5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Egg Veg or Nonveg: முட்டை சைவமா? அசைவமா? புரட்டாசி மாதம் சாப்பிடலாமா..?

Egg: முட்டையில் உள்ள புரதம் நம் உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. சிலர் பச்சை முட்டைகளை சாப்பிட விரும்புகிறார்கள், சிலர் வேகவைத்த முட்டைகளை விரும்புகிறார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட விரும்புகிறார்கள், ஏனெனில் இது புரதம் நிறைந்ததாக கருதப்படுகிறது. வருடத்தில் 11 மாதங்கள் முட்டை என்பது சைவமா அல்லது அசைவமா என்ற கேள்வி இருப்பது இல்லை. ஆனால், தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியதில் இருந்து முட்டை சைவமா, அசைவமா என்ற கேள்வி எழுகிறது.

Egg Veg or Nonveg: முட்டை சைவமா? அசைவமா? புரட்டாசி மாதம் சாப்பிடலாமா..?
முட்டை (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 19 Sep 2024 11:06 AM

தினந்தோறும் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என சிறுவயது முதல் நாம் கேள்வி பட்டிருக்கிறோம். முட்டையில் உள்ள புரதம் நம் உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. சிலர் பச்சை முட்டைகளை சாப்பிட விரும்புகிறார்கள், சிலர் வேகவைத்த முட்டைகளை விரும்புகிறார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட விரும்புகிறார்கள், ஏனெனில் இது புரதம் நிறைந்ததாக கருதப்படுகிறது. வருடத்தில் 11 மாதங்கள் முட்டை என்பது சைவமா அல்லது அசைவமா என்ற கேள்வி இருப்பது இல்லை. ஆனால், தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியதில் இருந்து முட்டை சைவமா, அசைவமா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், பெரும்பாலான மக்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட மாட்டார்கள்.

முட்டை சைவம் என்று பலர் நம்புகிறார்கள். எனவே, சில சைவ உணவு பிரியர்கள் தங்கள் உணவில் எடுத்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், சில மக்கள் முட்டைகளை அசைவம் என்று சொல்கிறார்கள். ஏனெனில் முட்டைகளில் இருந்துதான் கோழி குஞ்சுகள் வெளிவருகிறது. எனவே, முட்டை ஒரு விதத்தில் அசைவம் என்று நினைக்கிறார்கள்.

ALSO READ: Health Tips: நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா..? இந்த விஷயத்தை பாலோ பண்ணாலே போதும்!

அந்தவகையில் இன்று நாம் சாப்பிடும் உணவான முட்டை சைவமா அல்லது அசைவமா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். முட்டை என்பது சைவம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளன. பொதுவாக முட்டை என்பது மூன்று மூலக்கூறுகளால் உருவானது. அதன்படி, ஓடு, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு ஆகும். ஆராய்ச்சியின் படி, முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் மட்டுமே நிறைந்துள்ளது. இதில், ஒரு உயிர் தோன்றுவதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் கிடையாது. எனவே, முட்டையின் வெள்ளைக்கரு தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சைவ உணவாகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஜிம்முக்கு செல்லும் புரட்டாசி மாதத்தில் விரதம் எடுத்துக்கொள்ளும் நபராக இருந்தால், புரதத்திற்காக தாராளமாக முட்டையில் வெள்ளைக்கருவை எடுத்துக்கொள்ளலாம்.

முட்டை மஞ்சள் கரு:

முட்டையின் உள்ளே இருக்கும் மஞ்சள் பகுதி முட்டையில் மஞ்சள் கரு என்று அழைக்கப்படுகிறது. மேலும், இதில் அதிக அளவு புரதம், கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் உள்ளன. ஒரு கோழி முட்டையிடும் என்ற செயல் இயற்கையானது. கோழி பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு 1 அல்லது 1.5 நாட்களுக்கு ஒரு முறை முட்டையிடும். ஒரு கோழி எந்தவொரு சேவலுடன் தொடர்பு கொள்ளாமல் முட்டைகள் இட்டால், அது கருவுறாத முட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த முட்டைகளில் இருந்து குஞ்சு பொரிக்கவே முடியாது. எனவே, இவை சைவம்.

அதே நேரத்தில், ஒரு கோழி சேவலுடன் தொடர்பு கொண்டு முட்டையிடுகிறது என்று வைத்து கொள்வோம். அப்போது கோழி மற்றும் சேவலுடன் தொடர்பு கொண்ட பிறகு இடும் முட்டைகளில் கேமட் செல்கள் இருக்கும். இந்த கேமட் செல்கள் மூலம்தான் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் உருவாகின்றன. அப்போது இது அசைவமாகின்றன.

பிராய்லர் கோழி முட்டைகள் எந்த வகை..?

நாம் கடைகளில் வாங்கி சாப்பிடும் பிராய்லர்கள் கோழிகள் அனைத்தும் கருவுறாத தன்மைகள் கொண்டவை. எனவே, இவை அனைத்தும் சைவ முட்டைகளாகவே கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இத்தகைய முட்டைகள் சாப்பிடுவதற்கு சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன. பிராய்லர்கள் கோழிகள் முட்டையிடுவதற்கு முன்பு சேவலுடனும் தொடர்பு கொள்வது கிடையாது. இவை கறி மற்றும் முட்டைகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன. உங்களுக்கு புரதமும் வேண்டும் புரட்டாசி மாதம் என்று பார்த்தால், நீங்கள் கடைகளில் கிடைக்கும் முட்டைகளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் சாப்பிடுங்கள், ஏனெனில் மஞ்சள் பகுதியில் கொலஸ்ட்ரால் அதிகம்.

ALSO READ: Carrot Benefits: கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. சரும பாதுகாப்பு முதல் புற்று நோய் எதிர்ப்பு வரை!

நாட்டு கோழி முட்டைகள் அசைவம்:

நீங்கள் வீட்டில் நாட்டு கோழிகளை வளர்த்து முட்டையை பெறுகிறீர்கள் என்றால், இவை அனைத்தும் அசைவமாக கணக்கிட்டு கொள்ளலாம். ஏனெனில், இவை அனைத்து குஞ்சு பொரிக்கும் திறன் கொண்டவை. புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட விரும்பாதவராக இருந்தால், இந்த வகை நாட்டு கோழி முட்டைகளை எடுத்து கொள்ளாதீர்கள். இது உங்கள் விரதத்தை கெடுக்கும்.

Latest News