5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Exclusive: இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறதா? இந்த பிரச்சனைகள் உங்களை ஆபத்தில் தள்ளும் என டாக்டர் எச்சரிக்கை!

Diabetes: இரத்தத்தில் சர்க்கரையில் அளவு அதிகரிக்கும் போது, சர்க்கரை நோயானது பக்கவாதம், இதய நோய், கண் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்தவகையில் சர்க்கரை நோய் நிபுணரான டாக்டர் சரவணன், சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள், அதன் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் பரிசோதனைகள் குறித்து நமக்கு தெரிவித்தார். அதை பற்றி நாம் இங்கு தெரிந்து தெரிவிக்கின்றோம்.

Exclusive: இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறதா? இந்த பிரச்சனைகள் உங்களை ஆபத்தில் தள்ளும் என டாக்டர் எச்சரிக்கை!
சர்க்கரை நோய்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 21 Sep 2024 17:32 PM

தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது பலருக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் மட்டும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை நோயை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது ஆபத்தில் கொண்டு முடியும். இரத்தத்தில் சர்க்கரையில் அளவு அதிகரிக்கும் போது, சர்க்கரை நோயானது பக்கவாதம், இதய நோய், கண் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்தவகையில் சர்க்கரை நோய் நிபுணரான டாக்டர் சரவணன், சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள், அதன் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் பரிசோதனைகள் குறித்து எங்களுக்கு தெரிவித்தார். அதை பற்றி நாங்கள் உங்களுக்கு இங்கு தெரிவிக்கின்றோம்.

ALSO READ: Exclusive: சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிடக்கூடாது..? டாக்டர் அட்வைஸ்!

கண்:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக கண்பார்வை தொடர்ந்து குறைந்து, கண் முழுமையாக தெரியாமல் போக வாய்ப்புகள் உண்டு. கண்களில் கண் பார்வை குறைதல், கண்களில் இருள் திரை வந்து போதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்படி தோன்றினால் ஆப்தால்மாஸ்கோபி பரிசோதனை, ஆப்தால்மாஸ்கோபி FFA பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

சிறுநீரகம்:

சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது சிறுநீரகமும் பாதிக்கபடலாம். இதற்கான அறிகுறிகள் கால், கை, வயிறு, முகம் வீக்கம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், நாள் ஒன்றுக்கு 400 மிலிட்டருக்கும் குறைவாக சிறுநீர் போதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இப்படியான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உடனடியாக சிறுநீர் புரதப்பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, (யூரியா, கிரியட்டினின் முழு வயிறு பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டும் சிகிச்சை பெற்றுகொள்வது நல்லது.

நரம்பு மண்டலம்:

உங்கள் உடலில் அதிகளவில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது நரம்பு மண்டலம் பாதிக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இதன் அறிகுறியாக உங்கள் கால் எரிச்சல், மரத்து போதல், ஊசி போல் குத்தல், பாத வெடிப்பு, ஆணிக்கால் போன்றவை, விரல்கள் உருமாறிய நிலை, இரவில் தூக்கமின்மை தோன்றும். இப்படியான நிலைகளை நீங்கள் சந்தித்தால் உடனடியாக மோனோ பிலமெண்ட் பரிசோதனை, பயோதிசியோமீட்டர் என்னும் நரம்பு பரிசோதனை செய்து மருத்துவரிடம் சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

இதயம்:

உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு போன்ற இருதய பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அப்போது உங்களுக்கு இடதுபுற மார்பு வலி, வியர்த்து போதல், மார்பு அழுத்தம், மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அந்த நேட்ரத்தில் நீங்கள் பரிசோதனைகள் இரத்த அழுத்தம் (BP), கொலஸ்ட்ரால், (LIPID PROFILE) இ.சி.ஜி (ECG), எகோ (ECHO) போன்ற பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

மூளை:

சர்க்கரை நோயாளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையில் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு கால், காலில் உணர்வு குறைத, கை, கால் செயலிழப்பு ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக CT ஸ்கேன் செய்து மருத்துவரிடம் சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

ALSO READ: சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது..!

இரத்தக்குழாய்:

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரையானது இரத்த குழாயில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன்போது காலில் ஆறாத புண், வியர்வை சுரக்கும் தன்மை குறைவு, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைதல் (ஆண்மை குறைவு), நரம்பு பாதிப்பின் அறிகுறிகள் தோன்றும். அப்போது டாப்ளர் பரிசோதனைகள் (DOPPLER), டயூப்லெக்ஸ் (DUPLEX) பினைல் டாப்ளர் (PENILE DOPPLER) (ஆண்மை குறைவிற்காக) ஆகிய சோதனை செய்து சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

உடலில் இருக்கும் சர்க்கரை நோய் என்பது ஒரு ஆபத்தான நாள்பட்ட நோயாகும். இது உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் நோயாளிகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், பெரிய ஆபத்தில் கொண்டு செல்லும்.

Latest News