Home Tips: பாலை எத்தனை முறை காய்ச்ச வேண்டும்? எப்படி காய்ச்ச வேண்டும்? இதுதான் வழிமுறைகள்! - Tamil News | Do you know how many times milk should be boiled | TV9 Tamil

Home Tips: பாலை எத்தனை முறை காய்ச்ச வேண்டும்? எப்படி காய்ச்ச வேண்டும்? இதுதான் வழிமுறைகள்!

Milk: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நோய்கள் வராமல் தடுக்கவும் ஒவ்வொரு நாளும் சரியான அளவு பால் உட்கொள்வது மிக முக்கியம். பாலில் ஏராளமான கால்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் பல வகையான தாதுப்பொருட்கள் உள்ளன. இப்படி பால் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்கு தெரிந்தும், பால் காய்ச்சும்போது நம்மை அறியாது சில தவறுகளை செய்துவிடுகிறோம்.

Home Tips: பாலை எத்தனை முறை காய்ச்ச வேண்டும்? எப்படி காய்ச்ச வேண்டும்? இதுதான் வழிமுறைகள்!

கோப்பு புகைப்படம்

Published: 

15 Aug 2024 16:22 PM

பால் காய்ச்ச சரியான வழிகள்: பால் என்பது நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளை தரக்கூடிய ஒரு உணவு பொருளாகும். குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்கு பால் இன்றியமையாதது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நோய்கள் வராமல் தடுக்கவும் ஒவ்வொரு நாளும் சரியான அளவு பால் உட்கொள்வது மிக முக்கியம். பாலில் ஏராளமான கால்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் பல வகையான தாதுப்பொருட்கள் உள்ளன. இப்படி பால் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்கு தெரிந்தும், பால் காய்ச்சும்போது நம்மை அறியாது சில தவறுகளை செய்துவிடுகிறோம்.

பலர் பாலை கெட்டியாக நீண்ட நேரம் கொதிக்க வைக்கிறார்கள். அதே நேரத்தில், சிலர் பாலை மீண்டும் மீண்டும் காய்ச்சுகிறார்கள். இதுமட்டுமின்றி, சிலர் பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் கேஸை சிம்மில் வைத்து நீண்ட நேரம் கொதிக்க வைத்து விடுவார்கள். எப்படி பாலை காய்ச்ச வேண்டும், பால் காய்ச்சுவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. அதன்படி, பாலை எத்தனை முறை காய்ச்ச வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Lip Care: உதடுகளைச் சுற்றி கருமை பிரச்சனையா..? எளிதாக போக்க ஹோம் டிப்ஸ் இதோ!

பால் காய்ச்ச சரியான வழிகள்:

  1. பாலை நீண்ட நேரம் காய்ச்சுதல் அல்லது மீண்டும் மீண்டும் கொதிக்க வைப்பதன் மூலம், அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அழியும். இதனால், பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் நம் உடலுக்கு முழுமையாக கிடைப்பது கிடையாது.
  2. பாலை நெருப்பில் வைக்கும்போது, அதை தொடர்ந்து ஒரு ஸ்பூன் அல்லது கரண்டி மூலம் கிளற வேண்டும்.
  3. அதன்பிறகு பால் கொதித்தவுடன், நெருப்பை உடனடியாக அணைப்பது நல்லது.;.
  4. பால் நீண்ட நேரம் கொதிக்கும் தவறை நீங்களும் இனியும் செய்யாதீர்கள்.
  5. பால் ஒருமுறை கொதித்தபிறகு, மீண்டும் மீண்டும் கொதிப்பதன்மூலம் அதன் சத்துகள் அழிந்துவிடும்.
  6. பாலை ஒரு முறை மட்டுமே கொதிக்க வைக்க முயற்சிக்கவும். பால் கெட்டுப் போகும் என்று தோன்றினால் இன்னும் ஒரு முறை கொதிக்க வைக்கலாம்.

அதிகமாக பால் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:

  • பாலில் உள்ள லாக்டோஸ் என்ற பொருள் செரிமானத்தை தாமதமாகும். பால் அதிகமாக சாப்பிடுவதால் வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதன் காரணமாகவே, பால் பசியை கட்டுப்படுத்துகிறது.
  • பாலில் அதிகளவிலான கொழுப்புகள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதுடன், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • அதிகப்படியான பால் உட்கொள்வது சில நேரங்களில் திரவ அளவு மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக செரிமானத்தை பாதிக்கலாம்.
  • அதிக பால் உட்கொள்வதால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களின் அதிக ஆபத்து உட்பட பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
  • பால் உட்பட கால்சியம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ALSO READ: Curry Leaf Tea: தினமும் காலையில் ஒரு கறிவேப்பிலை டீ.. அப்புறம் கிடைக்கும் பலன்கள் ஏராளம்..!

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?
பட்ஜெட்டில் பார்க்கக்கூடிய உலக நாடுகள் என்னென்ன தெரியுமா?
நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க என்ன செய்யலாம்?