5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Oil For Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனையா? சமையலில் எந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

Cholesterol: இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றன. இந்நோயினால் இதயக் கோளாறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் கண்டறியப்பட்டவுடன் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். வெண்ணெய், நெய் உள்ளிட்ட உணவுகள் பொருட்களை எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறீர்களா அவ்வளவு நல்லது. ஆனால், நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் எண்ணெயை உங்களால் நிராகரிக்க முடியாது.

Oil For Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனையா? சமையலில் எந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
சமையல் எண்ணெய்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 21 Oct 2024 15:16 PM

கொலஸ்ட்ரால் பிரச்சனை: மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக இளம் வயதிலேயே சில பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளில் ஒன்று கொலஸ்ட்ரால். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றன. இந்நோயினால் இதயக் கோளாறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் கண்டறியப்பட்டவுடன் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். வெண்ணெய், நெய் உள்ளிட்ட உணவுகள் பொருட்களை எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறீர்களா அவ்வளவு நல்லது. ஆனால், நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் எண்ணெயை உங்களால் நிராகரிக்க முடியாது. கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எந்த எண்ணெயை பயன்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Home Tips: மெத்தை கறை சட்டுனு போகணுமா? எப்போதுமே புதுசு மாதிரி பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க!

எந்த எண்ணெயை பயன்படுத்தலாம்..?

ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த எண்ணெயில் மற்ற எண்ணெய்களை விட மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். இந்த எண்ணெய் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதனால் தினமும் சமையலில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.

ஆளிவிதை எண்ணெய்:

ஆளிவிதை எண்ணெயில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளது. இது ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகும். ஆளிவிதை எண்ணெய் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பது மட்டுமின்றி, கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது.

சோயாபீன் எண்ணெய்:

சோயாபீன் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதுடன், இது இதய நோய் அபாயத்தையும் தடுக்கிறது.

எள் எண்ணெய் (நல்லெண்ணெய்):

எள் எண்ணெய் என்று அழைக்கப்படும் நல்லெண்ணெயில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. எள் எண்ணெய் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

சூரியகாந்தி எண்ணெய்:

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்புவோர் சமையலில் சூரியகாந்தி எண்ணெயையும் பயன்படுத்தலாம். சூரியகாந்தி எண்ணெயில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுத்தும் பிரச்சனைகள்:

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதால், அவை கல்லீரல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஆகியவற்றின் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் படியும் அதிகபடியான கொழுப்பைக் குறைக்க, மருந்துகளை விட வாழ்க்கை முறை மாற்றமே சிறந்தது.

ALSO READ: Health Tips: காய்ச்சலின்போது எந்த உணவுகளை சாப்பிடக் கூடாது தெரியுமா..? இந்த தவறுகளை செய்யாதீங்க!

கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி?

  • போதுமான தண்ணீர் குடிக்கவும்.
  • நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்ளுங்கள்.
  • உங்கள் உணவில் அதிக பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்.
  • தினமும் உடற்பயிற்சி அல்லது அரை மணி நேரம் நடக்கவும்.
  • போதுமான அளவு தூக்கத்தை எடுத்து கொள்ளுங்கள்.
  • புகைபிடித்தல் மற்றும் குடி பழக்கத்தை கைவிடுங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News