5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Exclusive: மதிய உணவாக சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்..? டாக்டர் கொடுத்த டிப்ஸ்!

Diabetes Care: மாவுச்சத்து இல்லாத காய்கறிகளில் கீரை, ப்ரோக்கோலி, வெள்ளரிகள், மிளகு மற்றும் தக்காளி போன்றவைகளில் உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இந்த வகை காய்கறிகளில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதனால் இரத்த குளுக்கோஸ் அதிகரிக்காமல் தடுக்கிறது. மேலும், இவை குறைந்த கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.

Exclusive: மதிய உணவாக சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்..? டாக்டர் கொடுத்த டிப்ஸ்!
சர்க்கரை நோய் (Image: fcafotodigital/E+/Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 28 Sep 2024 12:48 PM

ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றொன்று சரியாக சாப்பிடாமல் இருப்பது. ஆரோக்கியமான சாப்பாட்டை எடுக்காமல் இருப்பது கூட சர்க்கரை நோயை உண்டாக்கும். இந்த இரண்டு பிரச்சனைகளே இன்றைய இளைஞர்களிடம் அதிகம் காணப்பட்டு, சர்க்கரை நோயை ஏற்படுத்துகின்றன. சர்க்கரை நோய் வந்த பிறகும், சிலர் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் செலுத்துவது கிடையாது. இது இவர்களுக்கு பின் நாளில் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

சர்க்கரை நோயாளிகள் மதிய வேளையில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுவது என்று தெரியவில்லை. அந்தவகையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மதிய உணவாக என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று சர்க்கரை நோய் நிபுணரான டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். அதை பற்றி நாங்கள் உங்களுக்கு இங்கு தெரிவிக்கின்றோம்.

ALSO READ: On This Day in 2018: வலியுடன் கடைசி வரை போராடிய கேதர் ஜாதவ்.. 6 ஆண்டுக்குமுன் இதே நாளில் இந்திய அணி ஆசிய சாம்பியன்!

மதிய உணவாக என்ன சாப்பிடலாம்..?

சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக சாதம், கீரை, காய்கறிகள், ரசம், மோர், சிக்கன் 50 கிராம், குறைந்த எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஒரு துண்டு மீன், முட்டையில் வெள்ளைக்கரு (முட்டையை மாதம் இருமுறை எடுத்துக்கொள்வது போதுமானது) ஆகியவற்றை எடுத்துகொள்ளலாம். இது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் தடுத்து, சம அளவில் பராமரிக்க உதவி செய்யும்.

சாப்பாட்டுடன் சைடிஸாக என்ன சாப்பிடலாம்..?

சாப்பாட்டுடன் உங்களுக்கு சைடிஸாக ஏதாவது வேண்டுமென்றால் முட்டைக்கோஸ், அவரைக்காய், முருங்கைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, பாகற்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், கொத்தவரங்காய், சௌ சௌ, புடலங்காய், காலி பிளவர், வெண்டைக்காய், கீரை வகைகள், கோவைக்காய், வெள்ளை பூசணி போன்ற காய்கறி வகைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்ற எடுத்துக்கொள்ளலாமே தவிர, வாழைக்காயை உங்களிடம் இருந்து ஒதுக்கி வைப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் மதிய உணவில் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:

சர்க்கரை நோயாளிகள் மதிய உணவை எடுத்துக்கொள்ளும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவு பொருட்களை தவிர்ப்பது உங்களது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அந்தவகையில் நீங்கள் மதிய உணவின்போது தயிர், கருனை, உருளை, சேணை கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், பிரிஞ்சி, பிரியாணி, அப்பளம், ஊறுகாய், வாழைக்காய் போன்ற உணவு பொருட்களை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு பொருட்கள்:

உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்க பாகற்காய் மிகவும் நன்மை பயக்கும். இதன் காரணமாக மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பாகற்காய் சாப்பிட வழியுறுத்துகிறார்கள்.

மாவுச்சத்து இல்லாத காய்கறிகளில் கீரை, ப்ரோக்கோலி, வெள்ளரிகள், மிளகு மற்றும் தக்காளி போன்றவைகளில் உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இந்த வகை காய்கறிகளில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதனால் இரத்த குளுக்கோஸ் அதிகரிக்காமல் தடுக்கிறது. மேலும், இவை குறைந்த கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. இவை மேலும் எடையை கட்டுப்படுத்த உதவி செய்கிறது.

ALSO READ: Food Recipes: புரட்டாசி சனிக்கிழமை விரதமா..? இந்த முறையில் பாயாசம் செய்து விரதம் விடுங்க!

உங்கள் உணவில் மீன், பீன்ஸ் மற்றும் பருப்பு போன்ற புரத உணவுகளை நீங்கள் சேர்க்கலாம். இந்த புரத உணவுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இவற்றில் புரதம் உங்களை அதிகமாக சாப்பிடுவதை தடுத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் மக்கள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சுரைக்காய் போன்ற காய்கறிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

உடற்பயிற்சி

சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியையும் செய்ய மறக்காதீர்கள். உடற்பயிற்சியும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். அதிக உடற்பயிற்சி செய்யாவிட்டால், தினமும் அரை மணி நேரம் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Latest News