில் வைக்கவும்.
  8. கேஸை ஆன் செய்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதில், 1/2 கிலோ வெள்ளை சர்க்கரையை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.
  9. சர்க்கரை நன்றாக கொதித்தவுடன் பாகு பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.
  10. இப்போது தயாரித்து வைத்திருந்த பாலாடைக்கட்டி உருண்டைகளை, சர்க்கரை பாகில் ஒவ்வொன்றாக உள்ளே போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
  11. இப்போது, உருண்டைகள் நன்றாக வெந்து வெண்மையான பந்துகளாக மாறும்.
  12. பாத்திரத்தை இறக்கி வைத்ட்த சிறிது நேரத்திற்கு பிறகு, ரோஸ் எசன்ஸ் கொஞ்சம்  சேர்த்து கொள்ளுங்கள்
  13. சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான, சூப்பரான ரசகுல்லா ரெடி.

ALSO READ: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் கார வகைகள்.. காரா பூந்தி, காரா சேவு செய்வது எப்படி..?

ஜவ்வரிசி லட்டு

ஜவ்வரிசி லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரிசி – 1/2 கிலோ
  • சர்க்கரை – 1/2 கிலோ
  • ஏலக்காய் பொடி – சிறிதளவு
    மஞ்சள் தூள் – சிறிதளவு
  • நெய் – 250 மிலி
  • குங்குமப்பூ – சிறிதளவு
  • முந்திரி – 8 முதல் 10

ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி..?

  • லட்டு செய்ய தேவையான அரை கிலோ ஜவ்வரிசி, லட்டு செய்வதற்கு முந்தைய இரவே ஊற வைத்து கொள்ளவும்.
  • இப்போது, அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்து சூடு படுத்தி கொள்ளவும்.
  • கடாய் சூடானதும் எடுத்து வைத்துள்ள நெயை பாதியளவு ஊற்றி, எடுத்து வைத்துள்ள முந்திரிகளை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  • வறுத்த முந்திரியை இப்போது தனியாக எடுத்து வைத்து, இப்போது அதே கடாயில் இரவு முழுவதும் ஊற வைத்த ஜவ்வரிசி மற்றும் சர்க்கரையை சேர்த்து கட்டி சேராமல் கிளறவும்.
  • தொடர்ந்து அந்த ஜவ்வரிசியில் சிறிதளவுகுங்குமப்பூ, ஏலக்காய் பொடி, மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  • மீதமுள்ள நெயை ஊற்றி, அது வற்றும் அளவிற்கு நன்கு கலக்கி கொண்டே இருக்கவும்.
  • இப்போது வறுத்து தனியாக வைத்திருந்த முந்திரிகளை சேர்த்துவிட்டு அடுப்பை ஆஃப் செய்து கொள்ளவும்.
  •  சூடு குறைய தொடங்கும் போதே ஜவ்வரிசி மற்றும் சர்க்கரை கலவையை லட்டு சைஸூக்கு உருண்டையான வடிவத்தில் பிடித்து வைத்து கொள்ளவும்.
  • உருண்டைகளாக பிடித்த லட்டுகளின் மேற்பகுதியில் ஒவ்வொரு முந்திரிகளாக வைத்து  பறிமறினால் சுவையான ஜவ்வரிசி லட்டு ரெடி.
உடலில் வைட்டமின் பி12 அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?
காலை வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்கள்.. அற்புதமான பலன் கிடைக்கும்
வாசனை திரவியம் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா?
நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?