Bone Health: இளம் வயதிலேயே மூட்டு வலி ஏன் வருகிறது தெரியுமா..? - Tamil News | Do you know why joint pain occurs at a young age; health tips in tamil | TV9 Tamil

Bone Health: இளம் வயதிலேயே மூட்டு வலி ஏன் வருகிறது தெரியுமா..?

Published: 

24 Oct 2024 19:41 PM

Health Tips: எலும்பு ஆரோக்கியத்திற்கு எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். அதிக உடல் எடை இடுப்பு, முழங்கால் மற்றும் கணுக்கால் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பது எலும்பு பிரச்சனைகளை மோசமாக்கும். நீண்ட நேரம் உட்காருவது அல்லது படுப்பது முதுகுத்தண்டில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

1 / 6இன்றைய

இன்றைய காலகட்டத்தில் கை, கால் வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இது எலும்பு பிரச்சனையாக இருக்கலாம். எலும்பு பிரச்சனை என்றால் முதல் செய்ய வேண்டியது கால்சியம் மற்றும் வைட்டமின் டி மருத்துகளை உட்கொள்வதுதான்.

2 / 6

30 வயதிற்குள் பலர் தரையில் உட்கார்ந்து எழுவதில் சிரமம், முழங்கால்களை நீட்டி மடக்குவதில் சிரமம், படிக்கட்டுகளில் ஏறும்போது கால்களில் வலி, எடையுள்ள பொருட்களைத் தூக்கும்போது முதுகு, தோள்பட்டைகளில் வலி போன்றவை உள்ளது என்றால் பலவீனமான எலும்புகளை குறிக்கும் அறிகுறிகளாகும்.

3 / 6

உடலுக்கு தேவையான சரியான ஊட்டச்சத்து இல்லாததால், எலும்புகளின் வலிமை குறைய தொடங்கும். இவற்றை மருந்துகளால் மட்டும் குணப்படுத்த முடியாது. சில வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்து சரிபடுத்தலாம்.

4 / 6

அந்தவகையில் எலும்பு ஆரோக்கியத்திற்கு எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். அதிக உடல் எடை இடுப்பு, முழங்கால் மற்றும் கணுக்கால் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பது எலும்பு பிரச்சனைகளை மோசமாக்கும். நீண்ட நேரம் உட்காருவது அல்லது படுப்பது முதுகுத்தண்டில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

5 / 6

தினசரி உடற்பயிற்சி செய்வது எடையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலின் பல்வேறு மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகள் வலுவாக இல்லாவிட்டால், காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

6 / 6

நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது தவறான தோரணையில் படுத்திருப்பது முதுகு, கழுத்து அல்லது கட்டமைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்யும்போது அல்லது நடக்கும்போது செட் ஆகாத ஷூக்களை அணிவது எலும்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல், நீண்ட நேரம் ஹீல்ஸ் அணிவதால் முதுகுத்தண்டில் பிரச்சனைகள் ஏற்படும்.

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!