உங்களுக்கு தைராய்டு இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! - Tamil News | | TV9 Tamil

உங்களுக்கு தைராய்டு இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

Updated On: 

13 May 2024 16:38 PM

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1 / 8நவீன

நவீன காலத்தில் பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றாக தைராய்டு உள்ளது. ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் என இரண்டு உள்ளன.

2 / 8

இந்த தைராய்டால் உடல் எடை திடீரென அதிகரிப்பது, குறைவது, கவலை உணர்வு, சோர்வு, அதிகமான தூக்கம், மந்த உணர்வு, முடி உதிர்வு, தசை பலவீனம், மாதவிடாய் சூழற்சி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

3 / 8

எனவே, தையராய்டு பிரச்னை இருப்பவர்கள் உணவுகளை பார்த்து சாப்பிட வேண்டும். அதாவது, மைதான சார்ந்த உணவுகள், சர்க்கரை, ஃபாஸ்ட் புட் இவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லுது. இது உங்களுடைய உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

4 / 8

தைராய்டு உள்ளவர்கள் சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கம், காய்கறிகள், புரதம், தானியங்கள் சேர்த்து கொள்வதன் மூலம் தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

5 / 8

அதேபோல, கேழ்வரகு, கம்பு, கோதுமை, கொள்ளு போன்றவை எடுத்து கொள்ள வேண்டும். மைதாவை அறவை தவிர்க்க வேண்டும். கேழ்வரகு, கம்பை குழாக குடிக்கலாம்.

6 / 8

மேலும், காபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக ராகி மால்ட் எடுத்துக் கொள்ளலாம். இனிப்பு சுவை தேவையென்றால் நாட்டு சர்க்கரை அல்லது கற்பட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

7 / 8

பழங்களை ஜூஸாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். எந்த பழமாக இருந்தாலும் அப்படியே சாப்பிட வேண்டும். காய்கறிகளையும் எண்ணெய் சேர்க்காமல், அப்படியே வெகவைத்து சாப்பிட்டால் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.

8 / 8

இருப்பினும், தைராய்டு இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகி உங்களுக்கு ஏற்றவாறு என்னென் சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version