ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா? - Tamil News | Do you put this fruits in the fridge then you won't get any benefits details in Tamil | TV9 Tamil

ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?

Published: 

22 Nov 2024 09:02 AM

Fruits in Fridge: பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு பல சத்துகள் கிடைக்கும்.‌ ஆனால் பழங்களை சேமிப்பதற்காக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படுகிறது. இப்படி குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதால் எந்த பலனும் கிடைக்காது.

1 / 5எல்லாவற்றையும்

எல்லாவற்றையும் ஃபிரிட்ஜில் வைக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. எதை வைக்க வேண்டும் எதை வைக்கக் கூடாது என்று இல்லாமல் அனைத்தையும் உள்ளே வைத்து விடுவோம். அதில் பழங்களும் ஒன்று. சில வகையான பழங்களை மட்டுமே குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சில பழங்களை வெளியில் தான் வைக்க வேண்டும்.

2 / 5

அவகோடா எனப்படும் வெண்ணெய் பழத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது. அதை குளிரூட்டினால் சுவை இருக்காது. அதன் தன்மை மாறிவிடும். அறையில் இருக்கும் வெப்ப நிலையில் வைத்தாலே போதுமானது. ஆனால் அழுத்த அவகோடா பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.

3 / 5

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத பழங்களில் ஒன்று அன்னாசி. அன்னாசி பழத்தையும் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க கூடாது. குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை

4 / 5

அதை போல் சிட்ரஸ் நிறைந்த பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. எலுமிச்சை, ஆரஞ்சு, பீட்ரூட் மற்றும் நார்த்தை பழங்களையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. அதை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் சுவை குறைந்து விடும்.

5 / 5

வாழைப்பழம், தக்காளி ஆகியவற்றையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. இதன் மூலம் சத்துக்கள் அழிவதோடு அதன் சுவையும் இழந்து விடும். குளிர்சாதன பெட்டியில் வைத்து அது சாப்பிடுவதால் எந்த பலனும் கிடைக்காது

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!