Health Tips: காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கிறீர்களா? பல பிரச்சனைகளை தரும்!
Healthy Juice: காலை வேளையில் பழச்சாறு குடிப்பதால் ஒரு வழியில் பலம் கிடைத்தாலும், மற்றொரு வழியில் வயிற்று உபாதைகளை உண்டாக்கும். இன்றைய நவீன காலகட்டத்தில் பழங்களை உரித்து சாப்பிடுவதை யாரும் விரும்புவதில்லை. இதனால் பலர் ஜூஸ் குடிக்கின்றனர். அந்தவகையில், வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
காலையில் ஜூஸ் குடிப்பதால், நாள் முழுவதும் உங்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நினைத்தால், அதை முதலில் அகற்றுங்கள். காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காலை வேளையில் பழச்சாறு குடிப்பதால் ஒரு வழியில் பலம் கிடைத்தாலும், மற்றொரு வழியில் வயிற்று உபாதைகளை உண்டாக்கும். இன்றைய நவீன காலகட்டத்தில் பழங்களை உரித்து சாப்பிடுவதை யாரும் விரும்புவதில்லை. இதனால் பலர் ஜூஸ் குடிக்கின்றனர். அந்தவகையில், வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
இரவில் நாம் தூங்கும்போது நமது உடல் நம்மை பராமரிக்க தொடங்கும். அப்போது நம் வயிற்றில் பல வகையான ரசாயனங்கள் வெளியாகும். சாப்பிடும் உணவுகள் செரிமானம் செய்யப்படுவதற்காக அமிலம் வெளியிடப்படுகிறது. செரிமான செயல்பாட்டின் போது, அமிலம் ஒரு துணை உற்பத்தியாக குவிகிறது. இது அவசியம். ஆனால் காலையில் ஜூஸ் குடித்தால், வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும், எனவே தற்செயலாக எந்தப் பழத்தையும் சாப்பிடாதீர்கள், காலையில் எழுந்தவுடன் ஜூஸ் கூட அருந்தாதீர்கள்.
ALSO READ: Afternoon Sleep: பகலில் தூங்குவது நல்லதா கெட்டதா..? எவ்வளவு நேரம் தூங்கலாம்..?
சிறுநீரக கற்கள்:
சிலர் காலையில் நடைபயிற்சி சென்று வந்த பிறகும், உடற்பயிற்சி செய்து வந்த பிறகு சிலர் ஜூஸை எடுத்துக்கொள்கின்றனர். வெறும் வயிற்றில் காய்கறி ஜூஸ் மற்றும் பழத்தின் ஜூஸ் குடிக்கும்போது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்லது. மேலும், கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் ஆக்ஸாலிக் அமிலமும், பழங்களில் சிட்ரிக் அமிலமும் உள்ளது. சிட்ரிக் அமிலம் வயிற்றில் நுழையும் போது ஆக்ஸாலிக் அமிலத்தை விரைவாக உறிஞ்சுகிறது. இதன் விளைவாக, இது சிறுநீரகக் கல்லாக அல்லது பித்தப்பைக் கல்லாக மாறுகிறது. எனவே காலையில் வெறும் வயிற்றில் பழ ஜூஸ் மற்றும் காய்கறி ஜூஸ் குடிக்க வேண்டாம். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இரைப்பை நோயாளிக்கு தீங்கு:
இரைப்பை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்க கூடாது. ஜூஸாக அரைக்கும்போது பழத்தில் இருக்கும் நார்ச்சத்து போய்விடும். நார்ச்சத்து இல்லாததால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இரைப்பை நோயாளிகளுக்கு வயிற்று புண்களை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகரிக்கும். பழத்தில் நார்ச்சத்து வெளியேறும்போதும், வயிற்றில் உள்ள செரிமான அமைப்பு பலவீனமடைய தொடங்கும். இது அதிக வாயுவை உற்பத்தி செய்து வயிறு வீங்க தொடங்கும்.
வெறும் வயிற்றில் காலையில் என்ன சாப்பிடலாம்..?
காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதை விட, பழங்களை சாப்பிடுவது நல்லது. பழங்களில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையின் தாக்கத்தை குறைக்கும். வெயில் அதிகமாக இருக்கும் காலத்தில் தேங்காய் தண்ணீர், தர்பூசணி, வெள்ளரி, எலுமிச்சை தண்ணீர் போன்றவற்றை உட்கொள்வது அதிக பலன் தரும். அதே நேரத்தில், யாரும் காலையில் வெறும் வயிற்றில் தக்காளியை உட்கொள்ளக் கூடாது. ஆனால், காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை அல்லது தேன் கலந்து குடிப்பது நல்லது.
எந்தெந்த பழ ஜூஸை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்..?
மாதுளை ஜூஸ்:
மாதுளை ஜூஸ் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இந்த சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மாதுளம் ஜூஸ் இரத்த சோகை பிரச்சனையையும் நீக்குகிறது. இந்த ஜூஸ் ஆரோக்கியமானது மற்றும் மிகவும் சுவையானது. தினமும் காலையில் மாதுளை ஜூஸ் குடிப்பது நன்மை தரும்.
நெல்லிக்காய் ஜூஸ்:
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், துத்தநாகம், வைட்டமின் சி, கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.
சுரைக்காய் ஜூஸ்:
சுரைக்காய் ஜூஸ் நார்ச்சத்து நிறைந்தது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். சுரைக்காய் சாறு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் உணவுடன் சுரைக்காய் ஜூஸையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ALSO READ: Food Recipes: பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி..? எளியாத செய்யக்கூடிய சூப்பர் ரெசிபி!
கற்றாழை ஜூஸ்:
கற்றாழையில் வைட்டமின் சி, ஏ மற்றும் வைட்டமின் பி3 உள்ளது. இதில் கால்சியம், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்று சூடு தணியும். இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கிறது.