Exclusive: மழைக்காலத்தில் ஆஸ்துமா இவ்வளவு ஆபத்தானதா..? ஹோமியோபதி டாக்டர் ரெஹானா விளக்கம்! - Tamil News | Exclusive: Homeopathy Dr. Rehana about Advantages of Homeopathy for Asthma | TV9 Tamil

Exclusive: மழைக்காலத்தில் ஆஸ்துமா இவ்வளவு ஆபத்தானதா..? ஹோமியோபதி டாக்டர் ரெஹானா விளக்கம்!

Updated On: 

05 Oct 2024 19:21 PM

Asthma: ஆஸ்துமாவை ஹோமியோபதி மருத்துவ முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம், மழைக் காலத்தில் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களை தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது உள்ளிட்ட சில கேள்விகளுக்கு பாலவாக்கத்தில் உள்ள  டாக்டர். ரெஹானா ஹோமோ கிளினிக் ஹோமியோபதி மருத்துவர் ரெஹானா டிவி9 தமிழ் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அவை பின்வருமாறு.. 

Exclusive: மழைக்காலத்தில் ஆஸ்துமா இவ்வளவு ஆபத்தானதா..? ஹோமியோபதி டாக்டர் ரெஹானா விளக்கம்!

ஆஸ்துமா (Image: GETTY)

Follow Us On

ஆஸ்துமா இன்னும் உலகளவில் தீவிர பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்நோய் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆஸ்துமா ஒரு ஆபத்தான நோயாகும். இது சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், மரணத்தை கூட ஏற்படுத்தும். பெரும்பாலான நேரங்களில், ஆஸ்துமாவின் அறிகுறிகள் பற்றி மக்கள் அறிந்து கொள்வது கிடையாது. இது ஒரு சாதாரண இருமல் அல்லது சுவாச பிரச்சனை என்று எளிதாக கடந்து விடுகின்றனர். இதன் காரணமாக, இந்நோய் தொடர்ந்து அதிகரித்து ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனை தீவிரமடைந்த பிறகே, மக்கள் சிகிச்சைக்காக மருத்துவரை தொடர்பு கொள்கின்றனர்.

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது. இந்தநிலையில், ஆஸ்துமாவை ஹோமியோபதி மருத்துவ முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம், மழைக் காலத்தில் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களை தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது உள்ளிட்ட சில கேள்விகளுக்கு பாலவாக்கத்தில் உள்ள  டாக்டர். ரெஹானா ஹோமோ கிளினிக்  நிறுவனரும், ஹோமியோபதி மருத்துவருமான ரெஹானா டிவி9 தமிழ் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அவை பின்வருமாறு..

டிவி9-ன் கேள்விகளும் – டாக்டரின் பதில்களும்..

ஆஸ்துமா என்றால் என்ன?

ஆஸ்துமா ஒரு நுரையீரல் நோய். இது நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கொண்டு செல்லும் காற்றுப்பாதைகளை பாதிக்கிறது. உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், உங்கள் சுவாசப்பாதைகள் சில சமயங்களில் வீக்கமடைந்து குறுகலாம். இது நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் காற்றுப்பாதைகளில் இருந்து காற்று வெளியேறுவதை கடினமாக்குகிறது.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன..?

  • சுவாசிப்பதில் சிரமம்
  • மார்பு இறுக்கம் போன்ற உணர்வு
  • சளியுடன் இருமல்
  • தூக்கத்தின் போது மூச்சுத்திணறல்

ஹோமியோபதி ஆஸ்துமாவுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஹோமியோபதி குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கிறது. அதன்படி, ஹோமியோபதி மருத்துவ முறையில் ஆஸ்துமா தாக்குதல்களின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை குறைப்பதன் மூலம் அவற்றைத் தூண்டும் காரணிகளைக் குறைக்கலாம். ஆர்சனிகம் ஆல்பம் (Arsenicum Album) மற்றும் நாட்ரம் சல்பூரிகம் (Natrum Sulphuricum) போன்ற மருந்துகள் சுவாச பிரச்சனைகளை போக்கவும், சுவாசக் குழாயில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

ஆஸ்துமாவுக்கு ஹோமியோபதி மருந்தின் நன்மைகள் என்ன?

ஹோமியோபதியின் முதன்மையான நன்மைகளில் ஒன்று, இது வழக்கமான ஆஸ்துமா சிகிச்சைகளுக்கு ஊசிகள் இல்லாத மாற்று வழியை தரும். ஹோமியோபதி பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு சிறந்த தீர்வை தரும் இன்ஹேலர்கள் மற்றும் மருந்துகளின் பயன்பாட்டை தருகிறது. ஹோமியோபதி மருத்துவம் நீண்ட கால பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது மற்றும் ஆஸ்துமா கட்டுப்படுத்தும் முழுமையான அணுகுமுறையைத் தேடும் நபர்களுக்கு அவை சிறந்தவை. கூடுதலாக, ஹோமியோபதி ஆஸ்துமாவை மட்டும் கட்டுப்படுத்தாமல், ஆஸ்துமாவை தூண்டும் காரணிகளையும், அதன் அறிகுறிகளை நிவர்த்தி செய்யும் சிகிச்சையை தருகிறது.

ஆஸ்துமா, சிஓபிடி, ஃபைப்ரோஸிஸ் உள்ளிட்ட அனைத்து நுரையீரல் நோய்களுக்கு தீர்வு என்ன..?

ஹோமியோபதி ஆஸ்துமாவுக்கு மட்டுமல்ல, நாள்பட்ட நுரையீரல் நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) மற்றும் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் ஆகியவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும். வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் சுவாச செயல்பாட்டை ஊக்குவிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீண்டகால நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஹோமியோபதி நீண்டகால தீர்வை வழங்குகிறது. ஹோமியோபதியில் ஆண்டிமோனியம் டார்டாரிகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மருந்துகள் பொதுவாக மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் மற்றும் தொடர் இருமல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கப் பயன்படுகின்றன.

மழைக்காலம் வந்துடன் ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் சிரமப்படுகிறார்கள், அதற்கு என்ன காரணம்..? ஹோமியோபதி முறைப்படி அவற்றை எப்படி சரி செய்யலாம்..?

ஆஸ்துமா அல்லது பிற சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, மழைக்காலம் குறிப்பாக சவாலாக இருக்கும். திடீரென அதிகரிக்கும் ஈரப்பதம், காற்று மாடு மற்றும் திடீர் வெப்பநிலை மாற்றங்கள் சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கின்றன. இந்த நேரத்தில், ஹோமியோபதி மருத்துவம் நுரையீரலில் ஏற்படும் வெளிப்புற எரிச்சல்களை குறைக்க உதவும். மேலும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல், ஒவ்வாமைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சுவாசக் குழாயில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்தல் போன்றவைகளுக்கு பல்சட்டிலா மற்றும் பிரையோனியா போன்ற ஹோமியோபதி மருந்துகளால் திறம்பட செய்ய முடியும். அதிக ஈரப்பதம் உள்ள நாட்களில் ஆஸ்துமா நோயாளிகள் வெளியே செல்வதை குறைத்து கொண்டு, முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்துகிறோம்.

மருத்துவர் விவரம்:

டாக்டர். ஐ. ரெஹானா பர்வீன் BHMS
(ஹோமியோபதி மருத்துவர்)
டாக்டர். ரெஹானா ஹோமோ கிளினிக்,
விஜிபி லேஅவுட்,
பாலவாக்கம்,
சென்னை –  600041

நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
Exit mobile version