ஆரஞ்சு பழ தோல்கள் மூலம் சருமத்தை ஜொலிக்க வைக்கலாம்.. இதோ டிப்ஸ்!
Face Care Using Orange Peels: முக அழகை மேம்படுத்த நிறைய அழகு சாதன பொருட்கள் சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால் அவற்றின் மூலம் ஒவ்வாமை ஏற்படக்கூடும். எனவே வீட்டிலேயே கிடைக்கும் பொருளை வைத்து எளிமையாக அழகு சாதன பொருட்களை தயாரித்துக் கொள்ளலாம்.
பொதுவாக அனைவருக்கும் தன்னை அழகாக வைத்துக் கொள்வதில் அதிக விருப்பம் இருக்கும். தற்பொழுது சந்தையில் ஏராளமான அழகு சாதன பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் அதில் சில ஒவ்வாமை ஏற்படக்கூடும். எனவே இயற்கையான பொருட்களை வைத்து அழகு பொருட்களை தயாரித்துக் கொள்ளலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மூலமாகவே வீட்டிலேயே அழகு சாதன பொருட்களை செய்து கொள்ளலாம். அந்த வகையில் ஆரஞ்சு தோலை கொண்டு அற்புதமான பலன்களை பெறலாம். ஆரஞ்சு பழ தோலிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை அழகுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல வகையான சரும பிரச்சனைகளை ஆரஞ்சு தோலை கொண்டு குறைக்கலாம். இது அழுக்கு மற்றும் சுருக்கங்களை குறைத்து சருமத்தை பளபளப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
ஆரஞ்சு தோல்களை வைத்து பலவகையான அளவு சாதன பொருட்கள் தயாரிக்கலாம். ஆனந்த் தோல் மூலம் எப்படி அழகு சாதன பொருட்களை தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆரஞ்சு பழ தோலில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளது. அதில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத் தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் சருமத்தில் ஏற்படக்கூடிய தொற்றுகளை குறைப்பதற்கு உதவுகிறது.
எண்ணெய் தன்மை கொண்ட சருமமுடையவர்கள் இதை பயன்படுத்துவதன் மூலம் முகப்பரு வருவதை தவிர்க்கலாம். தினமும் ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் நிறம் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
ஸ்க்ரப்:
முகத்திற்கு ஸ்க்ரப் மிகவும் முக்கியமானது. ஸ்க்ரப்பிங் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், ஒயிட்ஹெட்ஸ் மற்றும் பிளாக்ஹெட்ஸ் ஆகியவை நீங்கும். ஆரஞ்சு தோலை நன்கு கழுவி வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் போட்டு பொடியாக நறுக்கவும். இதில் சிறிது சர்க்கரை, தேன், ஆலிவ் ஆயில் கலந்து முகத்தை ஸ்க்ரப் செய்தால் சருமத்தில் உள்ள தூசி, அழுக்குகள் போய் தெளிவாகவும், பளபளப்பாகவும் மாறும். சருமமும் மென்மையாக மாறும்.
Also Read: Celery: குளிர் காலத்தில் உடல்நல பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவும் செலரி!
ஆரஞ்சு பழத்தின் தோல் மற்றும் பாதாம் வைத்து ஸ்கிரப் செய்யலாம். இந்த ஸ்க்ரப் பயன்படுத்துவதன் மூலமாக சருமத்தில் இருக்கக்கூடிய நச்சுகளை வெளியேற்றுவதோடு சருமத்திற்கு புத்துணர்வும் அளிக்கிறது. ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். பாதாம் பருப்புகளையும் பொடியாக்கி கொள்ள வேண்டும். சிறிது ஆரஞ்சு பழ தோல் பொடி சிறிது பாதாம் பருப்பு பொடி ஆகியவற்றை சரி பங்காக எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக முகம் பொலிவு பெறும்
ஃபேஸ் பேக்குகள்:
ஆரஞ்சு தோலை காய வைத்து அதை பொடியாக்கி பல வகையான ஃபேஸ் பேக்குகளை இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதால் சருமம் மிகவும் பொலிவாக இருக்கும். இந்த ஆரஞ்சு தோல் பொடியில் தக்காளி சாறு, தயிர்,பால், ஆலிவ் எண்ணெய், தேன் கலந்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். இந்தப் பேக்கை அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவினால் மென்மையான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.
ஆரஞ்சு தோல் பொடி உடன் தயிரை சேர்த்து முகத்தில் தடவினால் அற்புதமான சருமம் கிடைக்கும். கன்னங்கள் இருக்கக் கூடிய சுருக்கங்கள் மற்றும் கோடுகளை போக்குவதற்கு இந்த ஃபேஸ் பேக் மிகவும் உதவுகிறது. சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Also Read: மாதுளை இலைகளிலும் இத்தனை நன்மைகள் இருக்கா?
டோனர்:
ஆரஞ்சு தோலைப் பயன்படுத்தியும் டோனரைத் தயாரிக்கலாம். இந்த டோனர் மூலம் முகம் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் மாறும். ஆரஞ்சு பழத்தோலை சுத்தமாக கழுவி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்தாலும் அல்லது டோனராகப் பயன்படுத்தினாலும், புள்ளிகள், சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)