5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Egg Benefits: உடல் எடையை 10 நாட்களில் குறைக்குமா முட்டை..? இப்படி சாப்பிட்டால் நல்ல பலன்..!

Health Benefits: உயர்தர புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக முட்டை கருதப்படுகிறது. ஒரு பெரிய வேகவைத்த முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது. இது சராசரி வயது வந்தோருக்கான தினசரி பரிந்துரைக்கப்பட்ட உட்கொள்ளலில் 12 சதவீதத்திற்கு சமம். உடல் எடையை குறைக்க அல்லது தசையை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு போதுமான அளவு புரதத்தைப் பெறுவது முக்கியம்.

Egg Benefits: உடல் எடையை 10 நாட்களில் குறைக்குமா முட்டை..? இப்படி சாப்பிட்டால் நல்ல பலன்..!
முட்டை (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 11 Nov 2024 11:03 AM

மாறிவரும் வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, வேலை மற்றும் மன அழுத்தம், துரித உணவுகள், தாமதமாக சாப்பிடும் முறை, நொறுக்கு தீனிகள், மொபைல் போன்களுக்கு அடிமையாதல் போன்ற பல காரணங்களால் பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றனர். இன்றைய நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே, உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த உடற்பயிற்சி, யோகா, ஆரோக்கியமான உணவு போன்றவற்றில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

இவற்றை மக்கள் கண்டுகொள்ளாதபோது உடல் எடை அதிகரிக்க தொடங்கும். அந்தவகையில், இன்று கடைகளில் எளிதாக கிடைக்கும் முட்டை கொண்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

ALSO READ: Food Recipe: காரசாரமான காரைக்குடி சிக்கன் வறுவல்.. எளிதாகவும், சூப்பராகவும் செய்வது எப்படி?

முட்டையில் உள்ள சத்துக்கள்:

முட்டையில் புரதம், கால்ச்யம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம், வைட்டமின் பி12, வைட்டமின் டி, பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், நியாசின், தயாமின், ஃபோலேட், வைட்டமின் ஏ, ரெட்டினோல், லூடீன், ஜியாக்சாண்டின், வைட்டமின் ஈ, வைட்டமின் டி, செலினியம், துத்தநாகம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

உடல் எடையை குறைக்க முட்டை பயனுள்ளதாக இருக்குமா..?

தினமும் முட்டையை தவறாமல் எடுத்து கொள்பவரின் உடலில் கொழுப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. இதற்கு, தினமும் கீழ்கண்டவற்றில் முட்டையை எடுத்து கொள்வது நல்லது. இது உங்களுக்கு முட்டை எடுத்து கொள்வதில் சலிப்பையும் தராது, உடல் பருமனில் இருந்து விரைவாக விடுபட உதவியும் செய்யும். மேலும், இது 10 நாட்களில் நல்ல பலனை தரும்.

உயர்தர புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக முட்டை கருதப்படுகிறது. ஒரு பெரிய வேகவைத்த முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது. இது சராசரி வயது வந்தோருக்கான தினசரி பரிந்துரைக்கப்பட்ட உட்கொள்ளலில் 12 சதவீதத்திற்கு சமம். உடல் எடையை குறைக்க அல்லது ஜிம்மிற்கு சென்று தசையை வலுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு போதுமான அளவு புரதத்தை முட்டை தருகிறது.

முட்டை மற்றும் கேப்சிகம்:

உங்களது உடல் எடையை சீக்கிரமாக நீங்கள் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், முட்டை மற்றும் குடைமிளகாயை எடுத்து கொள்ளலாம். குடைமிளகாயை பொடி பொடியாக நறுக்கி, கடாயில் சிறிதளவும் எண்ணையை ஊற்றி முட்டை, கேப்சிகம் மற்றும் உப்பு சேர்த்து கேப்சிகம் பொடி மாஸ் செய்து சாப்பிடலாம். இது உங்களை எடையை வேகமாக குறைத்து, உங்கள் ஆரோக்கியத்திற்கும் பல வகைகளில் நன்மையை தரும்.

முட்டை மற்றும் மிளகு:

கருப்பு மிளகை முட்டையுடன் சேர்த்து சாப்பிடுவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி செய்யும். இதற்காக, நீங்கள் பெரிதாக கஷ்டப்பட தேவை இல்லை. வேகவைத்த முட்டை அல்லது ஆம்லேட் மீது கருப்பு மிளகு பொடியை தூவி சாப்பிடலாம். இது உங்கள் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை வேகமாக கரைக்க உதவி செய்யும்.

முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்:

முட்டையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடுவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி செய்யும். அதாவது, தேங்காய் எண்ணெயில் மிக குறைந்த அளவிலான நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. சிறிதளவு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி ஆம்லெட் அல்லது பொடி மாஸ் செய்து சாப்பிடலாம். இது உங்கள் உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல், உடல் எடையை பராமரிக்கவும் உதவி செய்யும்.

ALSO READ: Cardamom Benefits: ஒரு நாளைக்கு இரண்டு ஏலக்காய் சாப்பிடுங்க! உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்..!

முட்டையின் நன்மைகள் என்ன..?

ஒரு வயது வந்த நபர் தினமும் 2 முட்டைகளை சேர்த்து கொண்டால் எலும்புகள் வலுவடையும். மேலும், முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முட்டையில் உள்ள லுடீன், ஜீயாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை கண்பார்வையை மேம்படுத்த உதவி செய்யும். அதேபோல், முட்டையில் உள்ள செலினியம், பி12, வைட்டமின் டி, புரோட்டீன் போன்றவை தசைகளை வலுவாக வைப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். அதேபோல், மூளை மற்றும் இதயம் பலன் பெறும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம், இது உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.

Latest News