Drinks For Weight Loss: தினமும் குடிக்கும் டீ, காபியை தவிருங்கள்.. இந்த பானங்களை குடித்தால் உடல் எடை குறையும்!
Health Tips: உங்கள் எடையை குறைக்கவும், உங்களை ஆரோக்கியமாக வைக்கவும் தினசரி இந்த வகை மூலிகை பானங்களை காலை அல்லது மாலை வேளைகளில் எடுத்து கொள்ளலாம். மேலும், இவற்றை வெறும் வயிற்றில் காலையில் எடுத்து கொண்டால் ஒன்றல்ல, பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அது எந்த மாதிரியான மூலிகை டீ என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தினந்தோறும் பல மக்கள் தங்களது உடல் எடையை குறைக்க பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு கப் டீ, காபியை தவறாமல் எடுத்துக் கொள்கிறார்கள். டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது. இவற்றை தினமும் பால் மற்றும் சர்க்கரையுடன் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
அந்த வகையில், உங்கள் எடையை குறைக்கவும், உங்களை ஆரோக்கியமாக வைக்கவும் தினசரி இந்த வகை மூலிகை பானங்களை காலை அல்லது மாலை வேளைகளில் எடுத்து கொள்ளலாம். மேலும், இவற்றை வெறும் வயிற்றில் காலையில் எடுத்து கொண்டால் ஒன்றல்ல, பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அது எந்த மாதிரியான மூலிகை டீ என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை, தேன் டீ:
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை எலுமிச்சை ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒரு ஸ்பூன் மிளகு தூள் கலந்து கொள்ளலாம். இந்த வகை பானம் உடலில் கொழுப்பு செல்கள் சேராமல் தடுக்கும். மேலும், எலுமிச்சையில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் உடலில் இருக்கும் சளியை குறைக்கும். உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுப் பொருட்களை அகற்றி, உடல் எடையை குறைக்க உதவும்.
சீரக தண்ணீர்:
சீரக தண்ணீர் ஒரு மூலிகை பானமாக பார்க்கப்படுகிறது. இது உடல் எடையை குறைக்க உதவி செய்யும். சீரகத்தில் உள்ள ஆல்டிஹைட் மற்றும் தைமோகுவினோன் போன்ற கலவைகள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் அழற்ஜி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றவை. சீரக தண்ணீர் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவி செய்யும்.
நெல்லிக்காய் ஜூஸ்:
மழை மற்றும் குளிர்காலத்தில் நெல்லிக்காய் பல வகைகளில் நன்மை தரும். வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ் தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம். இவை உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கலோரிகளை எரிக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதில் நிறைந்துள்ளன. இதை தினமும் காலையில் குடிப்பதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடைய செய்யும்.
சோம்பு தண்ணீர்:
ஒரு கப் தண்ணீரில் அரை டீ ஸ்பூன் சோம்பு சேர்த்து 5 நிமிட கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அதிகப்படியான பசியை குறைக்கும். மேலும், இது உடலில் உள்ள அனைத்து நச்சுகள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்ற உதவும்.
வெந்தய தண்ணீர்:
வெந்தயம் உடல் பருமனை குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.
இலவங்கப்பட்டை தண்ணீர்:
இலவங்கப்பட்டை தண்ணீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உடல் எடையை குறைக்க, இரவில் தூங்கும் முன் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கவும்.
கஷாயம்:
ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி, கருப்பு மிளகு, துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் கஷாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
தினசரி குடிக்கும் டீ மற்றும் காபிக்கு பதிலாக இவற்றை பானங்களாக எடுத்துக்கொள்ளலாம். இவை உங்களுக்கு உடல் எடையை குறைத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)