Cholesterol : கொலஸ்ட்ரால் சர்ரென குறையும்.. சூப்பரான 7 உணவுகள்
Fat Burning Foods: உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் என்பது நல்ல கொலஸ்ட்ரால். இது நமது உடலில் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் உடலில் அதிகமாக இருப்பதால்தான் கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ராலை நாம் சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும்.
கொலஸ்ட்ரால்: கொலஸ்ட்ரால் என்பதை பார்த்து நாம் முதலில் பயப்பட தேவையில்லை. கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும் கொழுப்பு நம் உடலில் இயற்கையாகவே உருவாக கூடிய ஒரு பொருள். கொலஸ்ட்ரால் பொறுத்தவரை இரண்டு விதங்கள் உள்ளது. ஒன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL – Low density lipoproteins). மற்றொன்று உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL- High density lipoproteins). உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் என்பது நல்ல கொலஸ்ட்ரால். இது நமது உடலில் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் உடலில் அதிகமாக இருப்பதால்தான் கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ராலை நாம் சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும். இந்தநிலையில் கொலஸ்ராலை குறைக்க என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று இங்கே பார்ப்போம்.
பச்சை காய்கறிகள்:
பச்சை காய்கறிகளில் அதிகளவில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் உள்ளது. கீரை வகைகள், முட்டைகோஸ் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதால் கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், இரத்த குழாய்களில் படியும் கொழுப்புகளை தங்கவிடாமல் செய்கிறது.இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் கொழுப்பு குறைவாக உள்ளது. இவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வைட்டமின்கள், தாதுகள் மற்றும் நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன.
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை.
பாதாம்:
பாதாம் உணவில் ஃபிளாவனாய்டுகள் என்ற முக்கிய பொருள் ஒன்று உள்ளது. இது கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கும் என்றும், நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்க செய்யவும் பயன்படுவதாகவும் பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாதாமில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொழுப்பிம் அளவைக் குறைக்கிறது.
எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள்:
எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை நீக்குகிறது. எனவே ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை வள்ளி கிழங்கு:
சர்க்கரை வள்ளி கிழங்கை நமது வாழ்க்கை முறையில் இருந்து நீக்கப்பட்டது என்றே சொல்லலாம். நவீன வாழ்க்கைக்கு ஏற்ப இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை நாம் மறந்துவிட்டோம். இந்த சக்கரை வள்ளி கிழங்கானது இரத்த குழாயில் படியும் கெட்ட கொழுப்பை தேங்க விடாமல், நல்ல கொழுப்பையும் அதிகரிக்க செய்கிறது.
பூண்டு:
பூண்டானது கொழுப்பின் எதிரி என்றே சொல்லலாம். ஒவ்வொரு முறையும் பூண்டை உட்கொள்ளும்போதும் கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பூண்டு நன்மை தருகிறது. பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும்.
மீன்கள்:
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் கெட்ட கொழுப்பை உடலில் சேர்வதை தவிர்க்கிறது. எனவே இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மீனை உணவாக எடுத்துக்கொள்வது அவசியம்.
ஆப்பிள்:
ஆப்பிள்களில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. எனவே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பு அளவை எளிதில் குறைக்கலாம்.