Health Tips: உள்ளாடை இல்லாமல் இரவில் தூங்கி பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!
Sleeping Tips: பொதுவாக இரவில் உறங்க செல்லும்போது சில லேசான உடைகளை அணிவது பலரும் செய்யும் ஒன்று. ஆனால், சிலர் பகலில் அணியும் அதே ஆடைகளை இரவிலும் அணிவார்கள். இது நல்ல பழக்கம் இல்லை. ஆடை இல்லாமல் தூங்குவது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தரும்
ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவுமுறை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஆரோக்கியத்தை உறக்கமும் நமக்கு தரும். பல உடல்நல பிரச்சனைகள் தூக்கமின்மைக்கு காரணம். அதேபோல், தூங்கும்போது நாம் செய்யும் சில தவறுகள் நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக இரவில் உறங்க செல்லும்போது சில லேசான உடைகளை அணிவது பலரும் செய்யும் ஒன்று. ஆனால், சிலர் பகலில் அணியும் அதே ஆடைகளை இரவிலும் அணிவார்கள். இது நல்ல பழக்கம் இல்லை. ஆடை இல்லாமல் தூங்குவது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தரும் என்று சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அந்தவகையில், இரவில் உள்ளாடை இன்றி தூங்குவது கிடைக்கும் நன்மை என்னவென்று தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Food Recipe: சட்டென செய்யக்கூடிய ஃபுட் ரெசிபி! சுறா புட்டு, மீன் வடை செய்வது எப்படி..?
இறுக்கமான ஆடைகள் அணிந்து தூங்குவதால் கிடைக்கும் தீமைகள்:
பகலில் அணிந்த அதே ஆடைகள் அதிலும் குறிப்பாக, இறுக்கமான ஜூன்ஸ் அணிந்து உறங்குவது பல்வேறு பிரச்சனைகள் வழிவகுக்கும். இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் ஆண்களும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக அதிக வெப்பத்தால் விந்தணுக்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இரவில் பெண்கள் பிரா அணிந்து தூங்குவது நல்லதல்ல. இறுக்கமான பிராக்களை அணிவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக நடைபெறாமல் தடுக்கலாம். இது ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு வழிவகுக்கும். அதிகப்படியான மெலனின் காரணமாக இது நிகழ்கிறது. அதனால்தான், முடிந்தவரை லூஸ் இன்னர்வேர்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அவை இல்லாமல் தூங்குவது நல்லது என்றும் கூறப்படுகிறது.
வியர்வையால் அலர்ஜி போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் ஆடையின்றி தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஆடையின்றி தூக்குவதால் கிடைக்கும் நன்மைகள்:
மன ஆரோக்கியம்:
ஆடை இல்லாமல் தூங்குவது மன அழுத்தத்தை குறைக்கும் என்றும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகளில் கண்டறிந்துள்ளன. மேலும், இது மூளையில் இருந்து நச்சு புரதங்களை வெளியேற்றுகிறது. ஆடையின்றி தூங்குவது உடலில் உள்ள கார்டிசோலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இது சிறந்த மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சரும பாதுகாப்பு:
போதுமான தூக்கம் சருமத்தை பாதுகாப்பாக வைக்க உதவி செய்யும். உங்கள் உடலை போலவே, உங்கள் சருமத்திற்கும் ஒருநாள் முழுவதும் செயல்பாட்டிற்கு பிறகு ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி தேவை. நீங்கள் தூங்கும்போது உங்கள் சருமம் தளர்வாகும். ஆடை இல்லாமல் தூங்குவது சிறந்த தூக்கத்திற்கு உதவுகிறது. இது உங்களை புத்துணர்ச்சியடைய போதுமான நேரத்தை வழங்குகிறது.
எடையை அதிகரிக்காமல் தடுக்கும்:
மோசமான தூக்கம் உங்கள் மன அழுத்தத்தை கொடுத்து எடையை அதிகரிக்க செய்யும். ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவரது உடலில் இருக்கும் அட்ரீனல் சுரப்பிகளானது அட்ரினலின் மற்றும் கார்டிசோலை வெளியிடுகின்றன. இது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை மாற்றி எடையை அதிகரிக்க செய்கிறது. அதேநேரத்தில், ஆடை இல்லாமல் அல்லது மேலாடை இல்லாமல் தூக்குவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவி செய்யும். இதனால், எடையும் அதிகரிக்காது.
ALSO READ: Women Health: கர்ப்பம் தரிக்க சிறந்த வயது எது..? தாமதமானால் இந்த பிரச்சனை ஏற்படும்!
விந்தணு அதிகரிக்கும்:
விந்தணுக்களைத் தாங்கி நிற்கும் ஆண் விதைப்பை, சரியாகச் செயல்பட எப்போதும் குளிர்ச்சியான மற்றும் காற்றோட்டமான சூழல் மிக மிக தேவை. இறுக்கமான உள்ளாடைகள் அதிக வெப்பநிலையை ஏற்படுத்தும் என்பதால், ஆடை இல்லாமல் தூங்குவது சரியான வழி. இது பிறப்புறுப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டை எளிதாக்கி ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்கிறது. உள்ளாடை இன்றி தூங்குவது ஆண்களின் ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
முடிந்தவரை உள்ளாடை இல்லாமல் லேசான ஆடைகளுடன் தூங்குவது சிறந்த பலனை தரும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)