Health Tips: பெண்களின் உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா..? நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!

Weight Gain: ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல், சோம்பேறித்தனம், உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருத்தல் காரணங்களினால் ஒரு சிலருக்கு எடையானது அதிகரிக்க தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள்தான் அதிகளவில் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது 4ல் 3 பேர் திருமணத்திற்கு பிறகு உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. பல நேரங்களில் பெண்கள் எடை அதிகரிப்பதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

Health Tips: பெண்களின் உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா..? நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!

உடல் எடை (SCIENCE PHOTO LIBRARY/Getty Images)

Published: 

04 Sep 2024 13:04 PM

உடல் எடை அதிகரிப்பு: இன்றைய நவீன வாழ்க்கையில் பணி சுமை மற்றும் மோசமான உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக உடல் பருமன் பிரச்சனையை பலர் சந்திக்க தொடங்குகின்றனர். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல், சோம்பேறித்தனம், உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருத்தல் காரணங்களினால் ஒரு சிலருக்கு எடையானது அதிகரிக்க தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள்தான் அதிகளவில் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது 4ல் 3 பேர் திருமணத்திற்கு பிறகு உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. பல நேரங்களில் பெண்கள் எடை அதிகரிப்பதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அந்த வகையில், பெண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Tips: பாலியல் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

மன அழுத்தம்:

பல பெண்கள் தினசரி அதிகளவில் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். பெண்கள் அலுவலகத்திலும் சரி, வீட்டு வேலைகளிலும் சரி அதிக பணிச்சுமையை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் அவர்களுக்கு உடல் எடை பிரச்சனையை சந்திக்க வழிவகை செய்கிறது. ஏனெனில் மன அழுத்தத்தால் உடலில் உள்ள ‘கார்டிசோல்’ என்ற ஹார்மோன் அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்க துணை புரிகிறது. இத்தகைய சூழ்நிலையில், பெண்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா உள்ளிட்டவற்றை செய்து தங்களது மனநிலையை ஒருநிலை படுத்துவது மிக முக்கியம்.

மோசமான உணவு வழக்கம்:

பெண்கள் மற்றும் மட்டுமல்ல ஆண்கள் உள்பட உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மோசமான உணவு பழக்கம். முழு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் பார்த்து பார்த்து சமைக்கும் பெண்கள், தங்கள் உணவு பழக்கவழங்களில் கவனம் செலுத்துவது கிடையாது. இதன் காரணமாக எடை பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். தாமதமாக உணவு எடுத்து கொள்ளுதல், மிச்சமாகி விடும் என்ற பயத்தில் மீதம் இருக்கும் உணவை எடுத்துகொள்ளுதல் போன்ற காரணத்தினால் உடலில் எடை அதிகரிக்க தொடங்குகிறது.

குறைவான தூக்கம்:

தூக்கமின்மை பிரச்சனையையும் பெண்களின் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாகி விடுகிறது. சரியான தூக்கம் இல்லாததால் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையாக இருப்பது இல்லை. இதனுடன் வளர்சிதை மாற்றம் குறைவதால், பசி அதிகரிக்கும். இதனால், அதிகபடியான உணவு எடுத்துகொள்வதும் உடல் எடை அதிகரிக்க ஒரு காரணமாகி விடுகிறது.

ALSO READ: Health Benefits Of Dates: பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? நீங்களும் தெரிஞ்சுகோங்க!

உடற்பயிற்சி:

உடல் பருமன் அதிகரிப்பதற்கு உடல் இல்லாததும் ஒரு காரணமாகி விடுகிறது. நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தல், நாள் முழுவதும் படுத்துக் கொள்வதும் எடையை அதிகரிக்க செய்யும். பெண்கள் வீட்டி வேலை செய்து முடித்தவுடன், நேராக ஓய்வு எடுக்க சென்று விடுகிறார்கள். உடல் சோர்வு காரணமாக, இதைதான் யாராக இருந்தாலும் செய்வார்கள். அதேசமயம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, வீட்டு வேலைகளை மட்டும் செய்யாமல், உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி போன்றவைகளையும் மேற்கொள்வது முக்கியம்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?