Healthy life Tips: ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிறீர்களா? இதை பின்பற்றுங்கள்! - Tamil News | | TV9 Tamil

Healthy life Tips: ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிறீர்களா? இதை பின்பற்றுங்கள்!

Updated On: 

13 May 2024 16:37 PM

Health tips: ஆரோக்கியமான வாழ்விற்கான 7 வழிமுறைகள்.

1 / 7யாரைக்

யாரைக் கேட்டாலும் ஏதோ ஒரு தொந்தரவு இருப்பதைத்தான் சொல்லி புலம்புகிறார்களே தவிர, நல்லா ஆரோக்கியமாக இருக்கிறேன் என யாருமே தானாக முன்வந்து சொல்வதில்லை. இந்த தொந்தரவுகளை எல்லாம் சமாளிக்க வேண்டுமென்றால் எப்பொழுதாவது சில வழிமுறைகளைப் பின்பற்றினால் போதாது. தினமும் சில வழிமுறைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும். இப்படி பின்பற்றுவதன் மூலம் திடீரென ஏற்படும் இதய நோய்கள், நீரிழிவுநோய், கேன்சர் போன்றவற்றிலிருந்து ஓரளவு நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 1. சரிவிகித உணவு: சும்மா எப்பொழுது பார்த்தாலும் சாப்பாடு, தோசை, இட்லி என்று சாப்பிடாமல், உணவில் காய்கறிகள், பழங்கள், திணைவகைகள், கொட்டை வகைகள் என எல்லாமும் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. குறைந்தது 400 கிராம் பழங்கள் காய்கறிகளை நம் தினசரி உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2 / 7

2. உப்பின் அளவு: தினமும் பயன்படுத்தப்படும் உப்பின் அளவை சரியாகக் கையாள வேண்டும். நாம் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவானது ஒரு ஸ்பூன் அளவைத் தாண்டக்கூடாது. இது சமையலில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் நாம் எடுத்துக்கொள்ளும் இதர ஸ்னாக்ஸ் ஐட்டங்கள் எல்லாமும் சேர்த்துதான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை குறைந்த அளவு உப்பை சமையலில் பயன்படுத்துங்கள். தேவையற்ற உப்பு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. இது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.

3 / 7

3. சர்க்கரை அளவு: உப்பைப் போலவே தினமும் நாம் பயன்படுத்தும் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கவேண்டும். ஒரு நாளைக்கு 50கிராம் அல்லது 12 ஸ்பூன் என்ற கணக்கில் சர்க்கரையின் அளவை எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவை நாம் சரியாக பின்பற்ற வேண்டுமெனில் சர்க்கரை கலந்த ஜூஸ், மிட்டாய், அதிக இனிப்புச் சுவையுடைய பழவகைகளை அதிகம் உட்கொள்ளாமல் இருக்கலாம். இதை சரியாகப் பின்பற்றினால் நீரிழிவு நோய், சில கேன்சர்,இதய நோய்கள் போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

4 / 7

4. தேவற்ற கொழுப்பு: உடலுக்குத் தேவையான கொழுப்பு 30% மட்டுமே. அவற்றை சரியக எடுத்துக்கொள்ள நிறைவுறா கொழுப்பைக்கொண்ட நட்ஸ், மீன், ஆலிவ் ஆயில், அவகோடா போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக கறி, வெண்ணெய், சீஸ், பேக்கிங் புட்ஸ், ஃபாஸ்ட் புட்ஸ் போன்றவற்றை தவிர்க்கவேண்டும்.

5 / 7

5. நீர் அளவு: உடலானது எப்பொழுதுமே நீரின் அளவை சரியாக வைத்திருத்தல் அவசியம். ஒருநாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். தசை, தோல், மற்றும் அனைத்து உறுப்புகளும் இதனால் சரியாகச் செயல்படும். சரியான அளவு நீரை எடுத்துக்கொள்ளாவிட்டால் நீரிழப்பு, சோர்வு, தலைவலி, வறண்ட சருமம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை ஏற்படுத்தும்.

6 / 7

6. உடற்பயிற்சி: ஒரு வாரத்திற்கு இரண்டு மணி நேரம் அல்லது ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் என்ற அளவில் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்தல் அவசியம். அது நடப்பது, ஓடுவது, நீந்துவது, உடல் சம்மந்தம்பட்ட பயிற்சி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது நோய் மற்றும் மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.

7 / 7

7. நல்ல தூக்கம்: ஒரு மனிதனுக்குத் தூக்கம் என்பது மிகவும் முக்கியம், ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூக்கமானது நல்ல ஆரோக்கியத்தையும், எதிர்ப்புசக்தியையும் கொடுக்கிறது. மேலும் இது நல்ல மனநிலையையும் உடல்நிலையையும் தரவல்லது.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version