Home Tips: எலிகள் வீட்டிற்குள் வராமல் இருக்கணுமா? இதை வைத்து விரட்டுங்கள்..!

Rats: எலிகளை வீட்டிலிருந்து வெளியேற்ற எவ்வளவோ முயற்சிகள் கொண்டாலும், அது பலன்களை கொடுப்பதில்லை. இதன் காரணமாக எலியை பிடிப்பதற்கும், அவற்றை கொல்வதற்கும் மக்கள் விஷ மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த வகையின் மருந்துகளின் பயன்பாடு வயதானவர்களும், குழந்தைகளுக்கும் உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கலாம். எனவே, மருந்துகளை பயன்படுத்தாமல், எவ்வாறு வீட்டில் சில பொருட்களை பயன்படுத்தி எலிகளை எப்படி எளிதாக விரட்டலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Home Tips: எலிகள் வீட்டிற்குள் வராமல் இருக்கணுமா? இதை வைத்து விரட்டுங்கள்..!

எலி தொல்லை (Image: freepik)

Published: 

03 Sep 2024 14:40 PM

எலி தொல்லை: பல ஆண்டுகளாக வீடுகளில் எலி தொல்லை என்பது மிகப்பெரிய பிரச்சனைகளை கொடுக்கிறது. இதன் காரணமாக எலிகளை வீட்டிலிருந்து வெளியேற்ற எவ்வளவோ முயற்சிகள் கொண்டாலும், அது பலன்களை கொடுப்பதில்லை. இதன் காரணமாக எலியை பிடிப்பதற்கும், அவற்றை கொல்வதற்கும் மக்கள் விஷ மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த வகையின் மருந்துகளின் பயன்பாடு வயதானவர்களும், குழந்தைகளுக்கும் உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கலாம். எனவே, மருந்துகளை பயன்படுத்தாமல், எவ்வாறு வீட்டில் சில பொருட்களை பயன்படுத்தி எலிகளை எப்படி எளிதாக விரட்டலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Home Care Tips: விரைவில் மழைக்காலம்.. முன்கூட்டியே இதையெல்லாம் செய்வது நல்லது!

எருக்கம் பூ செடிகள்:

வீட்டை சுற்றி காணப்படும் எருக்கம் பூ செடிகள் எலிகளை விரட்ட சிறந்த ஒன்று. எருக்கம் பூ செடியின் இலைகளை எலிகள் வந்து செல்லும், இடத்தில் வைக்கவும். எருக்கம் பூ செடியில் இருந்து வெளிவரும் வாசனையை தாங்க முடியாமல் எலிகள் வீட்டை விட்டு விரட்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இலைகளை பறிக்கும்போது அதன் பால், உங்களது தோல் மீதோ, கண்கள் மீதோ படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்துருண்டை:

நாப்தலீன் மாத்திரைகள் என்று அழைக்கப்படும் அந்துருண்டைகளில் வாசனை எலிகளுக்கு பிடிக்காது. எனவே, இவற்றை நேரடியாக எலிகள் நடமாடும் இடத்தில் வையுங்கள். அப்படி இல்லையென்றால், அந்துருண்டையை பொடி செய்து, தண்ணீர் கலக்கி வீட்டின் மூலைகளில் பேஸ்டாகவோ, ஸ்ப்ரே செய்தாலோ எலிகள் ஓடிவிடும்.

புதினா எண்ணெய்:

புதினா எண்ணெயை வீட்டின் மூலைகள் தெளிப்பதன் மூலம், அதிலிருந்து வெளிவரும் வாசனையை எலிகளை விரட்டும். இவற்றுடன் கிராம்பு, மிளகு ஆகியவற்றை தூவி எலிகள் நடமாடும் இடங்களில் வைத்தால், அதில் இருந்து வரும் கார நெடி எலிகளை விரட்டும்.

பேக்கிங் சோடா, புதினா:

எலிகளை விரட்ட மற்றொரு எளிதான வழி. முதலில் ஒரு கப் மைதாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் புதினா எண்ணெய் மற்றும் சமையல் சோடா சேர்த்து கலக்கவும். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வீட்டில் எலிகள் வரும் இடங்களில் வைத்தால், எலிகள் அந்த இடத்திலிருந்து ஓடி விடும்.

பூண்டு:

பூண்டை நசுக்கி கொதிக்கும் நீரில் போட்டு உப்பு, டெட்டால் சேர்த்து மூலையில் தண்ணீர் தெளிக்கவும். இதனால் எலிகள் வராது. மேலும், வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைத்தாலும் எலிகள் தொல்லை இருக்காது.

ALSO READ: Home Tips: மெத்தை கறை சட்டுனு போகணுமா? எப்போதுமே புதுசு மாதிரி பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க!

எலிகள் லெப்டோஸ்பிரோசிஸ் மற்றும் ஸ்க்ரப் டைபஸை பரப்புகின்றன. இது “Orietia tsutsugamushi” என்ற பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான நோயாகும். இந்த நோய் எலிகள் மூலம் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு நோய்களை பரப்பலாம். எனவே, வீட்டைச் சுற்றி எலிகள் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள். இந்த விதிகளை கடைபிடிப்பதன் மூலம், நோய்க்கு இரையாகாமல் தவிர்க்கலாம்.

தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!
கிராமத்து லுக்கில் நடிகை அதிதி ஷங்கர்!
நடிகை ஷ்ரத்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!