5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fish Side Effects: தவறுதலாக கூட இந்த உணவுகளை மீனுடன் சாப்பிடாதீர்கள்.. பக்க விளைவுகளை தரலாம்..!

Fish: மீனில் உள்ள புரதம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஒமெகா 3 ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். நல்ல கண் ஆரோக்கியத்திற்காக மீன் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் எடையை கட்டுப்படுத்தவும், இதயம் மற்றும் மூளையின் திறனை மேம்படுத்தவும் மீன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், மீன் சாப்பிடும் போதும் அல்லது மீன் சாப்பிட்ட பிறகும் சில உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

Fish Side Effects: தவறுதலாக கூட இந்த உணவுகளை மீனுடன் சாப்பிடாதீர்கள்.. பக்க விளைவுகளை தரலாம்..!
மீன் (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 16 Sep 2024 12:40 PM

மீனுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்: அசைவ பிரியர்களுக்கு மீன் என்பது மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று. மீன் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மீனில் உள்ள புரதம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஒமெகா 3 ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். நல்ல கண் ஆரோக்கியத்திற்காக மீன் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் எடையை கட்டுப்படுத்தவும், இதயம் மற்றும் மூளையின் திறனை மேம்படுத்தவும் மீன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், மீன் சாப்பிடும் போதும் அல்லது மீன் சாப்பிட்ட பிறகும் சில உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இன்று மீன் சாப்பிடும்போது அல்லது மீன் சாப்பிட்ட பிறகும் எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Sleeping Position: குப்புற படுத்து தூங்கினால் நல்லதா..? எப்படி தூங்குவது நன்மை தரும்?

ஐஸ்கிரீம்:

மீன் சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. மீன் சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் தோல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் என்று பல ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. மீனின் தன்மை சூடாகவும், ஐஸ்கிரீமின் தன்மை குளிர்ச்சியாகவும் இருக்கும். இது உங்கள் உடலில் சூட்டை அதிகரிக்க செய்து, வயிறு பிரச்சனையை உண்டாக்க செய்யும்.

தயிர் மற்றும் பால்:

மீனுடன் பால், தயிர் அல்லது பிற பால் பொருட்களை உட்கொள்வது செரிமான பிரச்சனைகள், வீக்கம், வயிற்று வலி, தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். பால் மற்றும் மீன் ஆகியவற்றின் கலவையானது, அவற்றின் உயர் புரத உள்ளடக்கம் மற்றும் செரிமானத்தை பாதிக்கும் கலவைகள் காரணமாக செரிமான ஓட்டத்தை பாதிக்க செய்யும்.

மீன் சாப்பிட்ட பிறகு பால குடிப்பது மிகவும் ஆபத்தானது. மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதால் வெள்ளை புள்ளிகள் மற்றும் பல கடுமையான தோல் பிரச்சனைகள் ஏற்படலாம்.

சிட்ரஸ் பழங்கள்:

மீன் மற்றும் சிட்ரஸ் பழங்களை ஒன்றாக எழுத்துக்கொள்வது பிரச்சனைகளை தரலாம். சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலங்கள் மீன்களில் உள்ள புரதங்களுடன் வினைபுரியும். இதன் காரணமாக சுவை பண்புகளை இழக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

வறுத்த உணவுகள்:

அதிகமாக பதப்படுத்தப்பட்ட அல்லது வறுத்த உணவுகளுடன் மீனையும் எடுத்துக்கொள்ள கூடாது. மீனை இவற்றுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும்போது மீனின் தரம் மற்றும் ஊட்டச்சத்து குறையும். வறுத்த உணவுகளில் அதிக அளவு நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

டீ மற்றும் காபி:

பலருக்கு உணவுக்கு பிறகு டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. இதுவும் ஒரு வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை கெடுக்கும். எனவே, மீன் சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பதை தவிர்க்கலாம். டீ மற்றும் காபியில் பால் பயன்படுத்தப்படுவதால், அதை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இனிப்புகள்:

மீன் சாப்பிட்ட பிறகு பாலில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்புகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைக்கும். ஆயுர்வேதத்தின்படி, மீனுடன் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை எடுத்து கொள்வதால் தோல் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு போன்ற கனமான மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளுடன் மீனுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. இது உடலுக்கு அதிகப்படியான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை வழங்குவதோடு செரிமான அமைப்பை மந்தமானதாக மாற்றும்.

காரமான உணவு:

மீன்களுடன் சேர்த்து மிகவும் காரமான உணவுகளை சாப்பிடுவது இரைப்பை குடல் அசௌகரியம் (குடல் அதிக உணர்திறன்) மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

ALSO READ: Custard apple Benefits: சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. ஆஸ்துமாவை எதிர்க்கும் அற்புத மருந்து!

பருப்பு வகை:

பீன்ஸ் மற்றும் பருப்பு வகையில் ராஃபினோஸ் எனப்படும் சிக்கலான சர்க்கரை அதிக அளவில் உள்ளது, இது உடலில் உடைவதில் சிக்கல் உள்ளது. பீன்ஸிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை இரண்டையும் அதிகமாக உட்கொள்வது வாயு பிரச்சனைகளை அதிகரிக்கும். இதனுடன் மீனை கலந்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை ஏற்படும்.

Latest News