Dry Dates Benefits: ஊற வைத்த பேரீட்சை பழம் சத்துகள்.. காலையில் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா? - Tamil News | soaked dry dates chuara benefits in tamil | TV9 Tamil

Dry Dates Benefits: ஊற வைத்த பேரீட்சை பழம் சத்துகள்.. காலையில் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

Updated On: 

16 Jul 2024 20:52 PM

உலர் பேரீச்சம்பழத்தில் நாம் எப்போதும் சாப்பிடும் பேரீச்சம்பழத்தைவிடவும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நன்றாக உலர்த்தப்பட்ட இந்த பேரீச்சையில் அளப்பரிய வைட்டமின்களும், தாதுக்களவும் நமது உடலை புத்துணர்வோடும், பல்வேறு நோய்களில் இருந்தும் பாதுகாக்க உதவுகின்றன. தற்போது, தினமும் காலை நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்த 4 பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வருவது நமது உடலுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

Dry Dates Benefits: ஊற வைத்த பேரீட்சை பழம் சத்துகள்.. காலையில் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

பேரீச்சம் பழம்

Follow Us On

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நமது உடலுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், உலர் பேரீச்சம்பழம் அதைவிட மிகுதியான நன்மைகளை வழங்குகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நற்பதமான பேரீச்சம்பழத்தை நன்றாக உலர்த்தி கிடைக்கக் கூடியவையே உலர் பேரீச்சை, இதை சுவாரா என்றும் சொல்வதுண்டு. தினமும் 4-5 உலர் பேரீச்சம்பழங்களை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வருவதால், உடலுக்கு அத்துனை நன்மைகள் கிடைக்கின்றன. 

Also Read:  தாங்க முடியாத முதுகுவலியையும் குறைக்கும் சிம்பிளான உடற்பயிற்சி..!

மலச்சிக்கலை போக்கும்

உலர் பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை தூண்டி உணவை செரிக்க செய்கிறது. குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே, அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், 4-5 உலர் பேரீச்சம்பழத்தை இரவு தூங்கும் முன் 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்துவிட்டு, பேரீச்சம்பழத்தை சாப்பிட வேண்டும். உடனடியாக நிவாரணம் அளிக்கும்.

இரத்த சோகையை தடுக்கும்

உலர் பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு இரும்புச்சத்து அத்தியாவசியமான ஒன்று. எனவே, இரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் 4-5 உலர் பேரீச்சம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம். மேலும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதால், தினமும் இந்த பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

Also Read: Did You Know: செல்போன் அடியில் இருக்கும் சிறிய துளை.. எதற்காக தெரியுமா?

எலும்புகளை வலுவாக்கும்

தற்போது ஏராளமானோர் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இவற்றில் இருந்து குணமாகவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் தினமும் இந்த உலர் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வாருங்கள். 

சருமத்தை பளபளப்பாக்கும்

ஊற வைத்த உலர் பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிடுவது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கிறது. உடைந்த செல்களை சீராக்குகிறது. தோலின் பளபளப்பை கூட்டி இளமையாக தோன்ற செய்கிறது. மேலும், சுருக்கங்கள் மற்றும் கோடுகளை நீக்கி மினுமினுப்பாக வைத்துக் கொள்கிறது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த உலர் பேரீச்சம்பழம் உதவுகிறது. எனவே, தினமும் 1-2 பேரீச்சையை தண்ணீரில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இருப்பினும், மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

குழந்தைகளுக்கு எப்படி கொடுக்கலாம்?

எக்கச்சக்கமான ஊட்டச்சத்து இருப்பதால் உலர் பேரீச்சம்பழத்தை அனைத்து வயதினமும் சாப்பிடலாம். எனவே, குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து சத்தான உணவை கொடுத்துவருவது அவர்கள் பிற்காலத்தில் ஏற்படும் நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.  குழந்தைகளுக்கு உலர் பேரீச்சம்பழத்தை ஊற வைத்துக் கொடுக்காமல், அதை பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள், அந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் பாலில் கலந்துக் கொடுக்கலாம். இது குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்கவும், செரிமானம் சம்பந்தபட்ட பிரச்சனைகளை போக்கவும் உதவும்.

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
Exit mobile version