Monsoon Prevention: பருவநிலை மாற்றத்தால் சளி தொல்லையா? மிளகுடன் துளசியை இப்படி சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்!
Health Tips: சில நோய்களுக்கு துளசியுடன் கருப்பு மிளகையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பல நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில், துளசி இலை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடுவதால் எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
துளசி செடி ஆன்மீகரீதியாக சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. துளசி இலைகள் ஆயுர்வேதத்தில் மிக முக்கிய மூலிகை செடியாகும். துளசி இலை தினமும் சாப்பிடுவதால் பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் சில நோய்களுக்கு துளசியுடன் கருப்பு மிளகையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பல நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில், துளசி இலை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடுவதால் எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Monsoon Prevention: மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க வேண்டுமா..? இதை பின்பற்றினால் போதுமானது!
காய்ச்சலுக்கு நிவாரணம்:
மழை மற்றும் குளிர்காலத்தில் அடிக்கடி காய்ச்சல் வந்தாலோ அல்லது நீண்ட காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாலோ இந்த கஷாயம் செய்து குடித்தால் நன்மை கிடைக்கும். இதையடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் துளசி இலைகளை போட்டு, அதில் மிளகு தட்டி, கருப்பட்டி சேர்த்து கொதிக்கவைத்து குடித்தால் இந்த பிரச்சனையில் நிவாரணம் கிடைக்கும்.
இருமல் பிரச்சனை நீங்கும்:
மாறும் பருவநிலை காலத்தில் சளியால் இருமல் தொந்தரவு செய்ய தொடங்கும். இந்த பிரச்சனையை சரிசெய்ய துளசி இலையுடன் கருப்பு மிளகை கலந்து தினமும் சாப்பிடலாம். இது இருமலுக்கு மட்டுமல்ல, சளி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
மூச்சுத் திணறல்:
மாசு மற்றும் தூசி பிரச்சனையால் ஒருவருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டால், அவர் துளசி இலைகளுடன் கருப்பு மிளகை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பது நல்லது. இது நுரையீரலில் ஒவ்வாமை ஏற்படாமல் பாதுகாக்கும். துளசி இலைகலில் சாற்றில் தேன், மிளகு, சிறிதளவு இஞ்சி சாறு குடிப்பது மூச்சுக்குழாய் அழற்ஜி, ஆஸ்துமா, காய்ச்சல், இருமல் மற்றும் ஆகிவற்றை சரி செய்யும்.
வாயு:
யாருக்காவது அடிக்கடி வயிற்று வலி, வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால், துளசி இலையுடன் கருப்பு மிளகை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு மற்றும் வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தரும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்:
துளசி இலைகளை கருப்பு மிளகு கலந்து தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். பருவநிலை மாற்றத்தின்போது நோய் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படாமல், இந்த நோய் எதிர்ப்பு சக்தி பாதுகாக்கும். மேலும், துளசி மற்றும் கருப்பு மிளகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைக்க உதவி செய்யும். துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் உள்ளது. இது பல வகையான தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
இதய ஆரோக்கியம்:
துளசியில் அதிகளவு ஒமேகா 2 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது இதயத்தை ஆரோக்கியமான வைத்திருக்க உதவி செய்யும். துளசி நீரை தினமும் குடிப்பது மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
செரிமான ஆரோக்கியம்:
துளசி மற்றும் மிளகு கலந்த நீரை குடிப்பது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும். மேலும், இது அமிலத்தன்மை மற்றும் இரைப்பை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும். இதனை தினமும் உட்கொள்வது வயிற்றுக்கு நன்மையையும் தரும்.
ALSO READ: Conjunctivitis: மழைக்காலத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ..! கண்களை பாதிக்காமல் தடுப்பது எப்படி?
மன அழுத்தம் குறையும்:
துளசியில் அடாப்டோஜென் என்று ஒரு பொருள் உள்ளது. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும். இதனை தினமும் வெறும் வயிற்றில் எடுத்துகொள்வது மனம் மற்றும் உடலை ரிலாக்ஸாக வைக்க உதவும்.
தோலுக்கு நன்மை தரும்:
துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது முகத்தில் ஏற்படும் பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். மேலும், இதனை தினமும் எடுத்துக்கொள்வது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
புற்றுநோய் எதிர்ப்பு:
துளசியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இது தோல், வாய், கல்லீரல் மற்றும் நுரையீரல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)