Kitchen Tips: வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக வைக்கக் கூடாது! ஏன் தெரியுமா?
Kitchen Hacks: எந்த பழங்களாக இருந்தாலும் பெரும்பாலும் நாம் பிளாஸ்டிக் பைகளில் முடிச்சுகளை போட்டு ஃப்ரிட்ஜ்களில் வைப்போம். இது விரைவில் கெட்டுப்போகும். அந்தவகையில், எந்தெந்த காய்கறிகள் மற்றும் பழங்களை ஒன்றாக வைக்கக்கூடாது, எதை எங்கே எப்படி வைக்கலாம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
வீட்டில் உள்ள படுக்கறை, ஹால் எப்படி பார்த்து பார்த்து பராமரிக்கிறோம். ஆனால், கிட்சனை பற்றி பெரும்பாலும் கவலைப்படுவது கிடையாது. கடுகு, சீரகம் உள்ளிட்ட பொருட்களை தனித்தனியாக டப்பாகளில் கொட்டி வைக்கிறோம். ஆனால், கடை மற்றும் மார்க்கெட்களில் வாங்கும் காய்கறிகளை மொத்தமாக அடுப்பிடிகளில் உள்ள செல்ப்களிலும், ஃபிரிட்ஜ்களிலும் கொட்டி வைக்கிறோம். ஆனால், இவ்வாறு செய்வது காய்கறிகளை விரைவில் கெட்டுப்போக செய்யும். அதன்படி, ஒரு சில காய்கறிகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து வைப்பது நல்லதல்ல. எந்தெந்த காய்கறிகள் மற்றும் பழங்களை ஒன்றாக வைக்கக்கூடாது, எதை எங்கே எப்படி வைக்கலாம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
உருளை – வெங்காயம்:
உருளையும் மற்றும் வெங்காயத்தை ஒன்றாக பக்கத்தில் வைப்பது விரைவில் கெட்டுப்போக செய்யும். அதாவது, இவை இரண்டும் மண்ணுக்குள் ஒரே வித சூழலில் வளர்ந்த உணவுப்பொருட்களாகும். வெங்காயத்தின் ஈரப்பதம் உருளை மீது தாக்கத்தை ஏற்படுத்தி, ஒன்றை ஒன்றை விரைவி கெட செய்யும். வெங்காயம், உருளைக்கிழக்கு மட்டுமின்றி, மண்ணில் வளர்க்கூடிய பீட்ரூட், கருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளையும் வெங்காயத்துடன் வைக்காமல் தவிர்ப்பது நல்லது.
ALSO READ: Night Food: இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்.. சிறுநீரகத்திற்கு ஆபத்தை தரும்!
ஆரஞ்சு மற்றும் ஆப்பிள்:
கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் ஆரஞ்சு மற்றும் ஆப்பிள்களை ஒன்றாக ஒரே இடத்தில் வைத்து பார்த்திருப்போம். ஆனால், இவை இரண்டுகளை எப்போதும் இருப்பது சரியானது கிடையாது. இவைகளை ஒன்றாக வைக்கும்போது எதிர் எதிர் வினைகளை உண்டாக்கி அதன் பண்புகளை கெடுத்துவிடும். எனவே, இனி சமையல் அறையிலும், ஃபிரிட்ஜில் ஆரஞ்சு மற்றும் ஆப்பிள்களை ஒன்றாக வைக்காதீர்கள்.
ஆப்பிள்:
முடிந்தவரை கடைகளில் வாங்கும் ஆப்பிள்களை தனியான இடத்திலே வைத்து பழகி கொள்ளுங்கள். மேலும், பூசணி போன்றவற்றிற்கு அருகில் மறந்தும் கூட வைத்து விடாதீர்கள். அதற்கு காரணம், பூசணிக்காயில் இருந்து வெளிப்படும் குளிர்ச்சியானது ஆப்பிளில் இருக்கும் தட்பவெப்பத்தை கெடுத்து சீக்கிரமே கெட்டு போக செய்யும்.
திராட்சை:
எந்த பழங்களாக இருந்தாலும் பெரும்பாலும் நாம் பிளாஸ்டிக் பைகளில் முடிச்சுகளை போட்டு ஃப்ரிட்ஜ்களில் வைப்போம். அப்படி இல்லையென்றால், பிளாஸ்டிக் டப்பாகளில் அடைத்து வைப்போம். இவ்வாறு செய்வதும், அதன் வேதி தன்மையை கெடுக்க செய்யும். அதிலும் குறிப்பாக, திராட்சை போன்ற கொடி வகையை சார்ந்த பழங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்காதீர்கள். இது விரைவில் அதன் தன்மையை கெடுத்து, கெட்டுபோக செய்யும். அதற்கு பதிலாக துணி பைகளில் வைக்கலாம். இது காற்றோட்டத்தை கொடுத்து, அதன் தன்மையை கெடாமல் பாதுகாக்கும்.
வெள்ளரிக்காய்:
நாம் கடைகளில் வாங்கும் வாழைப்பழம் தக்காளி, எலுமிச்சை போன்ற காய்கறி மற்றும் பழங்களில் இருந்து எத்திலீன் என்ற வாயு வெளியாகும். இதன் காரணமாகவே, இவைகள் விரைவில் கெட்டுப்போக தொடங்குகின்றனர். இதே பண்புகளும் வெள்ளரிக்காயில் உள்ளது. வெள்ளரிக்காய் அதிகளவில் எத்திலீனை வெளியிடும். எனவே, வெள்ளரியுடன் எந்தவிதமாக காய்கறி மற்றும் பழங்களை வைக்காதீர்கள், இது அதன் தன்மையை கெடுத்து கெட்டுபோக செய்யும்.
வாழைப்பழம்:
நம் சிறுவயத்தில் கடைகளில் வாங்கும் வாழைப்பழத்தை கயிறு கட்டி தொங்க விட்டு பார்த்திருப்போம். அதற்கு காரணம் வாழைப்பழத்தில் இருந்து வெளிப்படும் தட்பவெப்பம் மற்றவற்றை பாதிக்கும் என்பதால் தான். எனவே, வாழைப்பழத்தை முடிந்தவரை, தனியாக வைத்து பழகி கொள்ளுங்கள். அதேபோல், வாழைப்பழத்தை கடைகளில் இருந்து வாங்கி வந்ததும் பிளாஸ்டிக் கவர்களில் இருந்து காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வையுங்கள். இது விரைவில் கெட்டுபோவதை தடுக்கும்.
தக்காளி:
சில பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்போதும் எக்காரணத்தை கொண்டு ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. அதில், மிக முக்கியமானது தக்காளி. தக்காளியை ஃபிரிட்ஜில் வைப்பதன்மூலம், அதன் மணமும், சுவையும் மாறிவிடுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி, ஃப்ரிட்ஜில் வைக்கப்படாத தக்காளியே அதிக ஆரோக்கியத்தையும், சுவையையும் தருவதாக கூறப்படுகிறது.
ALSO READ:Hemoglobin: தினசரி உணவில் இவை இருந்தால் போதும்! 10 நாட்களில் இரத்தம் அதிகரிக்கும்..!
எந்தெந்த உணவு பொருட்களை எங்கு வைக்கலாம்..?
- வெங்காயத்தின் சிறந்த நண்பனான பூண்டு அறியப்படுகிறது. எனவே, வெங்காயத்தையும் பூண்டையும் அருகில் வைக்கலாம், இவை இரண்டும் நீண்ட நாட்கள் கெடாமல் ஒன்றாக இருக்கும்.
- எப்போதும் ஞாபகத்தில் இருக்க வேண்டிய விஷயம், வேர் காய்கறிகளான பீட்ரூட் கேரட், கருணை கிழங்கு மற்றும் மற்ற கிழங்கு போன்றவற்றை அதிக இருட்டு உள்ள பகுதிகளில் வைத்தால் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கும்.
- முட்டை போன்ற பொருட்களை காற்றோட்டமாக வைப்பதை விட ஃபிரிட்ஜ் அல்லது உப்புடன் சேர்த்து வைக்கலாம். முட்டையில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஃபிரிட்ஜ் மற்றும் உப்பில் வைப்பதால் குறைகிறது.