Health Tips: காய்ச்சலின்போது எந்த உணவுகளை சாப்பிடக் கூடாது தெரியுமா..? இந்த தவறுகளை செய்யாதீங்க!
Fever: மழைக்காலமோ, வெயில் காலமோ உங்களுக்கு எந்த காலத்தில் காய்ச்சல் வந்தாலும், உங்கள் வாய் கசக்க தொடங்கும். எந்த உணவுகளை சாப்பிட்டாலும், உங்களால் சரியாக சாப்பிட முடியாது. இதனால் உடல் பலவீனமடையும். இதுமாதிரியான நேரத்தில், நீங்கள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். இதை செய்வதன்மூலம், காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைவீர்கள்.
காய்ச்சல்: கோடை காலம் முடிந்து மழைக்காலம் விரைவில் ஆரம்பிக்க போகிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்த மாதிரியான நேரத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டால், அதற்கு ஏற்றார்போல் உணவுகளையும் எடுத்துக்கொள்வது அவசியம். மழைக்காலமோ, வெயில் காலமோ உங்களுக்கு எந்த காலத்தில் காய்ச்சல் வந்தாலும், உங்கள் வாய் கசக்க தொடங்கும். எந்த உணவுகளை சாப்பிட்டாலும், உங்களால் சரியாக சாப்பிட முடியாது. இதனால் உடல் பலவீனமடையும். இதுமாதிரியான நேரத்தில், நீங்கள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். இதை செய்வதன்மூலம், காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைவீர்கள். இருப்பினும் நிறைய பேருக்கு காய்ச்சலின்போது எந்த வகையாக உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், எடுத்துக்கொள்ள கூடாது என்பது தெரிவதில்லை. அதை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சாப்பிடக் கூடாதவை:
புளிப்பு மற்றும் குளிர்ச்சி:
காய்ச்சல் இருக்கும்போது தவறுதலாக கூட புளிப்பு மற்றும் குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொள்ள கூடாது. ஏனெனில், காய்ச்சலின்போது நமது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், அரிசியை நேரடியாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. இது செரிமானத்தை தாமதப்படுத்தும். காய்ச்சலின்போது அரிசி சாதத்தை கஞ்சியாகவோ அல்லது ரொட்டி எடுத்துகொண்டால் ஜீரணமாகும். அதேபோல், குளிர்ச்சியான எதையும் உட்கொள்வது தொண்டையில் கரகரப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே தயிர், மோர் போன்றவற்றை சாப்பிட வேண்டும். குளிர்ந்த நீரை கூட குடிக்க வேண்டும்.
காரமான உணவுகள்:
காய்ச்சலின்போது வாயில் சுத்தமாக சுவை தெரியாது. அந்த நேரத்தில், காரணமான உணவை சாப்பிடுவது நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தும். சில சமயங்களில் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். காரமான உணவை ஜீரணிக்க உடல் அதிக நேரம் எடுக்க்கும்.
காய்ச்சலின்போது ஆட்டிறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. இதில், அதிகளவிலான கொழுப்பு உள்ளது. இதனால், ஆட்டிறைச்சி ஜீரணிக்க நேரம் எடுத்து, உடல் பிரச்சனைகளை கொடுக்கும். மேலும் கோழிக் கறி, முட்டை போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.
பீட்சா மற்றும் பாஸ்தா சாப்பிடுவதையும் தவிர்க்கவும். இதில், பயன்படுத்தப்படும் சீஸில் சோடியம் அதிகம் உள்ளது. காய்ச்சலின்போது இதுபோன்ற உணவுகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிப்படைய செய்யும்.
என்ன சாப்பிடலாம்…?
காய்ச்சலின்போது காலை உணவாக பழங்களை எடுத்துகொள்வது நல்லது. ஆனால், ஆரஞ்சு போன்ற புளிப்பு பழங்களை சாப்பிடாதீர்கள். வேகவைத்த காய்கறிகளை சாப்பிடுவதும் நல்லது. மதிய நேரம், அரிசி கஞ்சி, உளுந்து கிச்சடி போன்ற உணவுகளை சாப்பிடலாம். அதேபோல், இரவு உணவு நேரத்தில் காய்கறி சூப் மற்றும் முளைத்த தானியங்கள போன்றவற்றை சாப்பிடலாம்.
ALSO READ: Home Tips: கறையால் மெத்தை மீதான மோகம் போனதா..? இந்த தந்திரத்தால் பொலிவு கொடுங்கள்!
தண்ணீர்:
காய்ச்சலின்போது வழக்கத்தை விட 2 மடங்கு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர் பற்றாக்குறையால், பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன. எனவே, நிறைய தண்ணீர் குடிக்கலாம். தேங்காய தண்ணீர் குடிப்பதால், காய்ச்சலால் பாதிக்க பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றன.
ஆப்பிள்:
காய்ச்சல் ஏற்பட்டால் வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் பழங்களை சாப்பிடலாம். இவை இரண்டிலும் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. இது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)